2015-2016-ம் ஆண்டிற்கான தொழில் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்கலாம் தமிழக தொழிலாளர் துறை தகவல்

2015-2016-ம் ஆண்டிற்கான தொழில் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்கலாம் தமிழக தொழிலாளர் துறை தகவல் | வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு 'தொழில் நல்லுறவு பரிசு திட்டத்தை' தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது. நல்ல தொழில் உறவினை பேணி பாதுகாக்கும், வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2015-2016-ம் ஆண்டிற்கான 'தொழில் நல்லுறவு விருதுகள்' வழங்கப்பட உள்ளது. இந்த சிறப்பு விருதுகள் பெற தகுதியானவரை ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்புக்குழு தேர்ந்தெடுக்கும். இந்த விருதுக்குரிய விண்ணப்பங்களை தொழிலாளர் துறையின் வலைதளத்தில் (http://www.labour.tn.gov.in/Labour) இருந்து பதிவிறக்கும் செய்து கொள்ளலாம். மேலும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள தொழிலாளர் அலுவலகம், தொழிலாளார் உதவி ஆணையர் (சமரசம்) அலுவலகம், வட்டார தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனர்கள் அலுவலகம் மற்றும் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகம் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, விண்ணப்ப கட்டணம் செலுத்திய விவரத்தையும் இணைத்து சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்துக்கு அடுத்த மாதம் (ஜனவரி) 25-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேற்கண்ட தகவல் தமிழக தொழிலாளர் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments