புதிய தலைமை தேர்தல் கமிஷனராக ஓ.பி.ராவத் நியமனம் மத்திய அரசு அறிவிப்பு

புதிய தலைமை தேர்தல் கமிஷனராக ஓ.பி.ராவத் நியமனம் மத்திய அரசு அறிவிப்பு | ஏ.கே.ஜோதி ஓய்வு பெறுவதால், ஓ.பி.ராவத்தை புதிய தலைமை தேர்தல் கமிஷனராக மத்திய அரசு நியமித்து உள்ளது. இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக ஏ.கே.ஜோதியும், தேர்தல் கமிஷனர்களாக ஓம் பிரகாஷ் ராவத் (ஓ.பி.ராவத்), சுனில் அரோரா ஆகியோரும் இருந்து வந்தனர். ஏ.கே.ஜோதியின் பதவி காலம் முடிவடைவதால், அவர் இன்று (திங்கட்கிழமை) ஓய்வு பெறுகிறார். எனவே அவருக்கு பதிலாக, தேர்தல் கமிஷனர்களில் பதவிமூப்பு அடிப்படையில் ஓ.பி.ராவத்தை மத்திய அரசு புதிய தலைமை தேர்தல் கமிஷனராக நேற்று நியமித்தது. ஓ.பி.ராவத் தலைமை தேர்தல் கமிஷனர் ஆகிவிட்டதால், காலியான தேர்தல் கமிஷனர் பதவிக்கு முன்னாள் நிதித்துறை செயலாளரான அசோக் லாவாசா நியமிக்கப்பட்டு உள்ளார். இதுபற்றிய அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. புதிய தலைமை தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள ஓ.பி.ராவத், கடந்த 1953-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந் தேதி உத்தரபிரதேசத்தில் பிறந்தவர். மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்.பிரிவு அதிகாரியான இவர், 22-வது தலைமை தேர்தல் கமிஷனராக பணியாற்ற உள்ளார். ஓ.பி.ராவத் நாளை (23.01.2018) தலைமை தேர்தல் கமிஷனராக பதவி ஏற்க இருக்கிறார்.

Comments