-->

Thursday, January 11, 2018

சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியீடு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 64 பேர் தேர்ச்சி

சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியீடு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 64 பேர் தேர்ச்சி | சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 568 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 64 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நேர்முகத்தேர்வு அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்குகிறது. அகில இந்திய அளவில் மத்திய தேர்வாணையம் ஆண்டு தோறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான அகில இந்திய பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை நடத்துகிறது. அந்த வகையில் அதன்படி 985 பணிகளுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 6 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவு கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. முதல்நிலை தேர்வில் 13 ஆயிரத்து 350 பேர் தேர்ச்சி பெற்றனர். இதைத்தொடர்ந்து முதன்மை தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. நேற்று மாலை இதன் முடிவு வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் 2 ஆயிரத்து 568 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு நேர்முக தேர்வு டெல்லியில் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்குகிறது. சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சிவில் சர்வீசஸ் தேர்வுகள் உள்பட அனைத்து வகையான மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இது குறித்து மனிதநேய மையத்தின் பயிற்சி இயக்குனர் எம்.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட முதன்மை தேர்வில் மனித நேய பயிற்சி மையத்தில் படித்த 64 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் மாணவர்கள் 45 பேர். மாணவிகள் 19 பேர். முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக தொடர்ந்து நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் தேர்ச்சி பெற்ற அனைவரும் தங்களின் மார்பளவு புகைப்படம், எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் இன்று (வியாழக்கிழமை) முதல் மனிதநேய மையத்தில் நேரிலோ அல்லது இணையதளத்தின் ( www.saidais.com) வாயிலாகவோ பதிவு செய்து கொள்ளலாம். நேர்முக தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் அனைவருக்கும் அனைத்து வசதிகளும் இலவசமாக செய்து தரப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.