-->

Saturday, February 25, 2017

TRB-TNTET 2017 | ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 6 முதல் விண்ணப்பம் விநியோகம்.


ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 6 முதல் விண்ணப்பம் விநியோகம் | ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 6-ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. அதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (தாள்-1) ஏப்ரல் 29-ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும். பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு ஏப்ரல் 30-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மார்ச் 6 முதல் 22-ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 23-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண் ணப்ப விளக்கவுரை, விண்ணப்பம் வழங்கப் படும் மையங்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் இடங்கள் பற்றிய விவரம் விரைவில் இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் காகர்லா உஷா அறிவித்துள்ளார். இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை ஆசிரியர் பயிற்சி டிப்ளமா (டிடிஎட்) முடித்தவர்கள் எழுதலாம். பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வை இளங்கலை பட்டப் படிப்புடன் பிஎட் முடித்தவர்கள் எழுதலாம். தமிழ் இலக் கிய படிப்பைப் பொருத்தவரையில், பி.லிட். பட்டத்துடன் பிஎட் அல்லது டிடிஎட் அல்லது தமிழ் புலவர் பயிற்சி (தமிழ் பண்டிட் பயிற்சி) படித்தவர்கள் எழுதலாம். தற்போது இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர் களும் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC POSTS INCLUDED IN CCS-I EXAMINATION (GROUP-I SERVICES) OFFICIAL TENTATIVE ANSWER KEYS DOWNLOAD | TNPSC குரூப்-1 தேர்வுக்கான ‘கீ ஆன்சர்’ தேர்வுக்கான உத்தேச விடைகளை (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.


குரூப்-1 தேர்வுக்கான 'கீ ஆன்சர்' வெளியீடு | துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட பதவி களில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத்தேர்வு கடந்த 19-ம் தேதி நடை பெற்றது. இத்தேர்வை தமிழகம் முழு வதும் ஒரு லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினர். இந்த நிலையில், தேர்வுக்கான உத்தேச விடைகளை (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிட்டுள்ளது.

OFFICIAL TENTATIVE ANSWER KEYS DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, February 24, 2017

TNTET 2017 ANNOUNCED BY TRB | TNTET 2017 குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம் | விண்ணப்ப விநியோகம் துவங்கும் நாள்-06.03.2017 | விண்ணப்பிக்க கடைசி நாள் 22.03.2017 | தேர்வு நாள் 29,30-04-2017...விரிவான விவரங்கள் ...

TNTET 2017 ANNOUNCED BY TRB  | TNTET 2017 குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம் | விண்ணப்ப விநியோகம் துவங்கும் நாள்-06.03.2017 | விண்ணப்பிக்க கடைசி நாள் 22.03.2017 | தேர்வு நாள் 29,30-04-2017...விரிவான விவரங்கள் ...



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, February 23, 2017

TNTET 2017 BIG BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெற உள்ளது என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.


TNTET 2017 BIG BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெற உள்ளது என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். அதற்கான விண்ணப்பங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாத உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் ப்பள்ளிகளில் விண்ணப்ப விநியோகம் துவங்க உள்ளது. விண்ணப்பம் பெற கட்டணம் ரூபாய் 50 | தேர்வுக்கட்டணம் ரூபாய் 500 / 250 (IN CHALLAN).  

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PLUS TWO-SSLC MARCH 2017 RESULT DATE ANNOUNCED | பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு மே 12ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 19ம் தேதியும் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.


PLUS TWO-SSLC MARCH 2017 RESULT DATE ANNOUNCED | பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு மே 12ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 19ம் தேதியும் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.முதல் முறையாக முடிவுகள் குறித்த தேதி தேர்வுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC COUNSELLING FOR THE POST OF DEO | தமிழ்நாடு பள்ளி கல்வித் துறையில் 2012-ஆம் ஆண்டிற்கான, மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்குரிய 11(9+2) காலிப்பணியிடங்களுக்கு கலந்தாய்வு 01.03.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் 28 விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.



