-->

Tuesday, December 19, 2017

TNPSC தொகுதி – 4 விண்ணப்பிக்க நாளை (20.12.2017) கடைசி நாள்

TNPSC தொகுதி – 4 விண்ணப்பிக்க நாளை (20.12.2017) கடைசி நாள் | தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – IV (தொகுதி-4ல் அடங்கிய பல்வேறு பதவிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்) 9351 காலிப்பணியிடங்ககுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 20.12.2017 வரை நீட்டிக்கப்பட்டது. இன்று மாலை வரை சுமார் 19½ லட்சம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர். நாளை (20.12.2017) வரை விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ளது. 21.12.2017 வரை தேர்வுக்கட்டணம் செலுத்தலாம். இப்பதவிக்கான தேர்வினை குறிப்பிட்டுள்ள 11.02.2018ம் தேதியன்று நடத்த பல்வேறு ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டபடியாலும், குறுகிய கால இடைவெளியே உள்ளபடியாலும், மேற்படி தேர்விற்கு இதன்பிறகு எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது. எனவே அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி நாளை அதாவது 20.12.2017 நள்ளிரவு 11.59 க்குள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும். தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் 21.12.2017 க்குள் தேர்வுக்கட்டணம் செலுத்தி விட வேண்டும். ஏற்கனவே போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்டு விட்டதால் தொழில்நுட்பக் காரணம் உட்பட எந்தவொரு காரணத்திற்காகவும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியாமல் போனாலோ அல்லது தேர்வுக்கட்டணம் செலுத்த இயலாமல் போனாலோ அதற்கு தேர்வாணையம் பொறுப்பேற்காது. விண்ணப்பித்த அனைவரும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் "APPLICATION STATUS" என்ற இணைப்பினை கிளிக் செய்து தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதுகுறித்து ஏற்கனவே வெளியிடப்பட்ட செய்திக்குறிப்புகள் தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in ல் உள்ளன.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.