அடுத்தாண்டு சம்பள உயர்வு 15 சதவீதமாக இருக்கும் மனிதவளத் துறையினர் கணிப்புஅடுத்தாண்டு சம்பள உயர்வு 15 சதவீதமாக இருக்கும் மனிதவளத் துறையினர் கணிப்பு | திறமை வாய்ந்த பணியாளர் களுக்கு அடுத்தாண்டு 10 முதல் 15 சதவீதம் வரை சம்பள உயர்வு கிடைக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. பணமதிப்பு நீக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு காரணமாக நடப்பாண்டில் வேலை இழப்புகள் மற்றும் குறைந்த ஊதிய உயர்வு இருந்த நிலையில், அடுத்தாண்டு நல்ல சம்பள உயர்வு இருக்கும் என மனித வளத் துறையினர் கணித் திருக்கின்றனர். சூழ்நிலைக்கு தகுந்தது போல் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ளும் பணியாளர்களுக்கு இந்த சம்பள உயர்வு இருக்கும். அதே சமயத்தில் வேலை இழப்புகளும் இருக்கும் என்பதையும் மறுக்க முடியாது என மனிதவள நிறுவனங்கள் கணித்திருக்கின்றன. கடந்த ஆண்டில் 20 சதவீத நிறுவனங்களே புதிய பணியாளர்களை வேலைக்கு எடுத்திருக்கின்றன. 60 சதவீத நிறுவனங்கள் புதிய பணியாளர்களை எடுக்கவும் இல்லை, அதே சமயத்தில் வேலையிழப்பையும் அறிவிக்கவில்லை என பல ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு ஐடி, டெலிகாம், உற்பத்தி, வங்கி உள்ளிட்ட பல துறைகளில் வேலை இழப்புகள் உருவாயின. பல நிறுவனங்கள் கடந்த செப்டம்பர் வரை எந்தவிதமான புதிய முயற்சியையும் செய்யவில்லை. மேன் பவர் குரூப் கணிப்பு படி, நடப்பாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் புதிதாக அதிக வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை. தற்போது புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. மொபைல் தயாரிப்பு, பைனான்ஸியல் டெக்னாலஜி, ஸ்டார்ட் அப் ஆகிய நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. இந்த நிலைமை அடுத்த ஆண்டிலும் தொடரும். கடந்த ஆண்டு 8 முதல் 10 சதவீதம் வரை சம்பள உயர்வு இருந்தது. இந்த ஆண்டு 10 முதல் 15 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக டீம்லீஸ் நிறுவனத்தின் நிறுவனர் ரிதுபர்ன சக்ரவர்த்தி கூறும்போது, அடுத்த ஆண்டில் பெரும்பாலான துறைகளில் வேலை வாய்ப்புகள் அதி களவில் உருவாகும் என்று கூறினார். ஷைன் டாட் காம் நிறுவனத்தின் சிஇஓ ஜரியஸ் மாஸ்டர் கூறும்போது, ``தொழில் சூழல் கள் மாறி வருகின்றன. இதனால் பழைய தொழில்நுட்பத்துக்காக தேவை குறைந்து வருகிறது. அதே சமயத்தில் புதிய தொழில்நுட்பத்துக்கான தேவையும் உயர்ந்து வருகிறது. டிஜிட்டல் மற் றும் டேட்டா அறிவியல் துறைக்கு கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்'' என்று குறிப்பிட்டார். பகுதி நேரம் அல்லது பணியாளர்களின் வசதிக்கு ஏற்ப பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை தற்போது 13 லட்சமாக இருக்கிறது. 2025-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 90 லட்சமாக உயரும். பெரும்பாலான நிறுவனங்களிடம் ஒப்பந்த முறை அல்லது தேவைக்கு ஏற்ப பணியாளர்களைப் பணியமர்த்தும் போக்கு உயர்ந்திருக்கிறது என கெல்லி சர்வீசஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தம்மையா கூறினார். ஐடி துறை பணியாளர் கள் சராசரியாக 8 சதவீத உயர்வும், இ-காமர்ஸ் மற்றும் ஸ்டார்ட் அப் பிரிவில் 15 சதவீதமும், எப்எம்சிஜி பிரிவில் 8 முதல் 15 சதவீத உயர்வும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று தம்மையா கூறினார்.

Comments