TNPSC COUNSELLING FOR THE POST OF DEO | தமிழ்நாடு பள்ளி கல்வித் துறையில் 2012-ஆம் ஆண்டிற்கான, மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்குரிய 11(9+2) காலிப்பணியிடங்களுக்கு கலந்தாய்வு 01.03.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் 28 விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தி அறிவிப்பு தமிழ்நாடு பள்ளி கல்வித் துறையில் 2012-ஆம் ஆண்டிற்கான, மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்குரிய 11(9+2) காலிப்பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும்பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 14.02.2014-ஆம் நாளிட்ட அறிவிக்கையின் வாயிலாக விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. மேற்காணும் பதவிக்கான நேர்காணல் தேர்வு 19.01.2017 அன்று நடைபெற்றது. இப்பதவிக்கான கலந்தாய்வு 01.03.2017 அன்று சென்னை பிரேசர் பாலச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் 28 விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இப்பதவிக்கான தரவரிசை பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கான அழைப்பாணை அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாளில் நடைபெறவிருக்கும் கலந்தாய்வில் கலந்துகொள்ளத் தவறும் விண்ணப்பதாரர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படமாட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது. செயலாளர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Tamil Nadu Public Service Commission PRESS RELEASE The Tamil Nadu Public Service Commission in its notification dated 14.02.2014 had invited applications from eligible candidates for appointment by direct recruitment for 11 (9+2) vacancies in the Post of District Educational Officer in the Tamil Nadu School Educational Service, 2012. The Oral Test for the said post was held on 19.01.2017. The Counselling has been scheduled to be held in the office of the Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, V.O.C. Nagar, Chennai-600003 on 01.03.2017. A total no. of 28 candidates have been called for the Counselling. The Ranking List for the said post has been published in the Commission's website (i.e., www. tnpsc.gov. in). The Notice of Counselling has been sent to all the candidates through Speed Post. If the candidates fail to appear for Counselling on the said date, they will not be given any further chance to appear for the same. Secretary Tamil Nadu Public Service Commissionஇவ்வாறு அந்த செய்திக்குறி்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

DOWNLOAD RANK LIST

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC GR-II A(NON-INTERVIEW POSTS) - II PHASE CERTIFICATE VERIFICATION | TNPSC GR-II A(NON-INTERVIEW POSTS) கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வாணைய அலுவலகத்தில் 01.03.2017 முதல் 10.03.2017 வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.


TNPSC GR-II A(NON-INTERVIEW POSTS) - II PHASE CERTIFICATE VERIFICATION | TNPSC GR-II A(NON-INTERVIEW POSTS) கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வாணைய அலுவலகத்தில் 01.03.2017 முதல் 10.03.2017 வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  Tamil Nadu Public Service Commission தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-II (தொகுதி IIA-ல் அடங்கிய) 2014-2015 மற்றும் 2015-2016 - [Combined Civil Services Examination-II (Group-IIA Services) (Non-interview posts)]- நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 12.10.2015 மற்றும் 20.10.2015 ஆம் நாளிட்ட அறிவிக்கைகள் வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 24.01.2016 அன்று நடைபெற்றது. மேற்படி எழுத்துத் தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள், தரவரிசை விவரம் 08.06.2016 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தெரிவு தொடர்பான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை-3, பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 01.03.2017 முதல் 10.03.2017 வரை நடைபெறும். இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய கால அட்டவணை பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணை விரைவஞ்சல் மூலம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணையினை தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இவ்விவரங்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நடைபெற உள்ள இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், மொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டு கொள்கை, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அழைக்கப்பட்டுள்ளனர். எனவே அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. விண்ணப்பதாரர்கள் அளித்துள்ள தகவல்கள், தவறாக இருக்கும் பட்சத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. செயலாளர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE The Tamil Nadu Public Service Commission in its Notification dated 12.10.2015 and Supplement Notification dated 20.10.2015 had invited applications for selection of candidates for appointment by direct recruitment to posts included in Combined Civil Services Examination-II (Group-IIA Services) (Non-interview posts) 2014 – 2015 and 2015-2016. The Written Examination was held on 24.01.2016 and the details of written examination marks and rank has been hosted in the Commission's website on 08.06.16. The II Phase of Certificate verification is scheduled to be held from 01.03.2017 to 10.03.2017 at the O/o. Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, VOC Nagar, Chennai – 600 003 (Near Broadway Bus Stand/Fort Railway Station). 2. The schedule for II Phase of Certificate Verification (as per Rank order) has been hosted in the Commission's Website. The intimation memos are sent to the candidates individually by speed post about the date and time of the II Phase of Certificate Verification. The same may also be downloaded from the Commission's website (www.tnpsc.gov.in). The candidates have also been informed by means of SMS and E-mail. 3. Candidates are admitted to the II Phase of Certificate Verification based on the marks obtained in the Written Examination, Rank and claims made by them in their On-line applications. If their claims are found to be false or incorrect, they will not be considered for further course of selection process. Mere admission to the Certificate verification does not confer on them any right for selection. 4. The allotment to the posts is subject to availability of vacancies in their respective reservation categories when they reach their turn as per their rank, rule of reservation and subject to their eligibility. 5. Candidates who do not appear for II Phase of Certificate Verification on the date and time allotted to them will not be given any further chance to appear for the same. Date: 09.02.2017 Secretaryஇவ்வாறு அந்த செய்திக்குறி்ப்பில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பித்த எஸ்எஸ்எல்சி தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்


சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பித்த எஸ்எஸ்எல்சி தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் | அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மார்ச் மாதம் நடைபெறவுள்ள எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்கு சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் கடந்த 16 மற்றும் 17-ம் தேதியில் ஆன்லைனில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை 23-ம் தேதி (இன்று வியாழக்கிழமை) முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு அரசு தேர்வுத் துறையின் இணைதளத்துக்குள் (www.dge.tn.gov.in) சென்று "ஹால் டிக்கெட் டவுன்லோடு" என்ற பகுதியை கிளிக் செய்து அதில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, February 22, 2017

தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க புதிய அலுவலர் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க புதிய அலுவலர் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. | 7 வது சம்பள கமிஷன் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தனி குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இக்குழுவில் முதன்மை செயலாளர் , நிதித்துறை கூடுதல் செயலாளர் உள்ளிட்ட 5 பேர் இடம்பெற உள்ளனர். இக்குழு, ஊதிய விகிதத்தை மாற்றி அமைப்பது தொடர்பான பரிந்துரைகளை 4 மாதங்களுக்குள் தமிழக அரசுக்கு வழங்கும். 7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி மு பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், அரசுப் பணியாளர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டவுடன், தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்கள். அவருடைய அறிவிப்பை செயல்முறைபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து எனது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று இன்று நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.. செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க "அலுவலர் குழு" ஒன்றை உடனடியாக அமைக்க உத்திரவிட்டுள்ளேன். இக்குழுவில் கீழ்கண்ட அலுவலர்கள் உறுப்பினர்களாக இருப்பர் : 1. கூடுதல் தலைமை செயலாளர், நிதித்துறை 2. முதன்மை செயலாளர், உள்துறை 3. முதன்மை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை 4. செயலாளர், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை 5. Dr. பி.உமாநாத், – உறுப்பினர் செயலாளர். 2) இந்த "அலுவலர் குழு" மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்து, அவற்றை தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இக்குழு மத்திய அரசு பரிந்துரைத்துள்ள திருத்திய ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் மற்றும் திருத்திய ஓய்வுக் கால பயன்கள் குறித்து ஆராய்ந்து அவற்றை தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விரிவுபடுத்துவது குறித்தும் தக்க பரிந்துரைகள் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இக்குழு, இதர படிகள் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழு அளிக்கும் அறிக்கையினையும் ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை வழங்கும். 3) அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மற்றும் ஏனைய சங்கங்கள் இவ்வலுவலர் குழுவிற்கு ஊதிய விகிதம் / ஓய்வூதிய திருத்தம் குறித்த தங்கள் கோரிக்கையை அனுப்பி வைக்கவும், அவற்றை உரியவாறு ஆராய்ந்து பரிந்துரைக்கவும் இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 4) இக்குழு தனது அறிக்கையை நான்கு மாத காலத்திற்குள், அதாவது 30.06.2017க்குள் அரசிற்கு அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப். 28 வரை காலஅவகாசம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு


எம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான 'டான்செட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப். 28 வரை காலஅவகாசம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு | எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்.ஆர்க், எம்.பிளான். படிப்பு மாணவர் சேர்க்கைக்காக 'டான் செட்' என்ற பொது நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படு கிறது. இத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. வரும் கல்வி ஆண்டு (2017-18) மாணவர் சேர்க்கைக்கான 'டான் செட்' தேர்வு மார்ச் 25 மற்றும் 26-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு ஜனவரி 29-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் பிப்ரவரி 20-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 28-ம் தேதி மாலை 5.30 மணி வரை நீட்டிக்கப் பட்டிருப்பதாக டான்செட் செய லாளர் பேராசிரியை பி.மல்லிகா அறிவித்துள்ளார். இதற்கான இணையதள முகவரி: www.annauniv.edu/tancet2017 என்பதாகும். இதுவரை சுமார் 24 ஆயிரம் பேர் டான்செட் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான டான்செட் தேர்வு மார்ச் 25-ம் தேதியும் எம்இ, எம்டெக், எம்.ஆர்க்., எம்.பிளான். படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு 26-ம் தேதியும் நடைபெறுகின்றன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை அமைச்சர் காமராஜ் தகவல்.


ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை அமைச்சர் காமராஜ் தகவல் | ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் காமராஜ் கூறினார். மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்களுடன் மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் நேற்று உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. அப்போது அமைச்சர் காமராஜ் பேசியதாவது:- தமிழ்நாட்டில் 1.11.16 முதல் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் உரையில் குறிப்பிட்டவாறு, தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக, ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு (மின்னணு குடும்ப அட்டை) வழங்க அரசு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது வரை, 5 கோடியே 65 லட்சத்து 30 ஆயிரத்து 672 பேர் (80 சதவீதம்) தங்கள் ஆதார் அட்டை விவரங்களை ரேஷன் கார்டுடன் இணைத்துள்ளனர். மீதமுள்ளவர்களின் ஆதார் விவரங்களை உடனடியாக பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்த 18 லட்சத்து 54 ஆயிரத்து 700 பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை நடைபெற்ற கள ஆய்வில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 540 போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளன. உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலமாக ஒவ்வொரு மாதமும், இரண்டாம் சனிக்கிழமை அன்று நடத்தப்படும் குறைதீர் முகாம்களில் 5 லட்சத்து 77 ஆயிரத்து 53 மனுக்கள் பெறப்பட்டு அதில் 5 லட்சத்து 55 ஆயிரத்து 781 மனுக்கள் மீது அன்றைய தினமே தீர்வு காணப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில் மட்டும்தான் இவ்வகை முகாம்கள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில், ரேஷன் பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களின் ஓட்டுனர்கள் மட்டுமல்லாது கடத்தலுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் துணை போகும் நபர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு காவல் துறையினரால் எடுக்கப்பட்டு வரும் கடுமையான தொடர் நடவடிக்கைகளால் இதுவரை 951 பேர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு எடுத்துவரும், விலைக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளினால் அத்தியாவசிய பொருட்களின் விலை வெளிச்சந்தையில் வெகுவாக குறைந்து வருகிறது என்று மத்திய அரசு பாராட்டியுள்ளது. வெளிச்சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலையை தொடர்ந்து கண்காணித்து அரசுக்கு அறிக்கையை அலுவலர்கள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு முடிவு வெளியீடு.


சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு முடிவு வெளியீடு | சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற 112 பேர் தேர்வு | சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்றவர்களில் 112 பேர் தேர்வு பெற்றுள்ளனர். நேர்முக தேர்வு மார்ச் 20-ந் தேதி தொடங்குகிறது. அகில இந்திய அளவில் மத்திய தேர்வாணையம் ஆண்டுதோறும் ..எஸ்., .பி.எஸ்., .ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான அகில இந்திய பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை நடத்துகிறது. முதலில் முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முக தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுவார்கள். அதன்படி 1,079 பணியிடங்களுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 9 லட்சம் பேர் எழுதினார் கள். முதல்நிலை தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த செப்டம்பர் 16-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில் 15 ஆயிரத்து 445 பேர் தேர்ச்சி பெற்றனர். முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வு கடந்த டிசம்பர் 3-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடந்தது. மெயின் தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. தேர்வில் இந்தியா முழுவதும் 2 ஆயிரத்து 961 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு நேர்முக தேர்வு டெல்லியில் மார்ச் 20-ந் தேதி தொடங்குகிறது. சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்தில் ..எஸ்., .பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி நடத்தப்படுகிறது. அந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் 112 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 84 பேர் மாணவர்கள், 28 பேர் மாணவிகள். இதுகுறித்து மனிதநேய மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ..எஸ்., .பி.எஸ்., .ஆர்.எஸ்., இந்திய வனப்பணி தேர்வுகளிலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1, குரூப்-2 மற்றும் சிவில் நீதிபதிகள் பணிகளுக்கான தேர்வுகளிலும், சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட தேர்வுகளிலும் இதுவரை மொத்தம் 2 ஆயிரத்து 831 பேர் வெற்றி பெற்று மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர். சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் நேர்முக தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ-மாணவிகள் தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் இன்று (புதன்கிழமை) முதல் சென்னை-35, சி..டி.நகர் முதல் பிரதான சாலையில் இருக்கும் எமது மையத்தில் நேரில் வந்து பதிவு செய்துகொள்ளலாம். www.sai-d-ais.com என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு நேர்முக தேர்வுக்கு பதிவு செய்துகொள்ளும் அனைவருக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த நேர்முக தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் அனைத்து வசதிகளும் இலவசமாக செய்துதரப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE
Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.
  1. TNPL RECRUITMENT 2016 | TNPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு ...விரிவான விவரங்கள் ...| DEPUTY MANAGER - ASST MANAGER | NO. OF VACANCIES 5 - LAST DATE 26.12.2016
  2. மண்ணுலகில் இருந்து விடைப் பெற்றார் அம்மா | 60 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் எம்ஜிஆர் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
  3. கோடானுகோடி மக்களை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு அம்மா உயிர் பிரிந்தது... கண்ணீரில் மிதக்கிறது தமிழகம்...அம்மா அவர்களுக்கு கல்விச்சோலையின் கண்ணீர் அஞ்சலி. அம்மாவின் ஆன்மா சாந்தி அடையட்டும்...அம்மாவின் புகழ் உலகத்தை ஆளட்டும்...
  4. சோதனைகளை சாதனைகளாக மாற்றிய ‘இரும்புப் பெண்’
  5. பள்ளி, கல்லுாரிகளுக்கு 3 நாட்கள் (6,7,8) விடுமுறை
  6. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து புதிய முதல்வராக பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை செவ்வாய் கிழமை அதிகாலை 1 மணிக்கு பதவி ஏற்றது. னைத்து அமைச்சர்களும் அதே இலாகா பொறுப்புடன் பதவியேற்று கொண்டனர்.
  7. முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி 6ம் தேதி முதல் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படும் என்று ராஜ்பவன் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  8. காலமான முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., சமாதி அருகே இன்று (6.12.2016) மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
  9. முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை(5.12.2016) இரவு 11.30 மணிக்கு காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகார பூர்வமாக அறிவித்தது.
  10. உர்ஜித் படேலின் மாத சம்பளம் ரூ. 2 லட்சம்
  11. ‘ஸ்வைப் மெஷின்’ மூலம் கல்விக் கட்டணம் புதுச்சேரி தனியார் பள்ளிகளில் கல்வித் துறை விரைவில் நடவடிக்கை
  12. ஜன் தன் கணக்கில் ரூ.74 ஆயிரம் கோடி வருமான வரித் துறை அதிர்ச்சி
  13. TNPSC TAMIL GK வினா வங்கி
  14. வங்கியில் 1439 பணியிடங்கள்
  15. விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம்
  16. பிளஸ்-2 படித்தவர்களுக்கு கடற்படையில் மாலுமி பணி
  17. டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு வேலை
  18. ரூ.500, ரூ.1,000 செல்லாது என்ற அறிவிப்பால் சில்லரை தட்டுப்பாடு புதிய ரூ.20, ரூ.50 நோட்டுகள் விரைவில் வெளியீடு தற்போது புழக்கத்தில் இருக்கும் நோட்டுகளும் செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு
  19. RURAL BPOs IN VILLAGE PANCHAYATS IN TAMIL NADU
  20. அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது தமிழ்நாட்டில் இன்று சில இடங்களில் மழை பெய்யும் என அறிவிப்பு
  21. மும்பையில் இருந்து கவர்னர் சென்னை வந்தார்
  22. சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு ‘திடீர்’ மாரடைப்பு டாக்டர்கள் தீவிர சிகிச்சை
  23. போட்டித்தேர்வுகள் அடிப்படையில் ஆய்வக உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
  24. ANNAMALAI UNIVERSITY - B.ED 2 YEARS ADMISSION NOTIFICATION
  25. வீட்டு பாடம் செய்யாததால் ஆத்திரம் 10-ம் வகுப்பு மாணவரை பிரம்பால் அடித்த ஆசிரியர் மீது வழக்கு
  26. சென்னை வர்த்தக மையத்தில் திருமணம் மற்றும் பர்னிச்சர் கண்காட்சி நாளை வரை நடைபெறுகிறது
  27. நாசிக்கில் இருந்து ராணுவ விமானத்தில் ரூ.320 கோடி புதிய 500 ரூபாய் நோட்டுகள் சென்னை வந்தன தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அனுப்பப்படுகிறது
  28. அந்தமான் கடல் பகுதியில் புதிய மேலடுக்கு சுழற்சி தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு
  29. தமிழக அரசுப்பதிவேட்டில் பெயர்மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்.
  30. உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 05.12.2016 அன்று விசாரணைக்கு வர உள்ளது.
  31. போலி சான்றிதழ்களை தடுக்க புகைப்படம், ரகசிய பார்கோடுடன் சாதி சான்றிதழ் அறிமுகம்.
  32. 2017 ல் வார இறுதி நாட்களுடன் மகிழ்விக்க வரும் விடுமுறைகள்.
  33. கண்காணிப்பில் அங்கன்வாடி சத்துணவு மையங்கள்
  34. CPS :18 ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சு
  35. தலைமையாசிரியர் ’கை’யை கடிக்கும் CCE Worksheet தேர்வுகள்!!!
  36. நீட் (NEET) தேர்வு : அடுத்த வாரம் விண்ணப்ப பதிவு.
  37. தமிழகத்தில் பாடத்திட்டத்தை மேம்படுத்தக் கோரி வழக்கு
  38. பொங்கல் சிறப்பு பேருந்துகள் விரைவில் அறிவிக்கப்படும் போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்
  39. 14-வது சர்வதேச சென்னை திரைப்பட விழாவுக்கு 12 தமிழ் திரைப்படங்கள் தேர்வு
  40. TNPSC GROUP I | குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்படாது முன்கூட்டியே விண்ணப்பிக்க TNPSC அறிவுறுத்தல்
  41. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் 3 மாதத்தில் உரிய முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
  42. ‘அசோசெம்’ விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
  43. இம்மாத இறுதிக்குள் பணத் தட்டுப்பாடு நீங்கும் அருண் ஜேட்லி நம்பிக்கை
  44. அந்தமான் அருகே புதிய புயல் சின்னம் வர்தா...வருகிறார்...
  45. tnpsc ‘குரூப்-1’ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
  46. ரெயில் பயணிகள் 139-க்கு ‘டயல்’ செய்து வாடகை கார், சக்கர நாற்காலி வசதி பெறலாம் ஐ.ஆர்.சி.டி.சி. ஏற்பாடு
  47. SOUTHERN RAILWAY RECRUITMENT 2016 | SOUTHERN RAILWAY - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - PHYSIOTHERAPIST-RADIOGRAPHER-ECG TECHNICIAN | NO. OF VACANCIES 4 | LAST DATE 19.12.2016
  48. பெட்ரோல் நிலையங்களில் இன்று முதல் பழைய 500 ரூபாய் நோட்டுகளை வாங்கமாட்டார்கள் மத்திய அரசின் ‘காலக்கெடு’ நள்ளிரவுடன் முடிந்தது
  49. கருப்பு பணம் மாற்றுவதில் முறைகேடு: 27 வங்கி அதிகாரிகள் இடைநீக்கம் மேலும் 6 பேர் இடமாற்றம்
  50. சட்ட நடவடிக்கைகள் தொடங்கி விட்டன: கருப்பு பணத்தை மாற்ற முயல்வோர் தப்ப முடியாது மத்திய அரசு கடும் எச்சரிக்கை
  51. தனித்தேர்வர்கள் 8-வது வகுப்பு தேர்வுக்கு 5-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்க 7-ந் தேதி கடைசி நாள்
  52. பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு தூய்மையாக சமைக்கப்பட வேண்டும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை
  53. மோட்டார் வாகன பராமரிப்பு பணி: தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்த்தல் 15-ந் தேதி நடக்கிறது
  54. ஆதார் எண் மூலம் பணம் செலுத்தும் வசதி மத்திய அரசு திட்டம்
  55. புதிய 500, 2000 ரூபாய் தாள்களுக்கு ஏற்ப 90% ஏடிஎம் இயந்திரங்கள் மாற்றியமைப்பு 10 நாட்களில் பணிகள் முழுமையடையும்
  56. ‘ஆதார் அட்டை’ திட்டம் மிக முக்கியமான நடவடிக்கை ஐநா புகழாரம்
  57. மின்னணு பணப்பரிமாற்றம் மத்திய அரசு தீவிரம்
  58. TNPSC RECRUITMENT 2016 | TNPSC - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - SUPERINTENDENT | NO. OF VACANCIES 1 | LAST DATE 01.01.2017
  59. பொது அறிவு | இந்திய கடற்படை அமைப்பின் தலைமையகம்
  60. பெட்ரோல் விற்பனை நிலையங்கள், விமான டிக்கெட்டுகளுக்கு ரூ.500 பழைய நோட்டுகளை நாளை முதல் பயன்படுத்த முடியாது கால அவகாசத்தை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு
  61. TNPSC RESULT | TNPSC general foreman and technical assistant result அறிவிப்பு
  62. அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (2.12.2016) நடைபெற இருந்த பொறியியல் தேர்வுகள் ரத்து
  63. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். மெயின்தேர்வு நாளை (3.12.2016) நடக்கிறது
  64. மார்ச் வரை இலவசம்: ஜியோவின் புத்தாண்டு பரிசு
  65. கணக்கில் காட்டும் நகைக்கு வரி கிடையாது ஒருவர் எவ்வளவு தங்க நகை வைத்துக் கொள்ளலாம்? வருமான வரி திருத்த சட்டத்தில் அதிரடி தகவல்கள்
  66. TAMIL NADU VETERINARY AND ANIMAL SCIENCES UNIVERSITY - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - DRIVER & MILL OPERATOR | NO. OF VACANCIES 8 | LAST DATE 30.12.2016
  67. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் முதுகலை கல்வியியல், தமிழ்வழி புவியியல் உட்பட 26 புதிய படிப்புகள் அடுத்த ஆண்டு அறிமுகம்
  68. REGIONAL RESEARCH INSTITUTE OF UNANI MEDICINE | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST- STAFF NURSE-MTS-RADIOGRAPHER | LAST DATE 21.12.2016
  69. ‘நாடா’ புயல் எதிரொலி: கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? மாவட்ட கலெக்டர்கள் முடிவு செய்வார்கள்
  70. அண்ணா பல்கலைக்கழக இணைப்பில் உள்ள 583 பொறியியல் கல்லூரிகளில் ‘செமஸ்டர்’ தேர்வுகள் இன்று ரத்து பதிவாளர் தகவல்
  71. டெபாசிட் தொகை திடீர் அதிகரிப்பு எதிரொலி: ஜன்தன் வங்கி கணக்கில் மாதம் ரூ.10 ஆயிரம் மட்டுமே எடுக்க அனுமதி ரிசர்வ் வங்கி புதிய நிபந்தனை
  72. சினிமா திரையிடுவதற்கு முன் திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் ஒலிபரப்ப வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
  73. பண மதிப்பு நீக்கம்: ஓர் உலக பார்வை
  74. புதுச்சேரியில் தேசிய புத்தகக் காட்சி டிசம்பர் 16-ம் தேதி தொடக்கம்
  75. வருமான வரி பிடித்தத்துக்கான ‘டிடிஎஸ்’ படிவங்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்
  76. சென்னை மெட்ரோ ரயில்களில் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகப்படுத்த திட்டம்
  77. அண்ணா பல்கலை. தேர்வுகள் தள்ளிவைப்பு
  78. 'நாடா' புயல் எச்சரிக்கையை அடுத்து சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  79. வங்கக்கடலில் உருவான நாடா புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை, நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் வானூர், மரக்காணம் வட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.
