-->

Thursday, January 4, 2018

பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் 6-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் | பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 6-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்கத் தவறி தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அரசு தேர்வுத் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு அவர்கள் நேரில் சென்று, ஜனவரி 4 முதல் 6-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சேவை மையங்களின் விவரத்தை அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) தெரிந்துகொள்ளலாம். தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1,000-ம், ஆன்லைன் பதிவு கட்டணமாக ரூ.50-ம் செலுத்த வேண்டும். இந்த கட்டணங்களை சேவை மையத்திலேயே பணமாக செலுத்த வேண்டும். தனியார் பிரவுசிங் மையங்கள் மூலம் விண்ணப்பிக்கக் கூடாது. தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதுகுறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.