இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு 17-ந்தேதி வெளியிடப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு 17-ந்தேதி வெளியிடப்படுகிறது | கடந்த 2017-ம் வருடம் ஜூன் மாதம் இடை நிலை ஆசிரியர் பயிற்சி தேர்வை, ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் எழுதினார்கள். அந்த தேர்வு முடிவை வருகிற 17-ந்தேதி அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சான்றிதழ் பெற்றுத் தெரிந்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 17-ந்தேதியே பெற்றுக்கொள்ளலாம். மாணவ - மாணவிகளில் விடைத்தாளின் நகல் பெற, விடைத்தாள்களை மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்க விரும்புவோர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து கொண்டு, அதனைப் பூர்த்தி செய்து, அவ்விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிட்டுள்ள கட்டணத்தொகையை கீழ்க்குறிப்பிட்ட நாட்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாகச் செலுத்தி ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. விடைத்தாளின் நகல் பெறப்பட்ட பின்னர் விருப்பமுள்ள தேர்வர்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய 22-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். | DOWNLOAD

Comments