  80. இன்று சம்பள தினம்: வங்கி ஏ.டி.எம்.கள் முழு நேரம் இயங்குமா? அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் எதிர்பார்ப்பு
  81. அரசு ஊழியர்களின் டிஜிட்டல் பணி பதிவேடு -பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவு.
  82. பணம் எடுக்க கட்டுப்பாடுகள் தளர்வு ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு
  83. பள்ளி மாணவர்களுக்கு யோகா கட்டாயம் மத்திய அரசு 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவு
  84. நல்லொழுக்க பாடத்தில் ஆசிரியர்களுக்கு 2 நாள் சிறப்பு பயிற்சி
  85. செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்
  86. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே வருமான வரி திருத்த மசோதா, விவாதம் இன்றி நிறைவேறியது கருப்பு பணத்துக்கு கூடுதல் வரி, அபராதம் விதிக்கப்படும்
  87. சென்னையை நோக்கி புயல் 2-ந்தேதி கரையை கடக்கும் என்று அறிவிப்பு
  88. சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா தள்ளிவைப்பு
  89. தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
  90. அரசு பள்ளிகளில் ஆய்வகம் மற்றும் நுாலகத்தை துாசி தட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்து வகுப்புகள் நடத்த வேண்டும்’ என்றும், பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.
  91. ஐடிஎஸ் திட்டத்தின்கீழ் வரி செலுத்த வருவோரிடம் கறுப்பு பண மூலாதாரத்தை கேட்க வேண்டாம் வங்கிகளுக்கு ஐபிஏ அறிவுரை
  92. கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க ‘பாயிண்ட் ஆப் சேல்’ கருவிக்கு வரி விலக்கு மத்திய அரசு நடவடிக்கையால் விலை குறைய வாய்ப்பு
  93. வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடு தளர்வு ரிசர்வ் வங்கி அறிவிப்பு
  94. ‘யு.ஜி.சி.’ ‘நெட்’ தேர்வு எழுதுபவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை கலெக்டர் அறிவிப்பு
  95. தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தில் 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
  96. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் தமிழக அரசு முடிவு
  97. கருப்பு பணம் வைத்திருப்போருக்கு கூடுதல் வரி, அபராதம் விதிக்க முடிவு
  98. இலவச ஜியோ மொபைலுக்கு ரூ. 27,000-க்கு கட்டண ரசீது? - ரிலையன்ஸ் நிறுவனம் சொல்வது என்ன?
  99. ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு எழுத டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம்
  100. ‘வதந்திகளை நம்ப வேண்டாம்’ ரூ.50, ரூ.100 நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் மத்திய அரசு அறிவிப்பு
  101. மாத சம்பளம் ரொக்கமாக வழங்கப்படுமா?
  102. நிரந்தர பணியாளர்கள், தற்காலிக பணியாளர்கள் அனைவருக்கும் இனி வங்கியில் தான் ஊதியம் வழங்க வேண்டும்
  103. தேர்தல் முடிந்து விட்டது ’மறுவாக்கு எண்ணிக்கை மோசடி’ டொனால்டு டிரம்ப் ஆவேசம்!!!
  104. அரசியல் சட்ட தினம்: நவம்பர் 26
  105. ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
  106. 10ம் வகுப்பிலும் புது வினாத்தாள் மாதிரி தேர்வு
  107. பணமில்லா முதல் இந்திய மாநிலமாகிறது கோவா!!
  108. கரும்பலகையில் திறனாய்வு தேர்வு பின்நோக்கி செல்லும் கல்வித்துறை
  109. தேசிய திறனாய்வு தேர்வு நவ., 28ல் விடைக்குறிப்பு
  110. ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் வாபசால் பாதிப்பு விரைவில் இயல்பு நிலை திரும்ப தீவிர நடவடிக்கை ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் பேட்டி
  111. திருவண்ணாமலையில் 30-ல் தீபத் திருவிழா தொடக்கம் டிச. 12-ம் தேதி அதிகாலை பரணி தீபம்; மாலையில் மகா தீபம் ஏற்றப்படும்
  112. நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டத்தை அமல்படுத்தும் வரை தமிழகத்தில் ‘நீட்’ நுழைவுத் தேர்வு வேண்டாம் பிரதமருக்கு ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள்
  113. கறுப்புப் பணம், ஊழலை ஒழிக்க வேண்டுமானால் ரொக்கப் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும் ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
  114. எச்.வசந்தகுமார் எழுதிய ‘வெற்றிப்படிக்கட்டு’ 3-ம் பாகம் புத்தகம் சென்னையில் இன்று மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்
  115. நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி நிரந்தரமாக நீக்கம் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
  116. TAMIL GK வினா வங்கி