பிளஸ் 2 செய்முறைத் தேர்வை பிப். 13-க்குள் முடிக்க உத்தரவு.

பிளஸ் 2 செய்முறைத் தேர்வை பிப். 13-க்குள் முடிக்க வேண்டும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வை பிப்ரவரி 1 முதல் 13-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைகிறது. இதற்கான காலஅட்டவணை முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த ஆண்டு ஜுன் மாதமே வெளியிடப்பட்டுவிட்டது. பிளஸ் 2-வில் கணிதம், அறிவியல், கணினி அறிவியல் மற்றும் தொழில்கல்விப் பிரிவு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வுகள் உண்டு. இவற்றில் பெறப்படும் மதிப்பெண் பொதுத்தேர்வு முடிவில் சம்பந்தப்பட்ட பாடங்களுடன் சேர்க்கப்படும். பொதுத்தேர்வுக்கு இன்னும் ஒரு மாத காலமே இருப்பதால் தேர்வுக்கான ஆயத்தப்பணிகள் அரசுத்துறையில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பிளஸ் 2 செய்முறைத்தேர்வை பிப்ரவரி 1 முதல் 13-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் அதன் மதிப்பெண் பட்டியலைச் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் பிப்ரவரி 14-ம் தேதி ஒப்படைக்கவும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, செய்முறைத்தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகிறார் கள்.

Comments