Skip to main content

Posts

Showing posts from December, 2017

G.O.Ms.No.1294 Dated: 27.10.77 - ஆசிரியர் சங்கங்கள் அரசு அங்கீகாரம் பெறுவது, அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு பெறுவது சார்ந்த அரசாணை.

G.O.Ms.No.1294 Dated: 27.10.77. - Service Associations – Special Casual Leave – Eligibility to Office bearers of Recognised Service Association – Guidelines – Fixed. ஆசிரியர் சங்கங்கள் அரசு அங்கீகாரம் பெறுவது, அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு பெறுவது சார்ந்த அரசாணை G.O.Ms.No.1294 Dated: 27.10.77. - Service Associations – Special Casual Leave – Eligibility to Office bearers of Recognised Service Association – Guidelines – Fixed. ஆசிரியர் சங்கங்கள் அரசு அங்கீகாரம் பெறுவது, அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு பெறுவது சார்ந்த அரசாணை Courtesy : வெ. ரமேஷ் | DOWNLOAD

G.O.NO.229, 22nd JANUARY 1974 - ஆசிரியர் சங்கங்கள் அரசு அங்கீகாரம் பெறுவது, அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு பெறுவது சார்ந்த அரசாணை

G.O.NO.229, 22nd JANUARY 1974 - Service Associations – Recognition by Government – Statutory Rules regarding Recognition of Associations – Issued.ஆசிரியர் சங்கங்கள் அரசு அங்கீகாரம் பெறுவது, அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு பெறுவது சார்ந்த அரசாணை G.O.NO.229, 22nd JANUARY 1974 - Service Associations – Recognition by Government – Statutory Rules regarding Recognition of Associations – Issued.ஆசிரியர் சங்கங்கள் அரசு அங்கீகாரம் பெறுவது, அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு பெறுவது சார்ந்த அரசாணை Courtesy : வெ. ரமேஷ் | DOWNLOAD

2018 ஏப்ரல் மாதத்தில் கடன் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி குறைக்கும் ஆய்வறிக்கையில் தகவல்

2018 ஏப்ரல் மாதத்தில் கடன் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி குறைக்கும் ஆய்வறிக்கையில் தகவல் | 2018 ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கான குறுகிய கடன் வட்டி விகிதங்களை பாரத ரிசர்வ் வங்கி குறைக்கும் என ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெப்போ ரேட் பாரத ரிசர்வ் வங்கி இம்மாதம் 6-ந் தேதி அன்று கடன் வட்டி விகிதங்கள் பற்றிய தனது கொள்கை முடிவுகளை அறிவித்தது. அப்போது இவ்வங்கி குறுகிய கால கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. எனவே, ரெப்போ ரேட் எந்த மாற்றமும் இன்றி 6 சதவீதமாக நீடிக்கிறது. ரிவர்ஸ் ரெப்போ ரேட்டும் மாறாமல் 5.75 சதவீதமாக உள்ளது. ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளை பணவீக்க நிலவரங்கள்தான் நிர்ணயம் செய்கின்றன. நவம்பர் மாதத்தில் சில்லரை விற்பனை விலை பணவீக்கம் 4.88 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 15 மாதங்களில் இல்லாத ஏற்றமாகும். அம்மாதத்தில் மொத்த விற்பனை விலை பணவீக்கம் 3.93 சதவீதமாக உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கி, நீண்ட கால அடிப்படையில் சில்லரை விலை பணவீக்கத்தை 4 சதவீதம் என்ற அளவில் வைத்திருக்க இலக்கு நிர்ணயித்து உள்ளது. நவம்பர் மாதத்தில் இது 4.88 சதவீதமாக உயர்ந்து இருப்பதால்

‘செல்வ மகள்’ உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி குறைப்பு

'செல்வ மகள்' உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி குறைப்பு | சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம், காலாண்டுக்கு ஒருதடவை மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி, வருகிற ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டுக்கான வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் நேற்று அறிவித்தது. அதன்படி, தேசிய சிறு சேமிப்பு திட்டம், பொது வைப்பு நிதி ஆகியவற்றுக்கான வட்டி, 0.2 சதவீதம் குறைக்கப்பட்டு, 7.6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி விகிதமும் 0.2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கான 'செல்வ மகள்' திட்டத்தின் வட்டி, 8.3 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகால டெபாசிட்டுக்கான வட்டி, 6.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டுகால சேமிப்பு திட்ட வட்டி 8.3 சதவீதமாகவும், சேமிப்பு கணக்குக்கான ஆண்டு வட்டி 4 சதவீதமாகவும் நீடிக்கிறது. இந்த வட்டி குறைப்பு அடிப்படையில், வங்கிகளும் டெபாசிட் மீதான வட்டியை குறைக்கும் என்று கருதப்படுகிறது.

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அதிவேகமாக வாகனங்களை ஓட்டினால் பாஸ்போர்ட் இனி கிடைக்காது கூடுதல் கமிஷனர் அருண் எச்சரிக்கை

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அதிவேகமாக வாகனங்களை ஓட்டினால் பாஸ்போர்ட் இனி கிடைக்காது கூடுதல் கமிஷனர் அருண் எச்சரிக்கை | சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச்சென்றால் பாஸ்போர்ட் பெற போலீஸ் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது. இதனால் அவர்களுக்கு பாஸ்போர்ட் இனி எப்போதுமே கிடைக்காது என்று போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அருண் எச்சரித்து உள்ளார். புத்தாண்டு கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடக்க உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையில் விபத்து ஏற்படாமல் தடுக்க போக்குவரத்து போலீசார் வழக்கத்தைவிட, கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளனர். இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அருண் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சென்னையில் விபத்து ஏற்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பந்தயம் கட்டி அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களை பிடித்து அவர்கள் மீது வழக்கு போடப்படுகிறது. ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய சிபாரிசு செய்யப்படுகிறது. வாகன சோதனை புத்

பள்ளிகளில் நடமாடும் புத்தக கண்காட்சி நடத்த அனுமதி 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்

பள்ளிகளில் நடமாடும் புத்தக கண்காட்சி நடத்த அனுமதி 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள் | பள்ளிக்கூடங்களில் நடமாடும் புத்தக கண்காட்சி நடத்த விருப்பம் உள்ளவர்கள் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புத்தக கண்காட்சி சட்டசபையில் பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையின்போது பள்ளிக்கல்வி அமைச்சர், அனைத்து அரசு பள்ளிகளைச் சார்ந்த மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தவும், பொது அறிவை வளர்க்கவும் பள்ளி அளவில் புத்தகக் கண்காட்சி நடத்துதல் அவசியமாகும். முதல்-அமைச்சர் ஆணைப்படி, இக்கண்காட்சி புத்தக வெளியீட்டாளர்களுடன் இணைந்து சுழற்சி முறையில் பள்ளிகளுக்கே செல்லும் வகையில் நடமாடும் புத்தகக் கண்காட்சிகளாக ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்தார். அதன் அடிப்படையில் பள்ளிகளில் நடமாடும் புத்தகக் கண்காட்சி நடத்திடக் சில நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அடிப்படை வசதிகள் பள்ளிகளில் நடமாடும் புத்தகக் கண்காட்சி பள்ளியின் தலைமை ஆசிரியர், முதல்வர் மற்றும் புத்தக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள்

புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்

புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார் புதுக்கோட்டை மாவட்டம் வாகவாசல் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியரும், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவருமான முனைவர் சாமி.சத்தியமூர்த்தி அவர்களை புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தின் மாவட்டக்கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். ஆசிரியப்பணியில் 31 ஆண்டுகளாக திறம்பட பணியாற்றி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழிகாட்டியாகத்திகழும் சாமி.சத்தியமூர்த்தி அவர்கள் மாவட்டக்கல்வி அதிகாரியாக சிறப்புடன் பணியாற்ற, சிவகங்கை மாவட்டக்கல்வி அதிகாரி மாணிக்கம்,துணை இயக்குநராகப் பதவியேற்கவுள்ள தமிழ்ச்செல்வன்,முன்னாள் மாவட்டக்கல்வி அதிகாரிகள் பரமசிவம்,சண்முகம்,தலைமையாசிரியர் சங்க நிர்வாகிகள் பீட்டர் ராஜா,அருள் சுந்தரராஜ்,திராவிடச்செல்வம்,மணவாளன்,சேகர் ஆகியோரும், பட்டதாரி ஆசிரியர் கழகம், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் கழகம்

DELHI PUBLIC SCHOOL RECRUITMENT 2018 | DELHI PUBLIC SCHOOL MEERUT | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - PGT, TGT | NO. OF VACANCIES -MANY | LAST DATE : 08.01.2018

