பொது அறிவு குவியல் | குறுநில மன்னர்கள் | ஊட்டச்சத்துகள்

குறுநில மன்னர்கள்
* சங்க கால குறுநில மன்னர்கள் வேளிர் எனப்பட்டனர்.
* முல்லைக்கு தேர் கொடுத்தவன் பறம்பு மன்னன் பாரி.
* அவ்வைக்கு நெல்லிக்கனி ஈந்தவன் குதிரைமலை மன்னன் அதியமான்.
* மயிலுக்குப் போர்வை தந்தவன் பழனிமலை மன்னன் பேகன்.
* பொதிய மலையை ஆண்ட அரசன் நள்ளி.
* கோடை மலையை ஆண்ட அரசன் கடிய நெடுவேட்டுவன்.
* நன்னன்சேய்நன்னன் என்ற குறுநில மன்னன் மீது மலைபடுகடாம் பாடப்பட்டது.
* சிறுபாணாற்றுப்படை மன்னன் நல்லியக்கோடன் மீது பாடப்பட்டது.
* தொண்டைமான் இளந்திரையன் மீது பெரும்பாணாற்றுப்படை பாடப்பட்டது.
அதிபர் இங்கும், அங்கும்...அமெரிக்க அதிபருக்கும், இந்திய ஜனாதிபதி பதவிக்கும் உள்ள சில வரையறைகள்...
* இந்திய குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள்தான்.
* ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்திய குடியரசுத் தலைவர் ஆகலாம். ஆனால் அமெரிக்காவில் ஒருவர் 2 முறைக்கு மேல் அதிபர் பதிவிக்கு போட்டியிட முடியாது. இந்த விதிமுறைகளுக்கு முன்பு ரூஸ்வெல்ட் 4 முறை அமெரிக்க அதிபராக இருந்துள்ளார்.
* இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு இந்திய குடியுரிமை பெற்றிருந்தால் போதும். அமெரிக்காவில், அங்கு பிறந்திருந்தால் மட்டுமே அதிபராக முடியும்.
* இந்தியாவில் ராஜேந்திர பிரசாத் மட்டும் இரண்டு முறை குடியரசுத் தலைவர் பதவியை வகித்திருக்கிறார்.
ஊட்டச்சத்துகள்
* உணவிலுள்ள ஊட்டச்சத்துகள் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின் மற்றும் தாது உப்புகள்.
* கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு ஆகிய மூன்றும் பெரும் ஊட்டச்சத்துகள்.
* பெரும் ஊட்டச்சத்துகள் நமக்கு ஆற்றல் அளிக்கின்றன.
* ஹார்போஹைட்ரேட் விரைவாக ஆற்றல் தரும் பெரும் ஊட்டச்சத்து.
* புரதம் வளர்ச்சி தரும் பெரும் ஊட்டச்சத்து.
* புரதங்கள் அமினோ அமிலங்களால் ஆனவை.
* கொழுப்பு அதிக ஆற்றல் தரும் பெரும் ஊட்டச்சத்து.
* நுண் ஊட்டச்சத்துகள் நமக்கு நேரடியாக ஆற்றல் அளிப்பதில்லை.
* நுண் ஊட்டச்சத்துகள் நம் உடம்புக்கு மிகக்குறைந்த அளவிலேயே தேவைப்படுகின்றன.
* வைட்டமின்களும், தாது உப்புகளும் நுண் ஊட்டச்சத்துகள்.

Comments