பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு கணக்கில் வராத ரூ.7,961 கோடி கண்டறியப்பட்டுள்ளன பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு கணக்கில் வராத ரூ.7,961 கோடி கண்டறியப்பட்டுள்ளன பொன்.ராதாகிருஷ்ணன் தகவல் | பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு கணக்கில் வராத ரூ.7,961 கோடி தொகையை வருமான வரித்துறையினர் கண்டறிந்துள்ளனர். இந்த தகவலை நேற்று நாடாளுமன்றத்தில் எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். கறுப்புப் பண ஒழிப்பு, ஊழல் ஒழிப்புபோன்ற காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை 900 குழுமங்களிடம் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை மூலம் ரூ.900 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் கணக்கில் வராத 7,961 கோடி ரூபாய் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு புதிய 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதற்கு ரூ.5,000 கோடி செலவானது. டிசம்பர் மாதம் 8-ம் தேதி வரை மொத்தம் ரூ. 1,695.7 கோடி 500 ரூபாய் அச்சிடப்பட்டன என்று அந்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

Comments