Skip to main content

Posts

Showing posts from January, 2018

ஊதியக் குழு முரண்பாடுகளை களைய விரைவில் குழு அமைக்க முதல்வர் உறுதி ஜாக்டோ ஜியோ கிரப் ஒருங்கிணைப்பாளர் தகவல்

​ ஊதியக் குழு முரண்பாடுகளை களைய விரைவில் குழு அமைக்க முதல்வர் உறுதி ஜாக்டோ ஜியோ கிரப் ஒருங்கிணைப்பாளர் தகவல் | அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 7-வது ஊதியக்குழு ஊதிய முரண்பாடுகளை களைய விரைவில் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி உறுதி அளித்ததாக ஜாக்டோ-ஜியோ கிரப் ஒருங்கிணைப்பாளர் சண்முகராஜன் தெரிவித்தார். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கிரப் சார்பில் சமீபத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அப்போது, முதல்வர் தங்களை அழைத்து பேச வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமியை ஜாக்டோ-ஜியோ கிரப் நிர்வாகிகள் ஒருங்கிமைப்பாளர் சண்முகராஜன் தலைமையில் நேற்று சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் சண்முகராஜன் கூறியதாவது: அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக்குழு ஊதிய முரண்பாடுகளை களைய குழு அமைக்கப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தோம். அப்போது, ஆளுநர் அறிவுரைப்படி பிப்ரவரி இறுதிக்குள் க

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் இன்று (31.01.2018) வெளியீடு

​ சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு | பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகள் இன்று (புதன்கிழமை) மாலை வெளியிடப்படுகின்றன. மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு பிப்ரவரி 2-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் இராம.சீனுவாசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த நவம்பரில் நடந்த இளங்கலை, முதுகலை படிப்புகள், தொழில்கல்வி படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகள் 31-ம் தேதி (இன்று) மாலை வெளியிடப்படுகின்றன. பின்வரும் இணையதள முகவரிகளில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். http://results.unom.ac.in/ , www.ideunom.ac.in , www.egovernance.unom.ac.in மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு பிப்ரவரி 2 முதல் 8-ம் தேதி வரை ஆன்லைனில் ( www.unom.ac.in ) விண்ணப்பிக்கலாம். பிரின்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை உரிய கட்டணத்துக்கான டிமாண்ட் டிராப்டுடன் பிப்ரவரி 9-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். | DOWNLOAD

5 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள பணியிடங்களை ஒழிக்க மத்திய அரசு முடிவு

​ 5 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள பணியிடங்களை ஒழிக்க மத்திய அரசு முடிவு | 5 ஆண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ள அனைத்து பணியிடங்களையும் ஒழிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான நடவடிக்கை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதற்கு சில அமைச்சகங்கள் பதில் அளித்தபோதிலும், வேறு சில அமைச்சகங்கள் உரிய பதில் அளிக்கவில்லை. அதனால், 5 ஆண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ள பணியிடங்களை அடையாளம் கண்டறிந்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு நிதி ஆலோசகர்களையும், அனைத்து அமைச்சகங்களின் இணை செயலாளர்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள பணியிடங்கள், ஆயிரக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

பொதுத்தேர்வில் தோல்வி அடையும் நிலையில் உள்ள மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் கொடுத்து அனுப்பினால் நடவடிக்கை ஆய்வாளர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு

​ பொதுத்தேர்வில் தோல்வி அடையும் நிலையில் உள்ள மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் கொடுத்து அனுப்பினால் நடவடிக்கை ஆய்வாளர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு | பொதுத்தேர்வில் தோல்வி அடையும் நிலையில் உள்ள சரியாக கல்வி கற்காத மாணவர்களை மாற்று சான்றிதழ் கொடுத்து அனுப்பினால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆய்வாளர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டார். பொதுத்தேர்வு தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பிளஸ்-1 வகுப்புக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளது. சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகத்தில் இயக்குனர் எஸ்.கண்ணப்பன் தலைமையில் மாவட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூட ஆய்வாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் இயக்குனர் எஸ்.கண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:- மார்ச் மாதம் தொடங்க உள்ள எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளை வழக்கம்போல நேர்மையான முறையில் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கண்காணிக்க வ

மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் பிப்ரவரி 15-ம் தேதி வெளியீடு

​ மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் பிப்ரவரி 15-ம் தேதி வெளியீடு | தேசிய தேர்வுகள் வாரியம் அறிவிப்பு | மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு நடந்த நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் பிப்ரவரி 15-ம் தேதி வெளியிடப்படுகிறது. நாடுமுழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்டி, எம்எஸ் பட்டமேற்படிப்பு மற்றும் பட்டய மேற்படிப்புக்கு (டிப்ளமோ) சுமார் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 8 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET - நீட்) தகுதி பெறுவர்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது. தேசிய தேர்வுகள் வாரியம் நடத்தும் 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த 7-ம் தேதி நடந்தது. நாடுமுழுவதும் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் இந்த தேர்வை எழுதினர். தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் 20 ஆயிரம் டாக்டர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர். இந்த தேர்வின் முடி

​​TNPSC GROUP 4 HALL TICKET DOWNLOAD | 9 ஆயிரம் பணி இடங்களுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்த குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

​​9 ஆயிரம் பணி இடங்களுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்த குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 9 ஆயிரத்து 351 பணிகளுக்கான குரூப்-4 தேர்வு அடுத்த மாதம்(பிப்ரவரி) 11-ந்தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது. 301 தாலுகா மையங்களில் நடைபெறும் இந்த தேர்வுக்கு 20 லட்சத்து 80 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு எழுத ஹால்டிக்கெட் அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளங்களில் ( www.tnpsc.ex-ams.net , www.tnpsexams.in ) வெளியிடப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்யும்போது விண்ணப்பம் நிராகரிக்கபட்ட காரணம் தெரிய வரும். சரியான முறையில் விண்ணப்பித்து, பணம் செலுத்தியும், ஹால்டிக்கெட் கிடைக்காதவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தியதற்கான செல்லான் நகலுடன் விண்ணப்பதாரர் பெயர், விண்ணப்ப பதிவு எண், தேர்வு கட்டண ரூபாய், செலுத்திய அஞ்சலக முகவரி அல்லது வங்கி, வங்கிக்கிளை அல்லது அஞ்சலக முகவரி, பணபரிமாற்ற ஐ.டி. மற்றும் தேதி ஆகியவற்றை தேர்வாணைய மின் அஞ்சல் முகவரிக்கு (contacttnpsc@gmail.com) பிப்ரவ

அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு

​ அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு | பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, நீட், ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு, மாதிரி தேர்வு நடத்த, தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் சேரவும், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிக்கவும், நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். சிறப்பு பயிற்சிதனியார் பள்ளிகளில், நுழைவு தேர்வுக்கு, ஒன்பதாம் வகுப்பு முதல், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் தரப்படுகின்றன. ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் கிடைப்பது இல்லை. இதையடுத்து, தமிழக அரசின் சார்பில், 412 மையங் களில், இலவச நீட் பயிற்சி அறிவிக்கப்பட்டது; 100 மையங்களில் மட்டுமே, பயிற்சி அளிக்கப்படுகிறது. வினாத்தாள்எனவே, மற்ற பள்ளிகளின் மாணவர்கள் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங்கில் சேர வசதியாக, அவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் இணைந்து, சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளனர். தனியார் பயிற்சி நிறுவனங் களிடம், மாதிரி வினாத்தாள்களை பெற்று, தங்கள் பள்ளி மாணவர்களுக்கு, பயிற்

TET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி - ஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

​ TET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி ஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி ஆணை வழங்கப்படாதவர்களுக்கான கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் அவர்களுக்கு பணி வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.தமிழகம் முழுவதும் கற்றல் குறைபாடுள்ள 1 லட்சம் மாணவர்களுக்கு, பிப்ரவரி 20ம் தேதி வரை சிறப்பு பயிற்சிவழங்கப்படும். தமிழக மாணவர்களுக்கு 'நீட்' தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை. இருப்பினும், மத்திய அரசின் நிலைப்பாட்டின்படி, மாணவர்கள் 'நீட்' தேர்வை எதிர்கொள்ள ஏற்கனவே 100 மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 312 மையங்கள் பிப்ரவரி 4ம் தேதிக்குள் திறக்கப்படும். பிளஸ் 2 தேர்வுக்கு பின், 2,000 மாணவர்களை தேர்வு செய்து, சென்னையில் உள்ள 4 கல்லூரிகளில் கூடுதல் கவனம் செலுத்தி'நீட்' தேர்வு பயிற்சி வழங்கப்படும். அம்மாணவர்கள் தங்கவும், உணவுக்கும் அரசு ஏற்பாடு செய்யும். வரும் காலங்களில், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வர

இந்திய அஞ்சல் துறை இணையதள வங்கி சேவை நாடு முழுவதும் மார்ச் மாதத்தில் அமல்படுத்த முடிவு

​ இந்திய அஞ்சல் துறை இணையதள வங்கி சேவை நாடு முழுவதும் மார்ச் மாதத்தில் அமல்படுத்த முடிவு | அஞ்சலக வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக இந்திய அஞ்சல் துறை தனது இணைய தள வங்கி சேவையை மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்த திட்ட மிட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறையின் கீழ் நாடு முழுவதும் 1 லட்சத்து 50 ஆயிரம் அஞ்சல் நிலையங்கள் இயங்குகின்றன. வங்கி கிளை கள் இல்லாத தொலைதூர குக் கிராமங்களில் கூட அஞ்சல் நிலையங்கள் உள்ளன. தபால் மற்றும் பார்சல் சேவை மட்டுமின்றி சேமிப்பு கணக்கு, ஆயுள் காப்பீடு போன்ற பல்வேறு சேவைகளை வழங்கும் அஞ்சல் துறை காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு வருகிறது. பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள் தங்களது சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம் வரை நிர்ணயித்துள்ளன. ஆனால், அஞ்சல் துறை யில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் வெறும் ரூ.50 இருப்புத் தொகை வைத்திருந்தால் போதும். காசோலை பயன்படுத்துவோருக்கு ரூ.500 இருப்புத் தொகையாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. 1,000 ஏடிஎம் மையங்கள் மேலும், வாடிக்கையாளர்களின் வசதிக்காக நாடு முழுவதும் சுமார் 1,000 ஏ

PLUS TWO TAMIL CENTUM TIPS | பாடக்குறிப்புகளை வழங்கியவர் வெ.ராமகிருஷ்ணன், முதுகலைத் தமிழாசிரியர்.

​ தேர்வு நோக்கில் மற்ற பாடங்களைப் படிப்பதற்கும் தமிழ் பாடத்தைப் படிப்பதற்கும் அடிப்படையில் சில வேறுபாடுகள் உண்டு. தமிழ்ப் பாடத்தில் பிழைகளால் மதிப்பெண்களை இழக்க நேரிடும். முதன்மையான ஒற்றுப் பிழைகள் அதிகம் இருந்தால் மதிப்பெண் நிச்சயம் குறையும். 'தினை/திணை' போன்ற பொருள் மாறும் மயங்கொலிப் பிழைகள் விடைத்தாள் திருத்துபவருக்குப் பளிச்செனத் தெரியும். 'ஒருமை/ பன்மை' குறித்த கருத்துப் பிழைகளும் இவற்றில் அடங்கும். இந்தப் பிழைகள் குறித்து இரண்டாம் தாளில் தனிப் பாடப் பகுதியே உள்ளது. இப்பகுதியை நன்கு புரிந்துகொண்டு படிப்பதுடன் அவற்றை விடைத்தாளில் கவனமாகப் பின்பற்றினால், சிறு பிழைகளால் நேரும் ஓரிரு மதிப்பெண் இழப்பைத் தவிர்க்கலாம்.பாடக்குறிப்புகளை வழங்கியவர் வெ.ராமகிருஷ்ணன், முதுகலைத் தமிழாசிரியர், அரியலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி. | DOWNLOAD

வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் அரசுப் பள்ளி மாணவர்கள் 20 லட்சம் பேருக்கு தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடக்கம்

​ மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு கல்வி அளிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார் | மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கல்வி அளிக்க ஆசிரியர்களுக்கான பயிற்சியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்தார். அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள விருப்பம் உள்ள 9, 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு உணவு பதப்படுத்துதல், சிறுவணிகம், வாகனம்சார் திறன், உடல் நலம் பேணுதல், வனப்பு மற்றும் உடல் நலம் போன்ற தொழில் திறன்களை ஆசிரியர்கள் கற்பிக்க உள்ளனர். இதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் ஒரு பள்ளியை தேர்ந்து எடுத்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடந்த பயிற்சியை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்து பேசியதாவது:- வேலைவாய்ப்பு கல்விக்கான பயிற்சிக்காக ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 'நீட்' தேர்வை சந்திக்க ஆன்லைன் மூலம் 72 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். முதல் கட்டமாக 100 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அந்த மையங்களில் மாணவர்கள் பட

TNOU - B.ED ADMISSION NOTIICATION - 2018

​ TNOU - BED ADMISSION - NO ENTRANCE EXAM-NEW METHOD FOR THE SELECTION OF CANDIDATES WILL BE ON THE BASIS OF THE MARKS SECURED IN THE QUALIFYING UG / PG DEGREE EXAMINATION.தமிழ்நாடு திறந்த நிலைபல்கலைக்கழகம் மூலம் 2018-19 ஆம் ஆண்டில் அஞ்சல் வழி B.Ed சேர்க்கை | DOWNLOAD

பள்ளிகளில், மாணவர்களுக்கான, 'அட்டெண்டன்ஸ்' முறையில், தமிழக அரசு, புதுமையை புகுத்த உள்ளது.

​ தமிழக பள்ளிகளில் அட்டெண்டன்ஸ் முறையில் புதுமை | பள்ளிகளில், மாணவர்களுக்கான, 'அட்டெண்டன்ஸ்' முறையில், தமிழக அரசு, புதுமையை புகுத்த உள்ளது. 'பேஸ் பயோமெட்ரிக்' முறைப்படி, பள்ளி வாசலில் உள்ள, கேமராவில் பதிவாகும் முகத்தால், 'பிரசென்ட்' பதிவாகி விடும். 'உள்ளேன் அய்யா'வுக்கு பதிலாக, கம்ப்யூட்டரில் பதிவாகும் இந்த வசதி, முதற்கட்டமாக, சென்னை அரசு பள்ளியில் அறிமுகம் செய்யப்படுகிறது. கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், ஊழியர்கள் வருகைப் பதிவில் முறைகேடுகளை தடுக்கவும், நிர்வாக வசதிக்காகவும், 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு பின்பற்றப்படுகிறது. 'கார்ப்பரேட்' நிறுவனங்களில் மட்டுமின்றி, சிறிய கடைகளிலும், இந்த முறை பயன்பாட்டில் உள்ளது. ஊழியர்களின் விரல் ரேகை அடிப்படையில், வருகை விபரம் பதிவு செய்யப்படுகிறது.இந்த பயோமெட்ரிக் வருகைப்பதிவு திட்டம், விழுப்புரம் மாவட்டத்திலும், மற்ற மாவட்டங்களில் சில பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டம் அமலானதால், அரசின் நலத் திட்டங்களை தவறாகக் கணக்கிடுவது, மாணவர்களின் எண்ணிக்கையில்

மாணவர்களின் கையெழுத்து மேம்பட ஆசிரியர்களுக்குப் பயிற்சி தேவை.

​ மாணவர்களின் கையெழுத்து மேம்பட ஆசிரியர்களுக்குப் பயிற்சி தேவை | வேதா டி. ஸ்ரீதரன் | 'மாணவர்களை அழகாக எழுதவைப்பது பள்ளிகளுக்குப் பெரிய சவாலாக இருப்பது ஏன்?' இது எனது பயிற்சி வகுப்புகளின் தொடக்கத்தில் நான் முன்வைக்கும் கேள்வி. இதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பதிலைச் சொல்வார்கள். எனினும், பள்ளிகளில் மாணவர்களின் கையெழுத்து மேம்படாததற்கு ஆசிரியர்களின் அறியாமையே முக்கியக் காரணம் என்று நான் கருதுகிறேன். கையெழுத்து என்பது ஒருசில எழுத்து வடிவங்களைக் காகிதத்தில் எழுதுவது மட்டுமே. பள்ளிகளில் கணிதம், இலக்கணம், உயிரியல், வேதியியல் முதலான எத்தனையோ கடினமான பாடங்களைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவை அனைத்துமே சவாலான விஷயங்கள்தாம். இருந்தாலும், இவற்றில் பெரும்பாலான மாணவர்கள் நல்ல தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால், ஒரு சில சாதாரணக் கோட்டு வடிவங்களை எழுதுவதற்கு மாணவர்கள் பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டி இருக்கிறது. அப்படியானால், கையெழுத்து விஷயத்தை எப்படிக் கையாளுவது என்பது ஆசிரியர்களுக்குத் தெரியவில்லை என்றுதானே பொருள்? இதைத்தான் அறியாமை என்று நான் குறிப்பிட்டேன். மாணவர்கள் தங்களுக்கு எவ்வாறு எழு

TNPSC - HALL TICKET FOR COMBINED CIVIL SERVICE - IV (GROUP IV SERVICES ) HOSTED ONLINE FOR DOWNLOAD - DATE OF EXAM : 11.02.2018 FN

​ TNPSC - HALL TICKET FOR COMBINED CIVIL SERVICE - IV (GROUP IV SERVICES ) HOSTED ONLINE FOR DOWNLOAD - DATE OF EXAM : 11.02.2018 FN | தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் - செய்தி வெளியீடு | தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் - IV (தொகுதி-IV) ல் அடங்கிய பணிகளுக்கான, 9351 காலிப்பணியிடங்களை நிரப்பும்பொருட்டு அறிவிக்கை எண் 23/2017ஐ 14.11.2017 அன்று வெளியிட்டு, அதற்கான எழுத்துத் தேர்வினை வருகிற 11.02.2018 அன்று முற்பகல் தமிழ்நாட்டின் 301 தாலுக்கா மையங்களிலும் நடத்தவுள்ளது. இத்தேர்வுக்காக 20.8 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, உரிய தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்குத் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in ல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப பதிவு எண்/பயனாளர் குறியீடு (Registration ID/Login ID) மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து, நுழைவுச்சீட்

பொதுத்தமிழ்

​ 1. திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ? - குறிப்பறிதல். 2. குறுந்தொகையில்கூறப்பட்டுள்ள ஆதிமந்தி யாருடைய மகள் ? - கரிகாலன் 3. கிறித்துவின் அருள் வேட்டல் - என்ற நூலின் ஆசிரியர் யார் ? - திரு.வி.க. 4. 'திருமகள்" இதழின் ஆசிரியர் யார் ? - கவியரசு கண்ணதாசன் 5. கோயில் நகரம் என்று அழைக்கப்படுவது எது ? - மதுரை. 6. தமிழ் நாவலுக்கு வித்திட்டவர் யார் ? - வேதநாயகம்பிள்ளை. 7. சிறுபாணாற்றுப்படை நூலின் ஆசிரியர் யார் ? - நல்லூர் நத்தத்தனார் 8. ஞால் - என்னும் சொல்லின் பொருள் - தொங்குதல் 9. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: (இளை - இழை) - மெலிதல் - நூல் 10. சங்கம் என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டுள்ள தமிழ் இலக்கியம் எது ? - மணிமேகலை 11. 1942 ல் ராஜாஜியால் தமிழக அரசவைக் கவிஞராக சிறப்பிக்கப்பட்டவர் யார் ? - நாமக்கல் கவிஞர; 12. ஆய்வு நெறிமுறைகளை தமிழ் மொழி ஆராய்ச்சியில் அறிமுகம் செய்தவர்? - வையாபுரி பிள்ளை

TNPSC LABORATORY ASSISTANT IN FORENSIC SCIENCE DEPARTMENT RECRUITMENT 2018 | தமிழக அரசின் தடயஅறிவியல் துறையில் ஆய்வக உதவியாளர் பதவிக்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனடிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

​ TNPSC LABORATORY ASSISTANT IN FORENSIC SCIENCE DEPARTMENT RECRUITMENT 2018 | தமிழக அரசின் தடயஅறிவியல் துறையில் ஆய்வக உதவியாளர் பதவிக்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனடிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு: தடயஅறிவியல் துறையில் 56 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் (எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, டிஎன்சி) ஆதரவற்ற விதவைகளுக்கும் (பொதுப்பிரிவு உட்பட) வயது வரம்பு இல்லை. எழுத்துத் தேர்வு மே 6 நடத்தப்படும். எழுத்துத்தேர்வு அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். நேர்முகத் தேர்வு இல்லை. தகுதியானோர் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை ( www.tnpsc.gov.in ) பயன்படுத்தி பிப்ரவரி 21-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பாடத்திட்டம், கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் தெரிந்துகொ

ஹைட்ரஜன்-சில குறிப்புகள்

​ * மிக லேசான தனிமம் ஹைட்ரஜன். * ஹைட்ரஜனின் அணு எண் 1. * புரோட்டியம், டியூட்ரியம், டிரிடியம் என்பவை ஹைட்ரஜனின் ஐசோடோப்புகள். * புரோட்டியம், ஒரு புரோட்டான் மட்டும் கொண்டது. * டியூட்ரியம், ஒரு புரோட்டான், ஒரு நியூட்ரான் கொண்டது. * டிரிடியம் ஒரு புரோட்டான், 2 நியூட்ரான்கள் கொண்டது. * இயற்கையில் அதிகம் காணப்படுவது புரோட்டியம் 99.98 சதவீதம். * டியூட்ரியம் இயற்கையில் 0.015 சதவீதம் உள்ளது. * டிரிடியம் மிக மிக அரிதானது, நிலைத்த தன்மையற்றது. ஹைட்ரஜனுக்குப் பெயரிட்டவர் லவாய்ஸியர். * ஹைட்ரஜனைக் கண்டுபிடித்தவர் ஹேவண்டிஸ். * ஹைட்ரஜனுக்கு ஹேவண்டிஸ் வைத்த பெயர் எரியும் வாயு. * ஹைட்ரஜன் என்பதன் பொருள் தண்ணீரை உருவாக்குவது. * டியூட்ரியம் ஆக்சைடு என்பது கனநீராகும். * கனநீர் அணு உலைகளில் நியூட்ரான் வேகத்தை கட்டுப்படுத்தும் தணிப்பானாக பயன்படுகிறது. * ஹைட்ரஜனின் எரிசக்தி 32 கலோரிகள். * எதிர்கால எரிபொருள் தேவையைச் சமாளிக்க ஹைட்ரஜனே அதிகம் உதவும்.

விவசாயப் பயிர்கள் விளைவிப்பதில் முன்னிலை பெறும் மாநிலங்கள்

விவசாயத்தில் முன்னிலை | சில விவசாயப் பயிர்கள் விளைவிப்பதில் முன்னிலை பெறும் மாநிலங்களை அறிந்து கொள்ளலாம்... நெல் - மேற்கு வங்காளம் கோதுமை - உத்திரப்பிரதேசம் கம்பு, சோளம் - மகாராஷ்டிரா கேழ்வரகு - கர்நாடகா கரும்பு - உத்திரப்பிரதேசம் புகையிலை - ஆந்திரப் பிரதேசம் பருத்தி, நிலக்கடலை - குஜராத் தேயிலை - அஸ்ஸாம் ரப்பர் - கேரளா காபி - கர்நாடகா பருப்பு வகைகள் - மத்திய பிரதேசம் தேங்காய் - கேரளா சணல் - மேற்கு வங்காளம் நறுமணப் பொருள்கள் - கேரளா

இந்திய தேசிய இயக்கம் - மிதவாதிகள் காலம்

​ * இந்திய தேசிய இயக்கம் 3 கட்டங்களைக் கொண்டது. அவை மிதவாதிகள் காலம், வீரத்தை நம்பியவர்கள் காலம், காந்திசகாப்தம் என அழைக்கப்படுகின்றன. * மிதவாதிகள் காலம் 1885 முதல் 1905 வரை என்று வரையறை செய்யப்படுகிறது. * 1885-ல் இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பை மும்மபயில் தொடங்கியவர் ஆலன் ஆக்டேவியன் ஹியூம். இவர் ஓய்வு பெற்ற ஐ.சி.எஸ். அதிகாரி. * இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் உமேஷ் சந்திர பானர்ஜி. * இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம் மும்பையில் 1885-ல் நடைபெற்றது. அதில் பங்கேற்ற 72 பேர், 'பிரேவ் 72' என அழைக்கப்பட்டனர். * காங்கிரஸ் இயக்கத்தின் இரண்டாம் மாநாடு 1886-ல் கொல்கத்தாவில் நடைபெற்றது. * மிதவாதிகளின் தலைவர் கோபாலகிருஷ்ணகோகலே. * மகாத்மா காந்தியின் அரசியல் குரு கோகலே. * கோகலே இந்திய ஊழியர் சங்கத்தை நிறுவினார். * 1887-ல் சென்னையில் நடைபெற்ற மூன்றாம் காங்கிரஸ் கூட்டத்தின் தலைவர் பத்ருதீன் தியாப்ஜி. * காங்கிரஸ் மாநாட்டின் தலைவர் பதவி வகித்த முதல் ஆங்கிலேயர் ஜார்ஜ் யூல் (1904).

பொது அறிவு | வினா வங்கி

​ பொது அறிவு | வினா வங்கி  1. தமிழ்நாட்டில் உள்ள உப்பு ஏரி எது? 2. முதல் தமிழ் அகராதியை இயற்றியவர் யார்? 3. வெடிமருந்துடன் கூடிய ராக்கெட்டை ஏவிய முதல் நாடு எது? 4. ஐ.நா. தினம் அனுசரிக்கப்படும் நாள் எது? 5. பென்சிலின் மருந்து எந்த தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது? 6. உலகில் முதன் முதலில் உயில் எழுதும் முறையை ஆரம்பித்தவர்கள் யார்? 7. விளையாட்டு வீரர்களுக்கு உடனடி சக்தி தருவது எது? 8. காற்றின் ஈரப்பதத்தை அளக்கப் பயன்படும் கருவி எது? 9. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்கு அமைந்துள்ளது? 10. பழங்காலத்தில் இந்தியாவின் நுழைவு வாயிலாக இருந்தது? 11. முதன் முதலில் ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்தியவர் யார்? 12. நெருப்பை அணைக்கப் பயன்படும் வாயு யாது? 13. கியூலெக்ஸ் கொசுக்கள் பரப்பும் வியாதி எது? 14. உலகின் முதல் பெண் இயக்குனர் யார்? 15. பறவைகளின் இறகுகளை நீரில் நனையாமல் காக்கும் சுரப்பி பொருள் எது? 16. தேசிய இயற்பியல் ஆராய்ச்சி செயலகம் எங்கு அமைந்துள்ளது? 17. பழனியின் பண்டைய காலப் பெயர் என்ன? 18. பயோனியர் விண்கலம் எந்த கிரகத்திற்கு அனுப்பப்பட்டது? 19.

INDIAN OIL CORPORATION LTD RECRUITMENT 2018 | இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை டிப்ளமோ படிப்பு

​ INDIAN OIL CORPORATION LTD RECRUITMENT 2018 | இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை டிப்ளமோ படிப்பு தகுதி இந்தியன் ஆயில் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- இந்தியன் ஆயில் எனப்படும் இந்திய எண்ணெய் கழக நிறுவனம் சுருக்கமாக ஐ.ஓ.சி.எல். என அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின், தெற்கு மண்டல கிளையில் தற்போது நான்-எக்சிகியூட்டிவ் அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 98 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ஜூனியர் ஆபரேட்டர் பணிக்கு 51 இடங்களும், ஜூனியர் ஆபரேட்டர் (ஏவியேசன்) பணிக்கு 46 இடங்களும், ஜூனியர் ஜார்ஜ்மேன் பணிக்கு ஒரு இடமும் உள்ளது. இந்த பணியிடங்கள் தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கானதாகும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 26 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி

join indian army | ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய பணிக்கு என்.சி.சி. வீரர்கள் சேர்ப்பு

​ என்.சி.சி. வீரர்கள் ராணுவத்தில் சேர்ப்பு | ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய பணிக்கு என்.சி.சி. வீரர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய ராணுவம் நாட்டின் பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது. பல்வேறு சிறப்பு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு பயிற்சிக்குப் பின் பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். தற்போது என்.சி.சி. 44-வது சிறப்பு நுழைவின் அடிப்படையில் பட்டப்படிப்பு படித்த என்.சி.சி. வீரர்களை ராணுவத்தில் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 55 பேர் இந்த பயிற்சியில் சேர்க்கப்படுகிறார்கள். இதில் ஆண்கள் 50 பேர், பெண்கள் 5 பேர். இந்திய குடியுரிமை பெற்ற, திரு மணமான மற்றும் திருமணமாகாத ஆண்கள், திருமணமாகாத பெண்கள் இந்த பயிற்சியில் சேரலாம். இதில் சேர்வதற்கு விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 19 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-7-1993 மற்றும் 1-7-1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். கல்வித் தகுதி: அங்கீகார

POWER GRID INDIA RECRUITMENT 2018 | மின் தொகுப்பு நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு பணி.

POWER GRID INDIA RECRUITMENT 2018 | மின் தொகுப்பு நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு பணி மின்தொகுப்பு நிறுவனத்தில் என்ஜினீயர் களுக்கு கேட் தேர்வு அடிப்படையில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்திய மின் தொகுப்பு கழக நிறுவனம் சுருக்கமாக பி.ஜி.சி.ஐ.எல். என அழைக்கப்படுகிறது. மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமான இது மத்திய மின்சாரத்துறையின் கீழ் செயல்படுகிறது. நாட்டின் மிகப்பெரிய மின்பரிமாற்ற நிறுவனமாக திகழும் இந்த நிறுவனத்தில் தற்போது அசிஸ்டன்ட் என்ஜினீயர் டிரெயினி பணியிடங்களை கேட் 2017 தேர்வின் அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. எலக்ட்ரிக்கல் பிரிவில் 100 பேரும், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 20 பேரும், சிவில் பிரிவில் 20 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 10 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 150 இடங்கள் நிரப்பப்படுகின்றன. பி.இ., பி.டெக் மற்றும் பி.எஸ்சி. என்ஜினீயரிங் படித்து 2017-க்கான கேட்தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 31-12-2016-ந் தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண

SBI RECRUITMENT 2018 | ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை . கடைசி நாள் 12-2-2018.

​ SBI RECRUITMENT 2018 | ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு 171 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- ஸ்டேட் வங்கி முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். நாடு முழுவதும் ஏராளமான கிளைகளுடன் விரிவான வங்கிச் சேவை வழங்கும் இந்த நிறுவனத்தில் பணி வாய்ப்பு பெறுவதை இளைஞர்கள் பலரும் விரும்புகிறார்கள். 2018-ம் ஆண்டில் பல ஆயிரம் பணியிடங்களை ஸ்டேட் வங்கி நிரப்ப இருக்கிறது. முதல்கட்டமாக சிறப்பு அதிகாரி தரத்திலான 121 பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலாளர், முதுநிலை மேலாளர் போன்ற உயர் பதவி பணியிடங்கள் இதில் உள்ளன. கிரெடிட் அனலிஸ்ட், அசெட் மேனேஜ்மென்ட், பிசினஸ் டெவலப்மென்ட் மார்க்கெட்டிங், ஹை வேல்யு அக்ரி பிசினஸ் டெவலப்மென்ட், ரிலேசன்ஷிப் மேனேஜ்மென்ட், புராடெக்ட் டெவலப்மென்ட், டேட்டா இன்டர்பிரிடேசன், டெக்னாலஜி, வெல்த் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு: மேலாளர் தரத்திலான பணிக்கு 25 மு

டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் 1896 பணிகள் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு ஏராளமான காலியிடங்கள்

​ டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் 1896 பணிகள் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு ஏராளமான காலியிடங்கள் டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் 1896 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு ஏராளமான பணியிடங்கள் உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேசன் நிறுவனம் சுருக்கமாக டி.எம்.ஆர்.சி.எல். எனப் படுகிறது. நாட்டின் தலைமையிடமும், யூனியன் பிரதேச பெருநகரமுமான டெல்லியில் மெட்ரோ ரெயில் திட்டம் பிரமாண்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் தரத்திலான அதிகாரி பணிகள் மற்றும் நான்எக்சிகியூட்டிவ் பணிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 1,896 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான சிறப்பு ஆட்தேர்வின் அடிப்படையில் 88 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அதிகபட்சமாக ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு 440 இடங்களும், மெயின்டனர் பணிக்கு 1058 இடங்களும் உள்ளன. இவை தவிர அசிஸ்டன்ட் மேனேஜர், ஆபீஸ் அசிஸ்டன்ட், லீகல் அசிஸ்டன்ட் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கும் கணிசமான காலியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்ப

மாணவர்கள் மற்றும் ​ஆசிரியர்களுக்காக ஒரு KALVISOLAI YOUTUBE CHANNEL

​ மாணவர்கள் மற்றும் ​ஆசிரியர்களுக்காக ஒரு YOU TUBE CHANNEL ! YOU TUBE தளத்தில் KALVISOLAI YOUTUBE CHANNEL உருவாக்கப்பட்டுள்ள்து. 1092 க்கும் மேற்பட்ட SUBSCRIBE ஐ பெற்றுள்ளது. இந்த சேனலில் ஏற்கனவே 150 க்கும் மேற்பட்ட காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பாடம் சார்ந்த பல வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் பற்றிய தகவல்களை அறிய இந்த சேனலை SUBSCRIBE செய்து அருகில் உள்ள BELL SYMBOL ஐ Click செய்வதன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ பதிவு செய்த அறிவிப்பானையை (Notification) பெற்றுக்கொள்ளலாம். இதை அறிவியல் ஆசிரியர்களுக்கானது மட்டும் அல்ல. பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். Channel link https://www.youtube.com/user/kalvisolaivideos/videos  

SAAMY SCIENCE CHANNEL 200 யூ டியூப் வீடியோ பதிவுகள்..

​ஆசிரியர்களுக்கான ஒரு தளம்! YOU TUBE தளத்தில் SAAMY SCIENCE CHANNEL உருவாக்கப்பட்டுள்ள்து. ஒரு வாரத்தில் 1300 க்கும் மேற்பட்ட SUBSCRIBE ஐ பெற்றுள்ளது. இந்த சேனலில் ஏற்கனவே 200 க்கும் மேற்பட்ட தமிழ் காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அறிவியல் பாடம் சார்ந்த காணொளிகள், EMIS பற்றிய காணொளிகள், Software Tutorial மற்றும் பல வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் பற்றிய தகவல்களை அறிய இந்த சேனலை SUBSCRIBE செய்து அருகில் உள்ள BELL SYMBOL ஐ Click செய்வதன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ பதிவு செய்த அறிவிப்பானையை (Notification) பெற்றுக்கொள்ளலாம். இதை அறிவியல் ஆசிரியர்களுக்கானது மட்டும் அல்ல. பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். Channel link http://www.youtube.com/user/smspms2020

கலாபாரதி அகடெமி 440 யூ டியூப் வீடியோ பதிவுகள்..

30 வீடியோ பதிவுகள் தொகை நுண் கணிதத்திலும் (Integral calculus), 10 வீடியோ பதிவுகள் தாவரவியலிலும் (Transport mechanism in plants), நமது கலாபாரதி அகடெமி யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது என்பதனை மிக மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மொத்த பதிவுகள் 440 ஆகி விட்டது...!!! நமது கலாபாரதி அகடெமி யூடியூப் சேனல் ஓர் கல்வி சேனல்என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். மிக உயர் தரத்தில் தமிழ் மாணவர்களுக்கு கல்வியைத் தர வேண்டும் என்பது கலாபாரதியின் நோக்கம். நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்....! நமது சேனலையும் பாருங்கள். உலகப் புகழ்பெற்ற கான் அகடெமி (Khan academy- channel by renowned retired professor Salmankhan of Massachusetts Institute of Technology) சேனலையும் பாருங்கள். நாம் அறிவில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதனை நீங்களே உணர்வீர்கள்...! ஆனால் அவர்கள் ஏராளமான வீடியோ பதிவுகள் வைத்திருக்கின்றனர். நாம் குறைவாக வைத்திருக்கின்றோம். எனினும் நாமும் துரிதமாக அதிகரித்து வருகின்றோம். இதனை ஒவ்வொரு தமிழ் குடும்பத்திற்கும் தெரியப் படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். கல்விக்கான செலவீ

பிளஸ் 2 வகுப்பு செய்முறை தேர்வு: பிப்.2ல் துவக்கம்

பிளஸ் 2 வகுப்பு செய்முறை தேர்வு: பிப்.2ல் துவக்கம் | பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும், 2ம் தேதி முதல், பிப்., 16க்குள் செய்முறைதேர்வை நடத்தி முடிக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுதேர்வு,மார்ச், 1ல் துவங்குகிறது. இதில், ஒன்பது லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.தேர்வுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில்,பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, அடுத்த வாரம் துவங்குகிறது.வரும், 2ம் தேதி முதல், அனைத்து பள்ளிகளிலும், செய்முறைதேர்வைதுவங்கி, பிப்., 16க்குள் முடித்து, மதிப்பெண் பட்டியலை தாக்கல் செய்ய,தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்வை முறைகேடின்றி நடத்துமாறு, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

900 HIGH SCHOOL HM POST VACCANT | 900 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி

900 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி 'ஈகோ' பிரச்னையால் கிடப்பில் பட்டியல் | ஆசிரியர்கள், அதிகாரிகளின் 'ஈகோ' பிரச்னையால் 900 பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பமுடியவில்லை.அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுநிலை பட்டதாரியாகவும், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. நேரடி முதுநிலை ஆசிரியர்களுக்கு, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு வழங்கப்படுகிறது. பட்டதாரி ஆசிரியராகஇருந்து, முதுநிலைபதவி உயர்வு பெற்றவர்கள், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராக வர முடியாது என்ற விதி, பல ஆண்டுகளாகபின்பற்றப்பட்டது.ஆனால், 2008ல், இந்த விதிக்கு மாறாக, முதுநிலை ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.இதை எதிர்த்து,பதவி உயர்வு பெற்றபட்டதாரி ஆசிரியர்மற்றும் தமிழாசிரியர்கழகம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், 'பதவி உயர்வு பெற்று, ஐந்து ஆண்டுகளை தாண்டிய முதுநிலை ஆசிரியர்களுக்கு, உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி வழங்கக் கூடாது' என, உயர் நீதிமன்றம் தடை விதித்தது.மேலும், இந்

புதிய பாடத்திட்ட புத்தகங்கள் ஜூனில் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

புதிய பாடத்திட்ட புத்தகம் ஜூனில் கிடைக்கும் - புதிய பாடத்திட்ட புத்தகங்கள் ஜூனில் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.தமிழகத்தில்,10 ஆண்டுகளுக்கு பின், ஒன்றாம் வகுப்பு முதல், அனைத்து வகுப்புகளுக்கும்,புதிய பாடத்திட்டதயாரிப்புபணி நடந்துவருகிறது. வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிறது.இதற்கான புத்தக தயாரிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதில், முக்கிய பாடங்கள் தவிர, ஓவியம்,கலை, உடற்கல்வி, தையல், இசை மற்றும் சிறப்பு பாடங்களாக, நீச்சல், யோகா, கராத்தே போன்றவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையில், குடியரசு தினத்தையொட்டி, சென்னையில், சாரணர் இயக்க தலைமை அலுவலகவளாகத்தில் உள்ள, அரசு பள்ளியில், பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தேசிய கொடி ஏற்றினார். பின், அவர் கூறுகையில், ''மத்திய அரசு, எந்த விதமான நுழைவு தேர்வை நடத்தினாலும், அவற்றை எதிர்கொள்ள தேவையான பாடத்திட்டமும், பயிற்சியும் உருவாக்கப்பட்டுள்ளது.''ஏற்கனவே உள்ள, 100 மையங்களை தவிர, 312 மையங்களில், விரைவில் நு

அறிவியல் முறைப்படி நிலத்தடி நீர் கண்டறிதல்

அறிவியல் முறைப்படி நிலத்தடி நீர் கண்டறிதல் | நிலத்தடி நீரை கண்டறிய சம்பந்தப்பட்ட பகுதி நிலத்தின் வரைபடத்தை கொண்டு பாறைகளை அளவிட்டு, அவை எந்த வகையை சேர்ந்தவை என்று அறிந்து, பொருத்தமான தளங்களில் ஆழ்குழாய் தோண்டப்படுகிறது. பெரும்பாலும், சுண்ணாம்பு பாறைகள் உள்ள பகுதிகளில் அதிகமாக நிலத்தடி நீர் இருக்கும் சாத்தியம் உள்ளதால், நீரியல் நிபுணர்கள் அந்த இடங்களில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்க பரிந்துரை செய்கின்றனர். பூமியின் ஆழத்தில் உள்ள பாறை இடுக்குகளில் நிலத்தடிநீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக நீரியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டிய இடத்திற்கு அருகில் ஏற்கனவே உள்ள கிணறுகள் பற்றிய தகவல்களை அறிவார்கள். அதன் மூலம் கிணறுகளில் எவ்வகை பாறை படிமங்கள் அமைதிருக்கின்றன என்பதை அறிந்து, ஆழ்குழாய் கிணறு அமைத்தால் நீர் கிடைக்கும் சாத்தியம் உள்ளதாக நீரியல் நிபுணர்கள் கருதுகின்றனர். அவர்கள், ஏரியல் (கிமீக்ஷீவீணீறீ) புகைப்படங்களை ஆய்வு செய்து, அதன் மூலம் பாறைப் படுகைகளை கண்டறிந்து அந்த பகுதியில் கிணறு அமைக்கும் பட்சத்தில் நிலத்தடி நீர் கிடைக் கும் என

ஆதார் எண் இணைக்காத கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் முடக்கம் வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு-எண்ணெய் நிறுவனம் விளக்கம்

ஆதார் எண் இணைக்காத கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் முடக்கம் வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு-எண்ணெய் நிறுவனம் விளக்கம் | காலக்கெடுவை மார்ச் மாதம் வரை நீட்டிப்பு செய்தபோதிலும், ஆதார் எண்ணை கியாஸ் சிலிண்டர் இணைப்புடன் இணைக்காத இணைப்புகள் முடக்கப்பட்டு இருப்பதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சமையல் எரிவாயுக்கான மானியம் பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியது. மேலும் ஆதார் எண்ணை சமையல் கியாஸ் சிலிண்டர் கணக்குடன் இணைப்பதற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரையிலும் காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த காலக்கெடு வருகிற மார்ச் 31-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பழைய காலக்கெடுவின்படி ஆதார் எண்ணை இணைக்காத கியாஸ் சிலிண்டர் இணைப்புகளை இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனத்துக்கு (ஐ.ஓ.சி.) சொந்தமான 'இன்டேன்' கியாஸ் நிறுவனம் முடக்கத்தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான கியாஸ் இணைப்புகள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கியாஸ் இணைப்புகள் முடக

TNTET 2018 | நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வை மே மாதம் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. விரைவில் வருடாந்திர அட்டவணை வெளியிடப்பட உள்ளது.

பள்ளி ஆசிரியர் நியமனங்களுக்கான தகுதி தேர்வை மே மாதம் நடத்த திட்டம் வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் பல தகவல்கள் இடம்பெறும் நடப்பு ஆண்டுக்கான தகுதித்தேர்வை மே மாதம் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. நீதிமன்ற வழக்குகள் காரணமாக 2013 முதல் 2016 வரை, 3 ஆண்டு காலமாக தகுதித்தேர்வு நடத்தப்படவில்லை. வழக்குகள் முடிவடைந்த நிலையில், 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த 2017-ம் ஆண்டு தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. தகுதித்தேர்வு தேர்ச்சி, 7 ஆண்டு காலம் செல்லத்தக்கது. இதுவரையில் நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஏறத்தாழ 94,000 பேர் அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் ஆசிரியர் நியமனம் தகுதித்தேர்வு மதிப்பெண் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நடைபெறுவதில்லை. இதற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறை பின்பற்றப்படுகிறது. தகுதித்தேர்வு மதிப்பெண், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண், பட்டப் படிப்பு மற்றும் பிஎட் படிப்பு மதிப்பெண் (இடைநிலை ஆசிரியர்கள் எனில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பு) என ஒவ்வொரு தகுதிக்கும் குறிப்பிட்ட வெயிட்டேஜ் மதிப்பெண் அளிக்கப்பட்ட

தகவல் களஞ்சியம்-டெல்லியின் பழைய பெயர் ஷாஜகானாபாத்.

* தமிழக சட்டசபையில் உறுப்பினராக நுழைந்த முதல் சினிமா நட்சத்திரம் கே.பி.சுந்தராம்பாள். 1951-ம் ஆண்டு தமிழக சட்டசபையின் மேல்சபை உறுப்பினரானார். * இந்தியாவின் முதல் துணை பிரதமர் வல்லபாய் படேல். * நமது தேசிய சின்னத்திலுள்ள 'சத்யமேவ ஜெயதே' என்ற வாக்கியம் முண்டக உபநிடதத்தில் உள்ளது. * 'வந்தே மாதரம்' பாடல் ஆனந்தமடம் என்னும் நாவலிலிருந்து எடுக்கப்பட்டது. இதை எழுதியவர் பங்கிம் சந்திர சட்டார்ஜி. * இந்தியாவில் முதல் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட இடம் கொல்கத்தா. * இந்திய திட்ட நேரம் அலகாபாத்தை அடிப்படையாகக் கொண்டது. * மெஞ்ஞானப் பாடத்தில் முதல் மாணவராக தேர்ச்சி அடைந்து 'சாஸ்திரி' என்ற பட்டத்தை லால்பகதூர் சாஸ்திரி பெற்றோது அவருக்கு வயது 22. * ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்த ரோமானிய அரசர் கான்ஸ்டன்டைன் * டெல்லியின் பழைய பெயர் ஷாஜகானாபாத். * கல்லில் ஓவியம் பதிக்கும் கலைக்குப் பெயர் லித்தோகிராபி.