மக்கள் நீதி மய்யம் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பட்டியல்

மக்கள் நீதி மய்யம் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பட்டியல் கமல்ஹாசன் வெளியிட்டார் | மக்கள் நீதி மய்யம் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பட்டியலை கமல்ஹாசன் நேற்று வெளியிட்டுள்ளார். உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், அக்கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:- ஆ.அருணாசலம் (விவசாயி, வக்கீல்), ஏ.ஜி.மவுர்யா (ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி), பாரதி கிருஷ்ணகுமார் (எழுத்தாளர், இயக்குனர்), சி.ராஜசேகரன் (வக்கீல்), சி.கே.குமரவேல் (தொழிலதிபர்), கமீலா நாசர் (திரைப்பட தயாரிப்பாளர், குடும்பநல ஆலோசகர்), கு.ஞானசம்பந்தன் (பேராசிரியர், எழுத்தாளர், பேச்சாளர்), பா.ராஜநாராயணன் (எழுத்தாளர், பத்திரிகையாளர்), ஆர்.ரங்கராஜன் (ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி), ஆர்.ஆர்.சிவராம் (தொழிலதிபர்), எஸ்.மூர்த்தி (ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிர்வாகி), சவுரிராஜன் (தொழிலதிபர்), ஸ்ரீப்ரியா ராஜ்குமார் (நடிகை, திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர்), சுகா (எழுத்தாளர், திரைப்பட இயக்குனர்), ஆர்.தங்கவேலு (கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் அகில இந்திய பொறுப்பாளர்). இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதேபோல கமல்ஹாசன் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், "மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தை எழுச்சியுடனும், கட்டுப்பாட்டுடனும் வெற்றி பெறச்செய்த மதுரை மக்கள், நற்பணி இயக்கத்தினர், போலீசார், அரசு துறை அதிகாரிகள் என அனைத்து தரப்பினருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மாநாட்டு நிகழ்வுகளை தொலைவில் இருந்து பார்த்துவிட்டு, வாழ்த்திய உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் என் நன்றியும், வணக்கமும்" என்று கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்த பின்னர் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள முதல் அறிக்கை இதுவாகும்.

Comments