இந்திய ரிசர்வ் வங்கி புதிய 10 ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிடுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி புதிய 10 ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிடுகிறது. இதுவரை 100 கோடி புதிய 10 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு உள்ளன. இந்த புதிய 10 ரூபாய் நோட்டுகள் பழுப்பு நிறத்தில் (சாக்லெட் நிறம்) இருக்கும். 123 மில்லி மீட்டர் நீளமும், 63 மில்லிமீட்டர் அகலமும் கொண்ட இந்த நோட்டின் முன்பகுதியில் மகாத்மா காந்தியின் உருவமும், பின்பக்கத்தில் கொனார்க் சூரிய கோவில், தூய்மை இந்தியா திட்டத்தின் சின்னம், வாசகம் ஆகியவையும் இடம் பெற்று இருக்கும். புதிய 10 ரூபாய் நோட்டின் மாதிரியை படத்தில் காணலாம். புதிய 10 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டாலும், ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் 10 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Comments