யு.பி.எஸ்.சி. முதன்மை தேர்வில் வெற்றிபெற்ற தமிழக மாணவர்களுக்கு மாதிரி ஆளுமை தேர்வு பயிற்சி அரசு அறிவிப்பு

யு.பி.எஸ்.சி. முதன்மை தேர்வில் வெற்றிபெற்ற தமிழக மாணவர்களுக்கு மாதிரி ஆளுமை தேர்வு பயிற்சி அரசு அறிவிப்பு | தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடந்த 2017-ம் ஆண்டு நடந்த யு.பி.எஸ்.சி. முதன்மை தேர்வில் வெற்றிபெற்ற தமிழகத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள், 3 புகைப்படத்துடன் மத்திய தேர்வாணையக் குழு முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகலை பூர்த்தி செய்து, சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். www.civilservicecoaching.com எனும் இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். ஆளுமைத் தேர்வுக்கு செல்லும் தகுதி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மூத்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், கல்லூரி பேராசிரியர்கள் மூலம் மாதிரி ஆளுமைத் தேர்வும், சிறப்பு வகுப்புகளும், நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதிரி ஆளுமைத் தேர்வும், பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. ஆளுமைத் தேர்வுக்கு, டெல்லி செல்லும் மாணவ-மாணவிகளுக்கு பயணப்படியாக ரூ.2 ஆயிரமும், தமிழ்நாடு இல்லத்தில் 10 நாட்கள் தங்கி ஆளுமைத் தேர்வில் கலந்துகொள்ள ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Comments