மருத்துவ மேற்படிப்பு தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு


மருத்துவ மேற்படிப்பு தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு | மருத்துவ மேற்படிப்புக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்டி, எம்எஸ் பட்டமேற்படிப்பு மற்றும் பட்டய மேற்படிப்புக்கு (டிப்ளமோ) சுமார் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் 8 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET - நீட்) தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது. தேசிய தேர்வுகள் வாரியம் நடத்தும் 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் கடந்த மாதம் 7-ம் தேதி நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 23-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வில் தகுதிப் பெற்றவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. இதைத் தொடர்ந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது.

Comments