`இக்னோ’ பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு டிசம்பர் 31 கடைசி நாள் சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

`இக்னோ' பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு டிசம்பர் 31 கடைசி நாள் சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் | இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக் னோ) மண்டல இயக்குநர் எஸ்.கிஷோர், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இக்னோ பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி படிப்புகளில் 2018-ம் ஆண்டு பருவத்துக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர் கள் டிசம்பர் 31-ம் தேதி வரை ஆன்லைனில் (https://onlineadmission.ignou.ac.in/admission) விண்ணப்பிக்கலாம். கிராமப்புற மற்றும் தொலை தூர இடங்களில் உள்ள மாணவர்களின் வசதிக்காக மத்திய அர சின் பொது சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, இக்னோ பல்கலைக்கழகம் மத்திய மின் னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மின்னாளுமை பணி நிறுவனமான பொது சேவை மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த மையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுகிறது. அதன் விவரங்களை www.apnacsonline.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். சேர்க்கை கட்டணத்தை டெபிட், கிரெடிட் கார்டு மூலமாகவோ ரொக்கமாகவோ செலுத்திவிடலாம். பொது சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க பதிவு கட்டணத்தோடு ரூ.60 மட்டும் சேர்த்து செலுத்த வேண்டும். இதுவரை சென்னை நந்தனத்தில் இயங்கிவந்த இக்னோ மண்டல அலுவலகம் தற்போது வேப்பேரி பெரியார் திடலில் இயங்கி வருகிறது. அலுவலகத்தின் தொலைபேசி எண்களில் (044-26618438, 26618039) தொடர்புகொண்டு அட்மிஷன் தொடர் பான விவரங்களைப் பெறலாம்.

Comments