தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கும் திட்டம் திருப்பதி தேவஸ்தான அதிகாரி இன்று 18.12.2017 தொடங்கி வைக்கிறார்

தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கும் திட்டம் திருப்பதி தேவஸ்தான அதிகாரி இன்று 18.12.2017 தொடங்கி வைக்கிறார் | திருப்பதி ஏழுமலையானை வழிபட இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கும் திட்டத்தை தேவஸ்தான அதிகாரி இன்று தொடங்கிவைக்கிறார். ஆய்வு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் இலவச தரிசன பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கும் திட்டம் இன்று (திங்கட்கிழமை) அமலுக்கு வருகிறது. திருமலையில் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அட்டை வழங்குவதற்காக நந்தகம் தங்கும் விடுதி, திருமண மண்டபம் உள்பட 14 இடங்களில் 117 கவுண்ட்டர்கள் அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. அந்த பணிகளை திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், "தரிசன அனுமதி அட்டை வழங்கும் பணிக்காக 400 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 24 மணி நேரமும் இந்த கவுண்ட்டர்கள் இயங்கும். இலவச தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட வரும் பக்தர்கள் தங்களின் ஆதார் அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும்" என்றார். இன்று தொடக்கம் தரிசன அனுமதி அட்டை வழங்கும் திட்டத்தை தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் இன்று தொடங்கிவைக்கிறார். இந்த திட்டம் 23-ந் தேதி வரை தற்காலிக பரிசோதனை அடிப்படையில் தொடரும். இது வெற்றி பெற்றால் ஏப்ரல் மாதத்தில் இருந்து நிரந்தரமாக நடைமுறைக்கு வரும். திருமலையில் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு இருப்பது போல், கீழ்திருப்பதியிலும் தரிசன அனுமதி அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments