-->

Thursday, March 23, 2017

5-ம் வகுப்பு பயிலும் மாணவருக்கு தனது பெயரைக்கூட தவறில்லாமல் எழுதத் தெரியவில்லை. அந்த அளவுக்கு தமிழக கல்வித்தரம் மிகவும் மோசமடைந்துள்ளது என வேதனை தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம்.


5-ம் வகுப்பு பயிலும் மாணவருக்கு தனது பெயரைக்கூட தவறில்லாமல் எழுதத் தெரியவில்லை. அந்த அளவுக்கு தமிழக கல்வித்தரம் மிகவும் மோசமடைந்துள்ளது என வேதனை தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், இதற்கு புற்றீசல்போல பெருகியுள்ள லெட்டர்பேடு ஆசிரியப் பயிற்சி கல்வி நிறுவனங்களே காரணம் என சுட்டிக்காட்டியுள்ளது. திருச்சியைச் சேர்ந்த தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரி நிர்வாகம் நடப்பு கல்வியாண்டில் பிஎட் பாடப்பிரிவில் மாணவர்களி்ன் எண்ணிக்கையை அதிகரிக்கவும், புதிதாக எம்எட் பாடப் பிரிவை தொடங்கவும் அனுமதி கோரியிருந் தது. ஆனால் இதற்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அனுமதி மறுத்துள்ளது. இதை எதிர்த்து அந்த கல்லூரி நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரிய பயிற்சி கல்லூரிகளுக்கு இயந்திரத்தனமாக அனுமதி கொடுக்கிறது. ஆனால் அதைப்பற்றி தமிழக அரசு எந்த அக்கறையும் கொள்வதில்லை. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியப் படிப்பை முடித்து வெளிவரும் ஆசிரியர்களின் கல்வித்தரம் கவலையளிக்கும் வகையில் உள்ளது. ஏனெனில், 5-ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு தனது பெயரைக்கூட தவறு இல்லாமல் எழுதத் தெரியவில்லை. அந்த அளவுக்கு தமிழக கல்வித்தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. புற்றீசல்போல பெருகியுள்ள எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத, உரிய விதிமுறைகளைப் பின்பற்றாத லெட்டர்பேடு கல்வி நிறுவனங்களும், அங்கு பயிலும் ஆசிரியர்களுமே இதற்கு முக்கியக் காரணம். தமிழகத்தில் திறமையான, தகுதியான ஆசிரியர்களின் எண் ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இதனால்தான் தமிழக மாணவர்கள் பிற மாநில மாணவர்களோடு கல்வியில் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கல்வி வணிக ரீதியிலான தொழி லாக மாறிவிட்டதற்கு வரன்முறை இல்லாத கல்வி நிறுவனங்களும் ஒரு காரணம். இதை இப்போதே அதிகாரிகள் ஒழுங்குபடுத்த வில்லை எனில் ஆசிரிய பட்டதாரி களின் எண்ணிக்கையும் பெருகி அவர்களும் வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்க நேரிடும். எனவே இந்த வழக்கில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலையும் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்கிறேன். நாட் டில் எத்தனை ஆசிரியப் பயிற்சி கல்லூரிகள் உள்ளன? ஆசிரியப் படிப்பை முடித்துவிட்டு வேலையில் லாமல் காத்திருக்கும் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படிப்பு முடித்தவர் கள் எத்தனை பேர்? இன்னும் எத் தனை ஆசிரியப் பயிற்சி கல்லூரி கள் தேவை? என்பன உள்ளிட்ட 10 கேள்விகளுக்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக மும் விரிவாக பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 27-க்கு தள்ளிவைத்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஜூலை 1 முதல் பொருட்களின் விலை குறையும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேச்சு


ஜூலை 1 முதல் பொருட்களின் விலை குறையும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேச்சு | ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமலாகும் என நம்பிக்கை இருக்கிறது. இதன் மூலம் பொருட்களின் விலை குறை யும் மற்றும் வரி ஏய்ப்பும் தடுக்கப் படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். காமன்வெல்த் நாடுகளுக்கான தலைமை தணிக்கை அதிகாரிகளின் 23-வது மாநாட்டில் கலந்து கொண்ட ஜேட்லி மேலும் கூறியதாவது: வரி செலுத்தாத சமூகமாகவே இந்தியா இருந்து வருகிறது. இதன் காரணமாக பண மதிப்பு நீக்கம் கொண்டு வரப்பட்டு, ரொக்க பணப்புழக்கம் குறைக்கப்பட்டது. இதன் மூலம் வரி ஏய்ப்பு மற்றும் தீவிரவாதிகளுக்கு பண உதவி செய்வது குறையும். இதுபோன்ற சீர்திருத்தங்களால் இந்தியா 7 முதல் 8 சதவீத வளர்ச்சி அடையும். மேலும் உலகில் வேக மாக வளர்ச்சி அடையும் நாடு என்கிற பெயரும் இந்தியாவுக்கு கிடைக்கும். ஆனால் சில சவால் களும் நமக்கு இருக்கின்றன. கச்சா எண்ணெயில் இருக்கும் ஏற்ற இறக்க சூழல், பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் அதிகரிப்பு மற்றும் தனியார் முதலீடுகள் குறைவாக இருப்பது உள்ளிட்ட சில சவால்கள் இருக்கின்றன. மிகவும் வலுவான தொழில்நுட்ப பின்னணியுடன் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த இருப்பதால் வரி ஏய்ப்பு செய்வது கடிமானகும். இந்தியாவில் செய்யப்படும் மிகப் பெரிய வரி சீர்திருத்தம் இதுவாகும். வரிக்கு வரி செலுத்துவது ஜிஎஸ்டியில் கிடையாது என்பதால் பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணம் குறையும். இந்தச் சட்டம் நாடாளுமன்றத் தின் ஒப்புதலுக்காக காத்திருக் கிறது. அனுமதி கிடைத்தவுடன் இந்த ஆண்டு மத்தியில் அமல் படுத்தப்படும். இதன் மூலம் வரி செலுத்தாமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். நேரடி வரியை பொறுத்தவரை ரொக்கப் பரிவர்த்தனைக்கு அதிக பட்ச தொகை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. லஞ்சம்,ஊழல், தீவிர வாதம் உள்ளிட்ட செயல்களுக்கு ரொக்கப்பணம் பயன்படுத்தப்படு கிறது. இதற்காக பணமதிப்பு நீக்கம் கொண்டு வரப்பட்டது. மேலும் இதன் மூலம் அடையாளம் இல்லா மல் புழக்கத்தில் இருந்து வந்த பணத்துக்கு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதன் மூலம் அடையாளம் கிடைத்துள்ளது. வரும் காலத்தில் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு உயரும். அதிலும் முறையான பொருளா தாரத்தின் பங்கும் அதிகரிக்கும். கடந்த மூன்று ஆண்டுகளாக உலகில் அதிக வளர்ச்சி அடையும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் இருந்தது. இதே வேகத்தில் இந்தியா செல்லும். 7 முதல் 8 சதவீத வளர்ச்சி சிறப் பானதுதான் என்று ஜேட்லி கூறினார். சரக்கு மற்றும் சேவை வரி முதன் முதலாக 2006-ம் ஆண்டு பரிந்துரை செய்யப்பட்டது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 5.84 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 5.84 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 5 லட்சத்து 84 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீது நேற்று நடந்த விவாதம்: கோவி.செழியன் (திமுக): எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த போது, ஏழை மாணவர்களுக்கு மாநகராட்சி பள்ளிகளில் இலவச கணினி பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அதை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விரிவு படுத்தினார். இவ்வாறாக தந்தையும், மகனும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தனர். பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்: மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான். கடந்த 4 ஆண்டுகளில் 32 லட்சம் மாணவர் களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு 5 லட்சத்து 84 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: ஜெயலலிதா ஆட்சியில் கடந்த 2011-ம் ஆண்டு சிறப்பு திட்ட செயலாக்கத்துறை உருவாக்கப்பட்டது. அதன்கீழ், இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. இதை பின்பற்றி உத்தரப் பிரதேச முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவும், மடிக்கணினி வழங்குவதாக அறிவித்தார். ஆனால், ஓராண்டு மட்டுமே வழங்கப்பட்டது. அதன்பின் நிதிநிலையை காரணம் காட்டி நிறுத்தி விட்டார். ஆனால், தமிழகத்தில் 32 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு நேற்று விவாதம் நடந்தது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஏப்ரல் 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ரூ.5 முதல் 10 வரை உயரும் என தகவல்


ஏப்ரல் 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ரூ.5 முதல் 10 வரை உயரும் என தகவல் | ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் உயரும் எனக் கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 350-க்கும் அதிகமான சுங்கச்சாவடிகள் உள்ளன. அதில் தமிழகத்தில் 44 சாவடிகள் உள்ளன. அதில் 26 சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதியில் இருந்தும், 18 சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்தும் சுங்கக் கட்டணத்தை உயர்த்துவது நடைமுறையில் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 23 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் சரக்கு வாகனங்களின் வாடகை மட்டுமின்றி தனியார் பேருந்துகளின் கட்டணமும் உயர்ந்தது. இந்நிலையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 18 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இதன்படி, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த பட்டறைபெரும்புதூர், வானகரம், கோவை மாவட்டம் கன்னியூர், வாடிப்புரம், பரனூர், சேலம் மாவட்டம் ஆத்தூர், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி மாவட்டம் சாலைபுதூர், பள்ளிகொண்டா, வாணியம்பாடி, நெல்லை மாவட்டம் எட்டூர், கப்பலூர், நாங்குநேரி, திருச்சி மாவட்டம் சிட்டம்பட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் உள்ளிட்ட 18 சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. வாகனங்களின் வகைக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பை மத்திய நெடுஞ்சாலைத் துறை இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கும் என தெரிகிறது. இந்த கட்டண உயர்வால் காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தனியார் பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி டி.வி.மாசிலா மணி நியமிக்கப்பட்டுள்ளார்.


தனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணயக் குழுவின் புதிய தலைவர் நீதிபதி டி.வி.மாசிலாமணி | தனியார் பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி டி.வி.மாசிலா மணி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 3 ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார். தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி பள்ளிகள் செயல்படுகின்றன. தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக் கப்படுவதை ஒழுங்குபடுத்தும் வகை யில் கடந்த 2009-ம் ஆண்டு கல்விக் கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனியார் பள்ளிகளின் உள்கட் டமைப்பு வசதிகளை ஆய்வுசெய்து ஒவ்வொரு பள்ளிக்கும் குறிப்பிட்ட கட்டணத்தை நிர்ணயம் செய்து அரசுக்கு பரிந்துரை செய்யும். அதன் அடிப்படையில் தனியார் பள்ளி களுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப் படும். அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது புகார் செய்யவும், அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. தனியார் பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக்குழு தலைவராக பணியாற்றி வந்த நீதிபதி எஸ்.ஏ.சிங்காரவேலுவின் பதவிக்காலம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 30-ல் முடிவடைந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக புதிய தலைவர் யாரும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், தனியார் பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் புதிய தலைவராக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி டி.வி.மாசிலாமணியை நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் டி.உதயசந்திரன் வெளியிட்டுள்ளார். நீதிபதி மாசிலாமணி, பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார். கல்விக் கட்டண நிர்ணயக் குழுவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டதை தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரி குலேஷன், மேல்நிலை, சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநிலப் பொதுச் செய லாளர் கே.ஆர்.நந்தகுமார் வரவேற் றுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ''கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக தலை வர் நியமிக்கப்படவில்லை. இப்போது புதிய தலைவர் நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நடவடிக்கை எடுக்கலாம் கட்டணக் குழுவின் புதிய தலைவரான நீதிபதி டி.வி.மாசிலாமணி, தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் நிர்வாகச் செலவினங்கள் உயர்ந் துள்ளதையும், கட்டிடச் சான்று, உறுதிச் சான்று, தீயணைப்புத் துறையினர் சான்று, அங்கீகாரம், பல்வேறுவிதமான சான்றிதழ்கள் வாங்குவதற்கு செலவு, காப்பீட்டு கட்டணம், இவற்றை எல்லாம் கணக்கில்கொண்டு கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதற்குமேல் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம்" என்றார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்பங்களை இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.7 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி | ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்பங்களை இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தகுதித் தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 73 ஆயிரம் விண்ணப் பங்கள் விற்பனை ஆகியுள்ளன விண்ணப்ப விற்பனை நேற் றுடன் முடிவடைந்தது. இந்த நிலை யில், பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பங்களை தேர்வுகட்டணத் துக்கான செலானுடன் (கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250 மட்டும்) இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் அறிவிக்கப்பட்டுள்ள மையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வி, சாதி சான்றிதழ் நகல்கள் எதுவும் இணைக்க தேவையில்லை. தேர்வு கட்டணத்துக்கான செலான் மட்டும் போதும். பூர்த்தி செய்த விண்ணப் பத்தைச் சமர்ப்பிக்கச் செல்லும் போது அதை நகல் எடுத்துக் கொண்டுசெல்ல வேண்டும். அதில் கையெழுத்து மற்றும் சீல் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். அதை விண்ணப்பம் சமர்ப்பித் ததற்கான ஒப்புகைச்சீட்டாக பயன் படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு மையத்திலும் பெற் றுக்கொள்ளப்படும் விண்ணப்பங் கள் சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு அனுப்பப்படும். அங்கு விண்ணப்பங்கள் சரிபார்க் கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு ஆசிரி யர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப் படும். இணையதளத்திலிருந்து விண்ணப்ப எண்ணை பதிவுசெய்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் தனியே வெளியிடும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, March 21, 2017

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6, 7 தேதிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலை வழிகாட்டி முகாம் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6, 7 தேதிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலை வழிகாட்டி முகாம் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்து வழி காட்டும் வகையில் ஏப்ரல் 6, 7 தேதிகளில் வழிகாட்டி முகாம் கள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்தார். ஏப்ரல் 6, 7-ல் இந்த முகாம் நடத்தப்படுகிறது. இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் கள் மற்றும் மாவட்ட கல்வியி யல் ஆராய்ச்சி நிறுவன விரிவுரை யாளர்களுக்கு சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் தொடக்க விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, ''எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்புக்கு வழிகாட் டும் வகையில் முகாம் நடத்தப் படுவது நாட்டிலேயே இது முதல் முறை. இந்த வழிகாட்டி முகாம் கள் தமிழகம் முழுவதும் வட் டாரத்துக்கு ஒன்று என்ற அளவில் 500 இடங்களில் நடத்தப்படும். இதன்மூலம் கிராமப்புற மாண வர்கள் பெரிதும் பயன் பெறு வார்கள்'' என்றார். முன்னதாக, ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்றுப் பேசும்போது, ''இந்த வழிகாட்டி முகாம்களில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். இதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்'' என்றார். விழாவில் பயிற்சி கையேட்டை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் வெளியிட, முதல் பிரதியை தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி, பள்ளிக் கல்வித் துறை செயலர் டி.உதயச் சந்திரன் பெற்றுக் கொண்டனர். தமிழ்நாடு பாடநூல் கழக நிர் வாக இயக்குநர் மைதிலி ராஜேந் திரன், செயலர் கார்மேகம், அனை வருக்கும் கல்வி திட்ட மாநில இயக் குநர் பூஜா குல்கர்னி, மத்திய இடை நிலைக் கல்வி திட்ட (ஆர்எம்எஸ்ஏ) மாநில இயக்குநர் ஜி.அறிவொளி, பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆய்வக உதவியாளர் நியமனம் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பதவியில் 4,362 காலியிடங்களை நிரப்ப கடந்த 2015 மே 31-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் அரசு தேர்வுத் துறை நடத்திய இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். 2 ஆண்டுகள் நெருங்கி யும் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இத்தேர்வு குறித்து 10 நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கடந்த 2-ம் தேதி அறிவித்தார். அதன் பிறகும் முடிவுகள் வெளியிடப்படாதது குறித்து, நேற்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், ''ஆய்வக உதவியாளர் நியமனம் தொடர்பாக 2 அல்லது 3 நாட்களில் அரசாணை வெளியிடப்படும்'' என்றார். எழுத்துத் தேர்வுக்கு பிறகு நேர்காணல் நடத்தி, அதன்மூலம் ஆய்வக உதவியாளர்களை தேர்வு செய்ய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், நேர்காணல் மட்டுமின்றி, எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணையும் கணக்கில் கொண்டே ஆய்வக உதவியாளர் நியமனம் நடக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, நியமனத்துக்கு எழுத்துத் தேர்வு மதிப்பெண் சேர்க்கப்படுமா அல்லது எழுத்துத் தேர்வு மதிப்பெண், நேர்காணல் மதிப்பெண், கூடுதல் கல்வித்தகுதி, பணிஅனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் இருக்குமா என்பது அரசாணையில் தெரிவிக்கப்படும். எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களுக்கு மேற்படிப்பு, வேலைவாய்ப்பு வழிகாட்டி ஆலோசனை வழங்குவதற்கான பயிற்சி கையேட்டை பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட, முதல் பிரதியை பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி, பள்ளிக்கல்வித்துறை செயலர் டி.உதயச்சந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

செய்தித் துளிகள் | LATEST NEWS

 • 21/3/2017 | பள்ளி கல்வித்துறைக்கு போதிய ஆசிரியர்கள் உடனடி நியமனம் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல். 
 • 21/3/2017 | 6 மாதத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்கும் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல். 
 • 21/3/2017 | நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல். 
 • 21/3/2017 | எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்து வழி காட்டும் வகையில் ஏப்ரல் 6, 7 தேதிகளில் வழிகாட்டி முகாம் கள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்தார். ஏப்ரல் 6, 7-ல் இந்த முகாம் நடத்தப்படுகிறது.
 • 21/3/2017 | ஆய்வக உதவியாளர் நியமனம் தொடர்பாக 2 அல்லது 3 நாட்களில் அரசாணை வெளியிடப்படும் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல். நியமனத்துக்கு எழுத்துத் தேர்வு மதிப்பெண் சேர்க்கப்படுமா அல்லது எழுத்துத் தேர்வு மதிப்பெண், நேர்காணல் மதிப்பெண், கூடுதல் கல்வித்தகுதி, பணிஅனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் இருக்குமா என்பது அரசாணையில் தெரிவிக்கப்படும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, March 19, 2017

TNPSC RECRUITMENT 2017 | TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION-CHENNAI | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - ASSISTANT DIRECTOR | NO. OF VACANCIES - 4 | LAST DATE : 13.04.2017 | DATE OF EXAMINATION : 16.07.2017

TNPSC RECRUITMENT 2017 | TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION-CHENNAI | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - ASSISTANT DIRECTOR | NO. OF VACANCIES - 4 | LAST DATE : 13.04.2017 | DATE OF EXAMINATION : 16.07.2017
>>>>>>>
§DATE OF NOTIFICATION 15.03.2017
§EMPLOYMENT TYPE:Govt Job
§APPLICATION:ONLINE
§WEBSITE:http://www.tnpsc.gov.in/latest-notification.html
§NAME OF THE POST:ASSISTANT DIRECTOR
§EDUCATIONAL QUALIFICATION:REFER PROSPECTUS
§VACANCIES:4
§SALARY:Rs.15,600-39,100+Grade Pay Rs.5400
§SELECTION PROCEDURE:EXAM-OBJECTIVE TYPE OMR METHOD
§LAST DATE:13.04.2017
§DATE OF EXAMINATION:16.07.2017


List of Current Notifications
S No.Advt. No./ Date of NotificationName of the PostOnline RegistrationDate of ExaminationActivity

 

FromTo
NOTIFICATIONS - 2017
19/2017

ASSISTANT DIRECTOR OF INDUSTRIES AND COMMERCE (INDUSTRIAL CO-OPERATIVES) IN TAMIL NADU INDUSTRIES SUB.SERVICE

15.03.201713.04.201716.07.2017Apply Online

 

28/2017

ASSISTANT AGRICULTURAL OFFICER IN THE TAMIL NADU AGRICULTURAL EXTENSION SUB. SERVICE

08.03.201707.04.201702.07.2017Apply Online
37/2017

ASSISTANT WORKS MANAGER IN THE GOVT. PRESS IN TAMILNADU STATIONERY & PRINTING SERVICE

 

 

01.03.201729.03.201725.06.2017Apply Online
45/2017

GEOLOGIST/ASSISTANT GEOLOGIST IN VARIOUS DEPARTMENTS

 

22.02.201721.03.201724&25.06.2017Apply Online
53/2017

ADMISSION TO THE RASHTRIYA INDIAN MILITARY COLLEGE, DEHRADUN, JANUARY - 2018 TERM

08.02.201731.03.201701&02.06.2017 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

KV SCHOOL RECRUITMENT 2017 | KVS-THIRUVARUR | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - VARIOUS TEACHERS | NO. OF VACANCIES -MANY | LAST DATE : 29,30.03.2017 | DATE OF INTERVIEW : 29,30.03.2017

KV SCHOOL RECRUITMENT 2017 | KVS-THIRUVARUR | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - VARIOUS TEACHERS | NO. OF VACANCIES -MANY | LAST DATE : 29,30.03.2017 | DATE OF INTERVIEW : 29,30.03.2017
>>>>>>>
§DATE OF NOTIFICATION08.03.2017
§EMPLOYMENT TYPE:GOVT JOB
§APPLICATION:WALK IN INTERVIEW
§WEBSITE: www.kvthiruvarur.org
§NAME OF THE POST:VARIOUS TEACHERS
§EDUCATIONAL QUALIFICATION:REFER PROSPECTUS
§VACANCIES:-
§SALARY:AS PER NORMS
§SELECTION PROCEDURE:INTERVIEW METHOD
§LAST DATE:29,30.03.2017
§DATE OF INTERVIEW:29,30.03.2017
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, March 18, 2017

PGTRB | வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் புதிதாக 825 பேருக்கு ஆசிரியர் பணி | முதுகலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு ஏற்பாடு மும்முரம்.

250 நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு அரசு பள்ளிகளில் புதிதாக 825 பேருக்கு ஆசிரியர் பணி | வரும் கல்வியாண்டில் 250 நடு நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் அரசுப் பள்ளிகளில் புதிதாக 825 பேருக்கு பட்டதாரி ஆசிரியர், முது கலை பட்டதாரி ஆசிரியர் வேலை கிடைக்கும். 2017-18-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப் பட்டது. அதில், 2017-18-ம் ஆண்டில் 150 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர் நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளி யாக தரம் உயர்த்தப்படும்போது அப்பள்ளியில் புதிதாக 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) உருவாக்கப்படும். அதேபோல், ஓர் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும்போது அப்பள்ளியில் புதிதாக 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல்) தோற்றுவிக்கப்படும். அந்த அடிப்படையில் 150 நடு நிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதால் ஒரு பள்ளிக்கு 5 பட்டதாரி ஆசிரியர் கள் வீதம் மொத்தம் 750 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப் படும்போது ஒரு பள்ளிக்கு 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர் வீதம் மொத்தம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் புதிதாக உருவாகும். 50 சதவீத இடங்கள் அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தைப் பொறுத்தவரையில் 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீத இடங்கள் நேரடி நியமன முறை யிலும் (ஆசிரியர் தேர்வு வாரியத் தின் போட்டித் தேர்வு மூலம்) நிரப்பப் படுகின்றன. எனவே, புதிதாக உருவாக் கப்படும் 750 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீத இடங்கள் அதாவது, 375 இடங்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீத இடங்கள் அதாவது 450 இடங்கள் (மொத்தம் 900) ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நிரப்பப்படும். பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனம் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் மற்றும் வெயிட்டேஜ் மார்க் அடிப்படையிலும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் நடைபெறுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30-ம் தேதி நடைபெற உள்ளது. அதேபோல், ஏற்கெனவே அரசாணை வெளியிடப்பட்ட முதுகலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு ஏற்பாடுகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. எனவே, தற்போது புதிதாக உருவாகியுள்ள பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களும் இந்த தேர்வுகள் மூலமாக நிரப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

10-ம் வகுப்பு தேர்வுக்கு பின்னர் மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதியை திருத்த முடியாது ஐகோர்ட்டு உத்தரவு10-ம் வகுப்பு தேர்வுக்கு பின்னர் மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதியை திருத்த முடியாது ஐகோர்ட்டு உத்தரவு | 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பின்னர், மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதி, பெயர் ஆகியவற்றில் திருத்தம் செய்ய முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பி.கருணாகரன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- பிறந்த தேதி நான் 1992-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி பிறந்தேன். ஆனால், சட்டவிவரங்கள் தெரியாத என் பெற்றோர், 1989-ம் ஆண்டு ஜனவரி 19-ந் தேதி பிறந்ததாக பள்ளியில் சேர்க்கும்போது குறிப்பிட்டுவிட்டனர். நான் 10-ம் வகுப்பு தேர்வு எழுதும்போது, எனக்கு பிறப்பு சான்றிதழ் இல்லாததால், பள்ளி மாற்றுச்சான்றிதழில் உள்ள பிறந்த தேதியையே குறிப்பிட்டுவிட்டேன். அதன்பின்னர் பிளஸ்-2 தேர்விலும் அதேபோல குறிப்பிட்டிருந்தேன். இதன்பின்னர் கடந்த 2010-ம் ஆண்டு வானூர் குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். 10 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றில் 1992-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி நான் பிறந்ததாக பதிவு செய்யவேண்டும் என்ற உத்தரவை பெற்றேன். சான்றிதழ்கள் குற்றவியல் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், வருவாய் துறை அதிகாரியிடம், பிறப்பு சான்றிதழ் பெற்றேன். அதன்பின்னர், நான் படித்த பள்ளி நிர்வாகத்திடம் இருந்து, 1992-ம் ஆண்டு பிறந்தேன் என்று புதிய மாற்றுச்சான்றிதழை பெற்றேன். இந்த ஆவணங்களை எல்லாம் வைத்து, என்னுடைய 10 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதியை மாற்றித்தரும்படி தமிழக தேர்வுத்துறை செயலாளரிடம் கடந்த 2014-ம் ஆண்டு மனு செய்தேன். பலமுறை நேரில் சென்று முறையிட்டும், பிறந்த தேதியை திருத்தம் செய்து தராமல் உள்ளார். எனவே, என்னுடைய உண்மையான பிறந்த தேதியை குறிப்பிட்டு புதிய மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கும்படி தேர்வுத்துறை செயலாளருக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. எஸ்.எஸ்.எல்.சி. விதிகள் இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- எஸ்.எஸ்.எல்.சி. விதிகள், பிரிவு 5-ன்படி, வயது மற்றும் பெயர்களில் ஏதாவது திருத்தம் இருந்தால், அந்த திருத்தத்தை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதுவதற்கு முன்பே செய்துவிட வேண்டும். தேர்வுக்கு பின்னர், திருத்தங்களை செய்ய முடியாது என்று தெளிவாக கூறுகிறது. எனவே, மனுதாரரின் 10 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதியை திருத்தம் செய்வதற்கு, தேர்வுத்துறை செயலாளருக்கு அதிகாரமே கிடையாது. ஆனால், மனுதாரர் தன் பிறந்த தேதியை பெற்றோர் தவறுதலாக பள்ளியில் கொடுத்துவிட்டனர் என்கிறார். இதற்காக அவர் குற்றவியல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, பிறந்த தேதியை மாற்றவேண்டும் என்ற உத்தரவையும் பெற்றுள்ளார். அதிகாரம் இல்லை இந்த வழக்கில், மனுதாரர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், இப்படி ஒரு உத்தரவை குற்றவியல் கோர்ட்டு பிறப்பித்துள்ளது. உத்தரவு பிறப்பிதற்கு முன்பு உரிய விசாரணையை மேற்கொள்ளவில்லை. வேறு எந்த ஒரு ஆதார ஆவணங்களையும் பரிசீலிக்கவில்லை. மேலும், பிறந்த தேதியை மாற்றவேண்டும் என்று தேர்வுத் துறை செயலாளருக்கு உத்தரவிட குற்றவியல் கோர்ட்டுக்கு அதிகாரமே கிடையாது. இதுபோன்ற நடவடிக்கைகளை ஊக்குவித்தால், எதிர்காலத்தில் யார் வேண்டுமானாலும், குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, தன்னுடைய பிறந்த தேதியை மாற்றிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடும். தள்ளுபடி எனவே, இந்த வழக்கை ஏற்கமுடியாது. மனுதாரர் தான் 1992-ம் ஆண்டு பிறந்ததற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. மேலும், எஸ்.எஸ்.எல்.சி. விதிகளின்படி, 10-ம் வகுப்பு தேர்வுக்கு பின்னர் பிறந்த தேதியை மாற்ற முடியாது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் எண், பான் எண் கட்டாயம்

புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் எண், பான் எண் கட்டாயம் | இனிமேல் புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு அதன் உரிமையாளரின் செல்போன் எண், ஆதார் எண், பான் அட்டை எண் ஆகியவற்றை கட்டாயம் பெற வேண்டும் என்று தமிழக போக்குவரத்து கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். சுற்றறிக்கை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை கமிஷனர் தயானந்த் கட்டாரியா, அனைத்து மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கும் (ஆர்.டி.ஓ.) அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தற்போது போக்குவரத்து வாகனங்கள் பதிவு சான்றிதழ் தொடர்பான மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், புதிய வாகன உரிமையாளரின் செல்போன் எண், ஆதார் எண், பான் அட்டை எண் ஆகிய தகவல்களை சேர்ப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் மென்பொருளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கண்டிப்பாக வேண்டும் இந்த தகவல்கள் அனைத்தும் வாகன பதிவு சான்றிதழில் (ஆர்.சி. சான்றிதழ்) சேர்க்கப்பட வேண்டும். ஆனால் தற்போது அந்த தகவல்களை ஆர்.டி.ஓ. யாரும் சேகரிப்பதில்லை. எனவே இனிமேல் புதிய வாகனத்தை பதிவு செய்வதற்காக அதன் உரிமையாளரால் தரப்படும் விண்ணப்பத்தில், அவருடைய செல்போன் எண், ஆதார் எண், பான் எண் ஆகியவற்றை கண்டிப்பாக பெற வேண்டும் என்று பதிவு அதிகாரிகள் மற்றும் உதவி பதிவு அதிகாரிகள் ஆகியோருக்கு உத்தரவிடப்படுகிறது. அப்படி பெறப்படும் அந்த தகவல்கள் அனைத்தும் வாகன பதிவு சான்றிதழில் இடம் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

‘நீட்’ தேர்வு விவகாரத்தில் விலக்கு அளிக்க வலியுறுத்த தமிழக தலைமை செயலாளர் டெல்லியில் முகாம்

'நீட்' தேர்வு விவகாரத்தில் விலக்கு அளிக்க வலியுறுத்த தமிழக தலைமை செயலாளர் டெல்லியில் முகாம் | தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் ஆகியோர் டெல்லி சென்று உயர் அதிகாரிகளை சந்தித்து 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி வலி யுறுத்தினர். 'நீட்' தேர்வில் இருந்து தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல் லூரிகளில் உள்ள மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்ட சட்ட மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப் பாடி கே.பழனிசாமி ஏற்கெனவே சந்தித்து பேசினார். 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி வலியுறுத்தினார். கடந்த 8-ம் தேதி டெல்லி சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செய லாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன் பழகன், செயலாளர் சுனில் பலிவால் ஆகியோர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரை சந்தித்து வலியுறுத் தினர். இந்நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீண்டும் நேற்று டெல்லி சென்று உயர் அதிகாரி களை சந்தித்து பேசினர். அவர்களிடம் 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவிரைந்து நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொண்டனர். இந்நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீண்டும் நேற்று டெல்லி சென்று உயர் அதிகாரி களை சந்தித்து பேசினர். அவர்களிடம் 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவிரைந்து நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொண்டனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வணிகர்கள் தங்களது விவரங்களை ஜிஎஸ்டி இணையதளத்தில் விரைவில் பதிவு செய்ய வேண்டும் தமிழக அரசு வேண்டுகோள்வணிகர்கள் தங்களது விவரங்களை ஜிஎஸ்டி இணையதளத்தில் விரைவில் பதிவு செய்ய வேண்டும் தமிழக அரசு வேண்டுகோள் | பதிவு பெற்ற அனைத்து வணி கர்களும் தங்களது விவரங்களை ஜிஎஸ்டி இணையதளத்தில் விரை வில் பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய் திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது: சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்படுவதை முன் னிட்டு பதிவு பெற்ற அனைத்து வணிகர்களும் தங்களது விவரங் களை ஜிஎஸ்டி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கான வசதி விரைவில் முடிவடைய உள்ளது. தமிழ்நாடு வணிகவரித் துறையில் பதிவு பெற்ற வணிகர்கள் அனைவரும் ஜிஎஸ்டி இணையதளத்தில் தங்களது டிஜிட்டல் கையெழுத்து சான்றித ழுடன் (டிஎஸ்சி) விவரங்களை பதிவு செய்ய வேண்டும். நிறுவனத் தின் உரிமையாளர், பங்குதாரர் என்றால் ஆதார் எண் உதவியுடன் மின் கையொப்பம் இட்டு தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். ஏற்கெனவே ஜிஎஸ்டி இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்த பெரும்பாலான வணிகர்கள், டிஜிட்டல் கையெ ழுத்து சான்றிதழை மின் கையொப் பத்துடன் பதிவு செய்யவில்லை. எனவே, அனைத்து வணி கர்களும் உடனடியாக ஜிஎஸ்டி இணையதளத்தில் டிஜிட்டல் கையெழுத்து சான்றிதழுடன் தங் களது விவரங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வீடு வாங்க பிஎப் கணக்கில் இருந்து 90% பணம் எடுக்கலாம் புதிய விதிகளை அமல்படுத்த அரசு தீவிரம்வீடு வாங்க பிஎப் கணக்கில் இருந்து 90% பணம் எடுக்கலாம் புதிய விதிகளை அமல்படுத்த அரசு தீவிரம் | தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (இபிஎப்ஓ) உறுப்பினர்களாக உள்ள 4 கோடி பேரும் பயனடையும் வகையில் புதிய விதிமுறைகளைச் செயல் படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி சொந்தமாக வீடு வாங்க முயலும் இபிஎப் உறுப்பினர்கள் தங்களது சேமிப்பிலிருந்து 90 சதவீதத் தொகையை பெற முடியும். வீடு வாங்குவதற்கு முன்பணம் செலுத்த வசதியாக இந்த திருத்தத்தைக் கொண்டு வர அரசு உத்தேசித்துள்ளது. இத்தகவலை மாநிலங்களவை யில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார். இந்த திருத்தம் கொண்டு வருவதன் மூலம் தொழிலாளர்கள் தங்களது வீட்டுக் கடனுக்கான மாதாந்திர தவணைத் தொகையை செலுத்தவும் முடியும். புதிய இபிஎப் திட்டத்தில் பயனடைய விரும்பும் பயனாளிகள், ஒரு குழுவாக சேர்ந்து கூட்டுறவு சங்கம் தொடங்க வேண்டும். இதில் குறைந்தபட்சம் 10 உறுப்பினர்களாவது இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த சலுகையைப் பெற முடியும் என்று அமைச்சர் கூறினார். இபிஎப் திட்டத்தின் விதிகள் 1952-ல் மாற்றங்கள் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி பத்தி 68 பிடி-யில் உரிய திருத்தங் கள் செய்யப்படும் என்று எழுத்து மூலமான கேள்விக்கு பதிலளிக் கையில் தத்தாத்ரேயா கூறினார். இந்த திருத்தத்தின் மூலம் கூட்டுறவு சங்கம் அல்லது வீட்டு வசதி சங்கத்தில் உறுப்பினராக உள்ள (இந்த சங்கங்களில் குறைந்த பட்சம் 10 பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்) பணியாளர் வீடு வாங்க, மனை வாங்க, வீட்டை புதுப்பிக்க தனது இபிஎப் சேமிப்புத் தொகையில் 90 சதவீதத்தைப் பெற முடியும். இந்த திருத்தமானது, ஏற் கெனவே உள்ள கடனுக்கான மாதாந்திர சுலபத் தவணைகளை இபிஎப் கணக்கு மூலம் செலுத்து வதற்கும் வகை செய்கிறது. இபிஎப் சட்டத்தில் வீடு வாங்க வசதி எனும் பிரிவு சேர்க்கப்பட்டு, உறுப்பினர் சேர்த்த தொகையில் அதிகபட்சம் பெறுவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார். மார்ச் 2016 நிலவரப்படி இபிஎப் கணக்கில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 17.14 கோடியாகும். கணக்கி லிருந்து பணம் பெறுவதற்கான விதிமுறைகளுக்குள்பட்டவர் களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் அவர் கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ரூ.500 அச்சடிக்க ரூ.2.87; ரூ.2,000-க்கு ரூ.3.77 செலவு நிதித்துறை இணையமைச்சர் தகவல்

ரூ.500 அச்சடிக்க ரூ.2.87; ரூ.2,000-க்கு ரூ.3.77 செலவு நிதித்துறை இணையமைச்சர் தகவல் | ரூ.500 மற்றும் 2000 ரூபாய் நோட்டு களை அச்சடிக்க ஒரு நோட்டுக்கு ரூ.2.87 முதல் ரூ. 3.77 வரை செல வாகிறது என்று மத்திய அரசு கூறி யுள்ளது. இது தொடர்பாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேகவால் மாநிலங் களவையில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மாற்றி அளிக்கப்பட்ட பணத்துக்காக எவ்வளவு தொகை செலவிடப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. புதிய நோட்டுகள் தொடர்ந்து அச்சடிக்கப்பட்டு வருவதால், அதற்கான செலவிடப்பட்ட தொகை இன்னும் கணக்கிடப் படவில்லை என்றும் குறிப்பிட்டார். புதிய 500 / 2000 ரூபாய் நோட்டு கள் அச்சடிக்க ஒரு நோட்டுக்கு எவ்வளவு செலவாகிறது என்கிற கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் இதைக் குறிப்பிட்டார். பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப நோட்டுகள் தொடர்ந்து அச்சடிக் கப்படுவதாகவும் கூறினார். 2017, பிப்ரவரி 24 தேதிவரையில் இந்தியாவில் ரூ.11.64 லட்சம் கோடி புழக்கத்தில் உள்ளது. பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட தற்குப் பிறகு, 2016, டிசம்பர் 10-ம் தேதிவரை ரிசர்வ் வங்கிக்கு 12.44 லட்சம் கோடி பழைய நோட்டுகள் வந்துள்ளன. இந்த ரூபாய் நோட்டு களில் கள்ள நோட்டுகளை கண்டு பிடிக்கும் பணிகள் நடந்து வருகின் றன என்றும் கூறினார். மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கான தாள்களை, ஏற்கெனவே சப்ளை செய்து வரும் நிறுவனங்களிடமிருந்து ரிசர்வ் வங்கி கொள்முதல் செய்வ தாகவும், இந்திய ரூபாய் நோட் டுக்கு அளிக்கும் தாள்களை வேறு எவருக்கும் அளிக்கக்கூடாது என்கிற ஒப்பந்தம் அனைத்து சப்ளையர்களோடும் மேற்கொள் ளப்பட்டுள்ளது என்றும், பாது காப்பு மற்றும் தனித்தன்மை என்கிற அடிப்படையில் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன என்றார். ஜனவரி 4-ம் தேதிவரை 1.98 லட்சம் ஏடிஎம்களில் புதிய ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ப அளவுகள் மாற்றப்பட்டன என்றும், ஏடிஎம் இயந்திர தயாரிப் பாளர்களே குறிப்பிட்ட வங்கி களின் ஏடிஎம்களில் மறு அளவு நடவடிக்கைகளை மேற்கொண்ட னர் என்றும் கூறினார். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு வங்கி கள் உனடியாக வாடிக்கையாளர் களுக்கு தீர்வுகளை வழங்கினர் என்றும் மற்றொரு கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, March 17, 2017

தமிழக அரசு பட்ஜெட் 2017 | 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும், 150 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்...விரிவான தகவல்கள்...

 • தமிழக அரசு  பட்ஜெட் 2017 | 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்
 • தமிழக அரசு  பட்ஜெட் 2017 | 150 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்
 • தமிழக அரசு  பட்ஜெட் 2017 |  7-வது ஊதியக்குழு பரிந்துரைபடி அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதியம்மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந் துரைகளில் உள்ள அனைத்து கூறுகளையும் ஆய்வுசெய்து அதன் அடிப்படையில் பரிந்துரைகளை வழங்கும் பொருட்டு உயர் அலுவலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் நிர்ணயிக்கப்படும்.
 • தமிழக அரசு  பட்ஜெட் 2017 | தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையில் காலியாக உள்ள இடங்களுக்கு, மேலும் 10,500 நபர்களை இந்த ஆண்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தேர்வு செய்யும்.
 • தமிழக அரசு  பட்ஜெட் 2017 |  2017-18-ம் ஆண்டில் 150 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும். பள்ளிக்குச் செல்லவில்லை என்று கண்டறியப்பட்ட 36 ஆயிரத்து 930 குழந்தைகளை வரும் ஆண்டில் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 • தமிழக அரசு  பட்ஜெட் 2017 | அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்க பட்ஜெட்டில் ரூ.180 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
 • தமிழக அரசு  பட்ஜெட் 2017 |  அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கான ரூ.139 கோடி உள்பட, அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் மானியம் வழங்குவதற்காக பட்ஜெட்டில் ரூ.320 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • தமிழக அரசு  பட்ஜெட் 2017 |  கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவுக் கட்டணத்தை மாதம் ஒன்றிற்கு ரூ.875-ல் இருந்து ரூ.1000 ஆகவும், பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவுக் கட்டணத்தை மாதம் ஒன்றிற்கு ரூ.755-ல் இருந்து ரூ.900 ஆகவும் இந்த அரசு உயர்த்தி வழங்கும்.
 • தமிழக அரசு  பட்ஜெட் 2017 |  மாணவர்களுக்கு மடிக் கணினிகள் வழங்க ரூ.758 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 1-ம் தேதி தொடங்குகிறது. இப்பணியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். கடந்த 2-ம் தேதி தொடங்கிய எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு 28-ம் தேதி முடிவடைகிறது. விருப்ப மொழித்தாள் தேர்வு 30-ம் தேதி நடக்கிறது. தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியிடப்படும் என்று முன்கூட்டியே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 • தமிழக அரசு  பட்ஜெட் 2017 |  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் படிப்பை பாதியில் நிறுத்துவதை குறைக்கும் வகையில் சிறப்பு ஊக்கத் தொகையாக அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறதுஇந்த திட்டத்துக்கு 2017-18-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.314 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • தமிழக அரசு  பட்ஜெட் 2017 |  அனைவருக்கும்  கல்வி இயக்கத்தின் (எஸ்எஸ்ஏகீழ் முந்தைய ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகைகள் ரூ.1,476 கோடியும்அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்தின் (ஆர்எம்எஸ்ஏகீழ் ரூ.1,266 கோடியும் மத்திய அரசு வழங்காத நிலையிலும் மாநில அரசு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து இந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. 2017-18-ம் ஆண்டில் எஸ்எஸ்ஏ திட்டத்துக்கு ரூ.2,656 கோடியும்ஆர்எம்எஸ்ஏ திட்டத்துக்கு ரூ.1,194 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனபட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.26 ஆயிரத்து 932 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
 • தமிழக அரசு  பட்ஜெட் 2017 |  அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு ரூ.139 கோடி உட்பட அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் மானியம் வழங்க பட் ஜெட்டில் ரூ.320 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் உயர்கல்வித் துறைக்காக ரூ.3 ஆயிரத்து 680 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • தமிழக அரசு  பட்ஜெட் 2017 |  பள்ளிகளில் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள், குடிநீர் வசதி, சுற்றுச்சுவர், சாய்வு தளங்கள், மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி கழிவறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. கடந்த நிதி ஆண்டில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.441 கோடி ஒதுக்கப்பட்டது. பள்ளிகளில் உள்ள கழிவறைகளில் சுகாதாரத்தைப் பேணும் வகையில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ரூ.57 கோடியே 63 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நபார்டு வங்கியிடமிருந்து பெறப்படும் கடனுதவியுடன் சேர்த்து பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2017-18-ம் ஆண்டில் ரூ.352 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ரூ.339 க்கு தினசரி 2 ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் புதிய சலுகை

ரூ.339 க்கு தினசரி 2 ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் புதிய சலுகை | பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் புதிய சலுகைத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி ரூ.339க்கு தினசரி 2 ஜிபி 3ஜி டேட்டா, பிஎஸ்என்எல் எண்களுக்குள் எல்லையில்லா அழைப்பு வசதியை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, ரூ.339-க்கு, 28 நாட்களுக்கு பிஎஸ்என்எல் நெட்வொர்க் எண்களுக்குள் அளவில்லாமல் பேசிக்கொள்ளலாம். மேலும் தினசரி 2 ஜிபி 3ஜி டேட்டாவினை பயன்படுத்தலாம். "ஸ்பெசல் டாரிப் வவுச்சர்'' என்கிற காம்போ ஆபரில் இந்த சலுகை 90 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ தற்போது தினசரி 1 ஜிபி 4 ஜி டேட்டாவினை தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. மேலும் ஜியோ நெட்வொர்க்கிற்குள் இலவச அழைப்பு வசதியையும் அளிக்கிறது. ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு ஜியோ பிரைம் சேவையில் வாடிக்கையாளர்கள் ரூ.99க்கு பதிவு செய்து கொண்டால் 303 ரூபாய்க்கு எல்லையில்லா டேட்டா மற்றும் அழைப்பு வசதியை பெறலாம் என அறிவித்துள்ளது. இந்த நிலையில் தொலைத் தொடர்பு வட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா சிறப்பான சலுகை என்று பிஎஸ்என்எல் குறிப்பிட்டுள்ளது. தொலைத் தொடர்பு துறையின் தற்போதைய போக்கை புரிந்துகொண்டு எங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளோம் என்று பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கன்ஸ்யூமர் மொபிலிட்டி இயக்குநர் ஆர் கே மிட்டல் கூறியுள்ளார். புதிய திட்டத்தில் இதர நெட்வொர்க் எண்களுக்கு தினசரி 25 நிமிடங்களுக்கு இலவச அழைப்பு வசதியும், அதன்பிறகு 1 நிமிடத்துக்கு மேற்பட்ட அழைப்புக்கு 25 பைசா என்கிற கட்டணச் சலுகையும் அறிவித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, March 15, 2017

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்தி அளிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசுஊழியர்களுக்கும் பழையஊதிய விகிதத்தில் 7% அகவிலைப்படிஉயர்வு வழங்கப்பட உள்ளது

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்தி அளிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் 48.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள். ஓய்வூதியம் பெறும் 55.51 லட்சம் பேரும் இதனால் பயனடைவார்கள். மேலும், ஐஐடி சட்டத்திருத்த மசோதாவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது. பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் ஐஐடியை நடத்தவும், நாடு முழுவதும் புதிய 50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை அமைக்கவும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கவும், திட்டப்பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது | மத்திய அரசு ஊழியர்களில் பழையஊதிய விகிதத்தில் பெறுபவர்களுக்கு 7% அகவிலைப் படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.அதனால் தமிழக அரசுஊழியர்களுக்கு 7% அகவிலைப்படிஉயர்வு விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட உள்ள 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பாட வாரியாக வெளியிட வேண்டும் என்று தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட உள்ள 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பாட வாரியாக வெளியிட வேண்டும் - தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கோரிக்கை | ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட உள்ள 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பாட வாரியாக வெளியிட வேண்டும் என்று தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2012, 2013, 2014-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு புதிதாக 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது. இதில், பள்ளிக் கல்வித்துறையில் 286 பணியிடங்கள், 623 பின்னடைவு இடங்கள் (பேக்-லாக் வேகன்சி), அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (ஆர்எம்எஸ்ஏ) 202 பணியிடங்கள் அடங்கும். ஏற்கெனவே நடந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது கூடுதலாக வேறு இளங்கலை பட்டம் பெற்றவர்கள், முன்பு நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்கள், பிஎட் படித்துக் கொண்டிருக்கும்போது தகுதித் தேர்வில் தற்போது அப்படிப்பை முடித்தவர்கள் தேவையான விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யுமாறு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான கடைசி தேதி மார்ச் 20-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதல் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள். ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதுகுறித்து விளக்கம் பெற சென்னை டிபிஐ வளாகத்தில் ஈ.வி.கே. சம்பத் மாளிகை கட்டிடத்தில் இயங்கி வரும் ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் ஆலோசனை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் 4-வது மாடியில்தான் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது. முந்தைய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள நிலையில், அக்காலியிடங்களை பாட வாரியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆன்லைனில் விவரங்களை பதிவேற்றம் செய்வது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தகவல் மையத்துக்கு நேற்று வந்திருந்த பட்டதாரி ஆசிரியர்கள் கூறியதாவது: பள்ளிக் கல்வித்துறை, ஆர்எம்எஸ்ஏ என பல்வேறு பிரிவுகளின் கீழ் 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப் போவதாக அறிவித்துள்ளனர். ஆனால், எந்தெந்த பாடங்களில் எவ்வளவு இடங்கள் நிரப்பப்பட உள்ளன என்ற விவரம் வெளியிடப்படவில்லை. பாட வாரியாக காலியிடங்களை வெளியிட்டால்தான் பணிவாய்ப்பு கிடைக்குமா என்று பல்வேறு கட் ஆஃப் மதிப்பெண் பெற்றிருக்கும் ஆசிரியர்களால் ஊகிக்க முடியும். பாட வாரியான காலியிடங்கள் வெளியிடப்படாததால் குழப்பம் ஏற்படுகிறது. இந்த குழப்பத்தைப் போக்கும் வகையில் பாடப்பிரிவு மற்றும் இடஒதுக்கீடு வாரியாக பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். பாட வாரியாக காலியிடங்களை வெளியிட்டால்தான் பணிவாய்ப்பு கிடைக்குமா என்று பல்வேறு கட் ஆஃப் மதிப்பெண் பெற்றிருக்கும் ஆசிரியர்களால் ஊகிக்க முடியும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, March 14, 2017

DSE LAB ASST RESULT SOON | பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு ஓரிரு நாளில் வெளியிடப்பட உள்ளது.

பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது? | கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப் போது வெளியிடப்படும்? | அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நேரடியாக நிரப்பும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட் டது. இத்தேர்வை தமிழகம் முழு வதும் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்ற போதிலும் தேர்வெழுதிய வர்களில் பெரும்பாலானோர் பட்ட தாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு முடிந்து ஏறத்தாழ 2 ஆண்டு கள் நெருங்கும் நிலையில் எழுத்துத்தேர்வின் முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார். பணி நியமன முறை குறித்து முடிவெடுக்கப்பட்டதும் அதற்கான அடுத்த கட்டப் பணிகள் உடனே மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தனர். இந்நிலையில் பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு ஓரிரு நாளில் வெளியிடப்பட உள்ளது.  
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ்-2 வேதியியல் தேர்வில் காப்பி அடித்ததாக 17 பேர் பிடிபட்டனர் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவிகள் கருத்து

பிளஸ்-2 வேதியியல் தேர்வில் காப்பி அடித்ததாக 17 பேர் பிடிபட்டனர் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவிகள் கருத்து | பிளஸ்-2 வேதியியல் தேர்வில் காப்பி அடித்ததாக 17 பேர் பிடிபட்டனர். கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். பிளஸ்-2 வேதியியல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த 2-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று வேதியியல் மற்றும் அக்கவுண்டன்சி தேர்வுகள் நடைபெற்றன. சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு வந்த கிரெசன்ட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் மகரிஷி வித்யாமந்திர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேர்வு குறித்து கூறியதாவது:- கேள்விகள் கடினம் 1 மதிப்பெண் கேள்விகளில் சில பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டு இருந்தன. பெரும்பாலானவர்கள் பாடத்திற்கு பின்புறத்தில் கொடுக்கப்படும் கேள்விகளுக்கு உரிய பதிலைத்தான் படித்து இருப்பார்கள். அதுபோலத்தான் நாங்களும் படித்தோம். அதன் காரணமாக அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க சற்று கடினமாக இருந்தது. மேலும் 3 மதிப்பெண் கேள்வி நீண்ட அளவில் பதில் அளிக்கும் வகையில் இருந்தது. 5 மதிப்பெண் கேள்விகளும் பெரிய அளவில் பதில் அளிக்க வேண்டி இருந்தது. அதன் காரணமாக விடை எழுத நேரம் போதாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். வேதியியல் ஆசிரியை ஒருவர் கூறுகையில், '3 மதிப்பெண் கேள்விகள் நீண்ட அளவில் பதில் அளிக்கும் வகையில் உள்ளது' என்றார். 17 பேர் பிடிபட்டனர் நேற்று நடந்த தேர்வுகளில் காப்பி அடித்ததாக 25 பேர் பிடிபட்டனர். அவர்களில் 14 பேர் பள்ளிக்கூட மாணவர்கள். 11 பேர் தனித்தேர்வர்கள். வேதியியல் தேர்வில் 17 பேரும், அக்கவுண்டன்சி தேர்வில் 8 பேரும் பிடிபட்டனர். அதாவது திருச்சி மாவட்டத்தில் 5 மாணவர்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் 4 மாணவர்கள், திருவள்ளூர், சேலம், விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் தலா ஒரு மாணவரும் காப்பி அடித்ததாக பிடிபட்டனர். கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தலா 4 தனித்தேர்வர்களும், சென்னை மாவட்டத்தில் 3 தனித்தேர்வர்களும் பிடிபட்டனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வங்கிகள், ஏ.டி.எம். மையங்களில் இருந்து பணம் எடுக்க விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டது. இதற்கான உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது.

பணத்தட்டுப்பாடு நீங்கியதால் நடவடிக்கை வங்கிகள், ஏ.டி.எம். மையங்களில் இருந்து பணம் எடுக்க கட்டுப்பாடு அனைத்தும் நீக்கம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு | கருப்பு பணம் பதுக்குதல், கள்ளநோட்டு புழக்கம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி உதவி போன்ற குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த நோட்டுகளை வங்கிகள் மூலம் திரும்ப பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பணத்தட்டுப்பாடு உயர் மதிப்பு கொண்ட இந்த நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்களிடையே பணப்புழக்கம் வெகுவாக குறைந்தது. வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களிலும் கடும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் இருந்து மக்கள் பணம் எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் விதித்தன. படிப்படியாக தளர்வு பின்னர் இந்த பணத்தட்டுப்பாட்டை போக்க புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விடப்பட்டன. இதனால் பணத்தட்டுப்பாடு மெல்ல மெல்ல நீங்கியதுடன், வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களிலும் நிலைமை ஓரளவு சீரடைய தொடங்கியது. இதைத்தொடர்ந்து பணம் எடுக்க விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. நடப்பு கணக்கு மற்றும் சேமிப்பு கணக்குகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் கடந்த மாதம் 1-ந் தேதி நீக்கப்பட்டன. சேமிப்பு கணக்கில் இருந்து வாரந்தோறும் எடுக்கும் உச்சவரம்பை ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி கடந்த மாதம் 20-ந் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. முற்றிலும் நீக்கம் மேலும் விரைவில் நிலைமை முற்றிலும் சீரடையும் என அறிவித்து இருந்த ரிசர்வ் வங்கி, வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் மார்ச் 13-ந் தேதிக்குப்பின் (நேற்று) விலக்கிக்கொள்ளப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி நேற்று முதல் இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் இருந்து பணம் எடுப்பதற்கு நவம்பர் 8-ந் தேதிக்கு முன் எந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டதோ, அவை அனைத்தும் தற்போது அமலுக்கு வந்துள்ளன. கள்ள நோட்டுகள் இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆர்.காந்தி நேற்று வெளியிட்டார். இது குறித்து அவர் கூறுகையில், 'சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்புகள் மட்டும் கடந்த சில நாட்களாக அமலில் இருந்தது. தற்போது பணப்புழக்கம் சீரடைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் நீக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது' என்றார். புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், 'தற்போது வெளியாகி இருக்கும் கள்ள நோட்டுகள் வெறும் புகைப்பட நகல்கள்தான். இது கள்ளநோட்டு அல்ல. இதை சாதாரண மனிதர்களாலும் கண்டுபிடிக்க முடியும். அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியிடப்பட்டு உள்ள புதிய நோட்டுகளை கள்ள நோட்டாக தயாரிப்பது அவ்வளவு சுலபம் அல்ல' என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, March 12, 2017

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைக்காததால் மாணவர்கள் குழப்பம் மீண்டும் டெல்லி செல்கிறார் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைக்காததால் மாணவர்கள் குழப்பம் மீண்டும் டெல்லி செல்கிறார் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் | நீட் தேர்வில் இருந்து தமிழகத் துக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் இன்னும் ஒப்புதல் அளிக்காததால், மாணவர்களும், பெற்றோரும் குழப்பத்தில் உள்ளனர். இதுதொடர்பாக மத்திய அமைச்சர்களிடம் வலி யுறுத்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அடுத்த வாரம் மீண்டும் டெல்லி செல்கிறார். நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2017-18ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (NEET - நீட்) வரும் மே 7-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் இத்தேர்வுக்கு நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண் ணப்பித்துள்ளனர். சுமார் 1,500 இடங்களில் தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் இத்தேர்வு நடக்க உள்ளது. இதற்கிடையில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங் களுக்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்க வகைசெய்யும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இந்த 2 மசோதாக்களும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதுவரை குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கவில்லை. இதுதொடர்பாக அரசு மருத் துவர்கள், பட்டமேற்படிப்பு மருத்து வர்கள் சங்கத்தின் (எஸ்டிபிஜிஏ) மாநிலத் தலைவர் டாக்டர் என்.லட்சுமி நரசிம்மன் கூறிய தாவது: தனியார் பள்ளிகளில் படிக்கும் வசதிபடைத்த மாணவர்கள் நீட் தேர்வுக்காக பயிற்சி மையங்களில் சேர்த்து படிக்கின்றனர். மாநில பாடத்திட்டத்தில் படிப்பவர்களால் நீட் தேர்வு எழுத முடியாது. நீட் தேர்வு நெருங்குவதால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களும், பெற்றோரும் பெரும் குழப்பத்தில் உள்ளனர். நீட் தேர்வு அமலுக்கு வந்தால், கிராமப்புற மாணவர்கள் டாக்டராக முடியாது. எனவே, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது: நீட் தேர்வு தொடர்பாக கடந்த 8-ம் தேதி டெல்லி சென்று, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்தோம். 'மத்திய அரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வை தமிழகம் எதிர்ப்பதாக நினைக்க வேண்டாம். தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் இடங்களுக்கு நீட் தேர்வு நடத்துவதில் பிரச்சினை இல்லை. தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாநில அரசு இடங்களுக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். பிளஸ் 2 மதிப் பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும். மாநில பாடத் திட்டத் தில் படிக்கும் மாணவர்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடிய வில்லை. அவர்களுக்காகவே விலக்கு கேட்கிறோம்' என்று தெரிவித்தோம். அதை ஏற்றுக் கொண்டனர். இதுதொடர்பாக அடுத்த வாரம் மீண்டும் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளோம். இவ்வாறு சி.விஜய பாஸ்கர் கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உதவி பொறியாளர் பணிக்கு வெளிப்படையான நேர்காணல் மின்வாரியம் தகவல்

உதவி பொறியாளர் பணிக்கு வெளிப்படையான நேர்காணல் மின்வாரியம் தகவல் | மின்வாரிய உதவி பொறியாளர்கள் நியமனத்துக்கான நேர்காணலை வெளிப்படையாக, நேர்மையாக நடத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக மின்வாரியம் தெரி வித்துள்ளது. தமிழக மின்வாரியத்தில் உதவி பொறியாளர்கள் நியமனத்துக்கான நேர்காணல் நாளை (13-ம் தேதி) தொடங்கி 18-ம் தேதி வரை நடக்க உள்ளது. நேர்காணல் வெளிப் படையாக நடக்கும் வகையில், மின்வாரியம் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் தலைமையில் குழுக்கள் அமைக் கப்பட்டு நேர்காணல் நடத்தப்பட உள்ளது. நேர்காணல் குழுக்களில் இடம் பெற உள்ள நபர்கள் ஒவ்வொரு நாளும் குலுக்கல் முறையில் மாற்றப்படுவர். இதுமட்டு மின்றி, விண்ணப்பதாரர்கள் தங் களை எந்த குழுவினர் நேர்காணல் செய்ய வேண்டும் என்பதையும் குலுக்கல் முறையில் அவர்களே நேர் காணல் அரங்கில் தேர்ந்தெடுக்கவும் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நேர்காணல் முற்றிலும் வெளிப்படையாக, நேர்மையாக நடத்தப்படும். இதுசம்பந்தமாக இடைத்தரகர்கள் கூறும் தவறான தகவல்களை யாரும் நம்ப வேண் டாம் என்று மின்வாரியம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE
Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.