-->

Sunday, December 31, 2017

புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்


புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார் புதுக்கோட்டை மாவட்டம் வாகவாசல் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியரும், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவருமான முனைவர் சாமி.சத்தியமூர்த்தி அவர்களை புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தின் மாவட்டக்கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். ஆசிரியப்பணியில் 31 ஆண்டுகளாக திறம்பட பணியாற்றி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழிகாட்டியாகத்திகழும் சாமி.சத்தியமூர்த்தி அவர்கள் மாவட்டக்கல்வி அதிகாரியாக சிறப்புடன் பணியாற்ற, சிவகங்கை மாவட்டக்கல்வி அதிகாரி மாணிக்கம்,துணை இயக்குநராகப் பதவியேற்கவுள்ள தமிழ்ச்செல்வன்,முன்னாள் மாவட்டக்கல்வி அதிகாரிகள் பரமசிவம்,சண்முகம்,தலைமையாசிரியர் சங்க நிர்வாகிகள் பீட்டர் ராஜா,அருள் சுந்தரராஜ்,திராவிடச்செல்வம்,மணவாளன்,சேகர் ஆகியோரும், பட்டதாரி ஆசிரியர் கழகம், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகளும்,ஆசிரியர்கள், DIET முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களும் வாழ்த்தினார்கள்.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.