காலி இடம் அதிகரிப்பால், ரெயில்வேக்கு புதிய ஊழியர்களை தேர்வு செய்யும் பணியை விரைவுபடுத்த ஆலோசனை 2 ஆண்டுக்கு பதிலாக 6 மாதத்தில் முடிக்க திட்டம்காலி இடம் அதிகரிப்பால், ரெயில்வேக்கு புதிய ஊழியர்களை தேர்வு செய்யும் பணியை விரைவுபடுத்த ஆலோசனை 2 ஆண்டுக்கு பதிலாக 6 மாதத்தில் முடிக்க திட்டம் | ரெயில்வே புதிய ஊழியர்கள் தேர்வுப்பணியை 2 ஆண்டுகளுக்கு பதிலாக 6 மாதத்திலேயே முடிக்கும்வகையில் ஆலோசனை நடந்து வருகிறது. காலியிடங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, ரெயில்வேயில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். குரூப் சி, குரூப் டி பிரிவுகளில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 823 காலியிடங்கள் உள்ளன. டிரைவர், கார்டு, கேங்மேன் உள்ளிட்ட தொழில்நுட்ப ஊழியர் பணியிடங்களும் காலியாக உள்ளவற்றில் அடங்கும். ஆனால், காலியிடங்களை நிரப்புவதில் கால தாமதம் ஏற்படுவதால், ரெயில்வே பணிகள் ஆள்பற்றாக்குறையால் முடங்கி உள்ளன. கோரிக்கை கடந்த மாதம், அனைத்து ரெயில்வே கோட்ட பொது மேலாளர்களும் ரெயில்வே வாரிய தலைவர் அஸ்வனி லோகனியை சந்தித்து பேசினர். அப்போது, காலியிடங்களை நிரப்பும் பிரச்சினையை பொது மேலாளர்கள் எழுப்பினர். குறிப்பாக, வடகிழக்கு எல்லைப்புற ரெயில்வே கோட்ட பொது மேலாளர் சாகத் ராம், "ரெயில்வே தேர்வுப்பணி நீண்ட காலம் பிடிக்கிறது. விண்ணப்பம் சமர்ப்பித்ததில் இருந்து 2 ஆண்டுகள் ஆகி விடுகிறது. அதற்குள், விண்ணப்பதாரர்கள் வேறு வேலைக்கு சென்று விடுகிறார்கள். எனவே, ஆன்லைன் தேர்வு உள்ளிட்ட மாற்றங்களை செய்து, தேர்வுப்பணியை விரைவுபடுத்த வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். 6 மாதத்தில் முடிக்க வேண்டும் அதற்கு ரெயில்வே வாரிய தலைவர் அஸ்வனி லோகனி, "புதிய ஊழியர்கள் தேர்வுப்பணியை 6 மாதத்தில் முடிப்பதை இலக்காக கொண்டு, இப்பணியை ரெயில்வே தேர்வு வாரியம் மறுஆய்வு செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டார். இதுதொடர்பான திட்ட அறிக்கைகளை 20-ந் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அனைத்து துறைகளுக்கும் ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், தேர்வுப்பணியை விரைவுபடுத்துவதற்கான வழிமுறைகளை ரெயில்வே வாரியம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. இதற்காக ஆன்லைன் தேர்வு உள்ளிட்ட புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தவும் பரிசீலித்து வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments