தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் அரசு உத்தரவு

தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் அரசு உத்தரவு | தமிழக அரசின் தலைமைச் செயலாளர் (பொறுப்பு) கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதம் நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனர் ஆர்.செல்வராஜ், நில அளவை மற்றும் தீர்வுத்துறை இயக்குனராக மாற்றப்பட்டார். தமிழக அரசுப் பணியில் இருந்து மாற்றுப் பணிக்காக ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணியாற்றி வந்த கே.சீனிவாசன், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் தேர்வு கட்டுப்பாட்டாளர் வி.சோபனா, விடுமுறையில் இருந்து திரும்பியதை அடுத்து, மாநில மனித உரிமை ஆணையத்தின் செயலாளராக மாற்றப்பட்டார். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் முன்னாள் கமிஷனர் அதுல் ஆனந்த், சமூக பாதுகாப்பு திட்ட கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக கவர்னரின் முன்னாள் துணை செயலாளரும், கவர்னர் இல்ல செலவுக் கட்டுப்பாட்டாளருமான கே.வி.முரளிதரன், ஆதிதிராவிடர் நல இயக்குனரானார். சென்னை மெட்ரோ ரெயில் சட்ட அதிகாரி பி.முருகேஷ், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் துணைச் செயலாளராக மாற்றப்பட்டார். விடுமுறையில் இருந்து பணிக்குத் திரும்பியுள்ள எம்.ஆர்த்தி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments