தேர்வு நோக்கில் மற்ற பாடங்களைப் படிப்பதற்கும் தமிழ் பாடத்தைப் படிப்பதற்கும் அடிப்படையில் சில வேறுபாடுகள் உண்டு. தமிழ்ப் பாடத்தில் பிழைகளால் மதிப்பெண்களை இழக்க நேரிடும். முதன்மையான ஒற்றுப் பிழைகள் அதிகம் இருந்தால் மதிப்பெண் நிச்சயம் குறையும். 'தினை/திணை' போன்ற பொருள் மாறும் மயங்கொலிப் பிழைகள் விடைத்தாள் திருத்துபவருக்குப் பளிச்செனத் தெரியும். 'ஒருமை/ பன்மை' குறித்த கருத்துப் பிழைகளும் இவற்றில் அடங்கும். இந்தப் பிழைகள் குறித்து இரண்டாம் தாளில் தனிப் பாடப் பகுதியே உள்ளது. இப்பகுதியை நன்கு புரிந்துகொண்டு படிப்பதுடன் அவற்றை விடைத்தாளில் கவனமாகப் பின்பற்றினால், சிறு பிழைகளால் நேரும் ஓரிரு மதிப்பெண் இழப்பைத் தவிர்க்கலாம்.பாடக்குறிப்புகளை வழங்கியவர் வெ.ராமகிருஷ்ணன், முதுகலைத் தமிழாசிரியர், அரியலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி. | DOWNLOAD
No comments:
Post a Comment