DELHI PUBLIC SCHOOL RECRUITMENT 2018 | DELHI PUBLIC SCHOOL MEERUT | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - PGT, TGT | NO. OF VACANCIES -MANY | LAST DATE : 08.01.2018 | DELHI PUBLIC SCHOOL MEERUT (An Institution of M.P. Singh Foundation) (Under the Aegis of the Delhi Public School Society) Baghpat Road, Near Baghpat Bypass Crossing, Meerut Phone: 0121-2439063/80/81, www.dpsmeerut.in REQUIRES Top-class professionals who, preferably are graduates/post-graduates with B.Ed. from a university of repute with 1st Division throughout & (1) Computer savvy with excellent communication skills (2) Having a minimum 5 years exp. of working in a reputed English Medium School. CTET qualified will be given preference. PGT: Physics, Chemistry, Mathematics, Biology, Computer Science, Accountancy, Business Studies, Economics, English, Multimedia & Web-tech, Psychology, Fine Arts, Political Science, Geography & History. TGT: English, Mathematics, Hindi, Computer Science, Social Scie

CAA RECRUITMENT 2018 | COASTAL AQUACULTURE AUTHORITY | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - CONSULTANT / COMPUTER PROGRAMMER | NO. OF VACANCIES -10 | LAST DATE : 12.01.2018 | DATE OF WALK IN INTERVIEW : 12.01.2018

§ DATE OF NOTIFICATION  :   28.12.2017 § EMPLOYMENT TYPE    :   Govt Job § APPLICATION  :   OFFLINE § WEBSITE  :    http://www.caa.gov.in/ § NAME OF THE POST    :   CONSULTANT / COMPUTER PROGRAMMER § EDUCATIONAL QUALIFICATION  :  REFER PROSPECTUS § VACANCIES     : 6           § SALARY :  Rs.30,000 § SELECTION PROCEDURE  :  WALK IN INTERVIEW § LAST DATE  :    12.01.2018 CAA RECRUITMENT 2018 | COASTAL AQUACULTURE AUTHORITY | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - CONSULTANT / COMPUTER PROGRAMMER | NO. OF VACANCIES -10 | LAST DATE : 12.01.2018 | DATE OF WALK IN INTERVIEW : 12.01.2018 | COASTAL AQUACULTURE AUTHORITY Ministry of Agriculture and Farmers Welfare. Government of India GDR Tower, 12-A, Bharathi Street. Vanuvampettai, Madipakkam P0, Chennai-600091. Ph:044-22603784/3502. Fax:044-22603780 Email: aquaauth@vsnl.net, aquaauth@gmail.com WANTED CONSULTANTS (Full Time) Coastal Aquaculture Authority (CAA), Chennai requires the services of Five Cons

TOURISM RECRUITMENT 2018 | தமிழ்நாடு சுற்றுலா துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - DRIVER | NO. OF VACANCIES -14 | LAST DATE : 12.01.2018

TOURISM RECRUITMENT 2018 | தமிழ்நாடு சுற்றுலா துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - DRIVER | NO. OF VACANCIES -14 | LAST DATE : 12.01.2018 TOURISM RECRUITMENT 2018 | தமிழ்நாடு சுற்றுலா துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - DRIVER | NO. OF VACANCIES -14 | LAST DATE : 12.01.2018 | DOWNLOAD

தமிழ் வழியில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படிக்கும் 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது

தமிழ் வழியில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படிக்கும் 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் சென்னை, டிச.28- தமிழ் வழியில் படித்து எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 960 பேர்களுக்கு 'பெருந்தலைவர் காமராஜர் விருது' வழங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று தலைமை செயலகத்தில் பேட்டி அளித்த போது கூறியதாவது:- பெருந்தலைவர் காமராஜர் விருது தமிழ் வழியில் படித்து பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவ-மாணவிகளுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் பிறந்தநாளில் வழங்கப்பட உள்ளது. 10-ம் வகுப்பில் 15 மாணவர்கள், பிளஸ்-2 வகுப்பில் 15 மாணவ-மாணவிகளை தேர்ந்து எடுத்து 32 மாவட்டங்களை சேர்ந்த 960 பேர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். இந்த விருது பெறும் எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரமும், பிளஸ்-2 படித்த மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும். இதற்காக ரூ.1 கோடியே 45 லட்சத்து 30 ஆயிரம் நிதி ஒதுக்கப்படுகிறது. இதற்கான அரசா

2015-2016-ம் ஆண்டிற்கான தொழில் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்கலாம் தமிழக தொழிலாளர் துறை தகவல்

2015-2016-ம் ஆண்டிற்கான தொழில் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்கலாம் தமிழக தொழிலாளர் துறை தகவல் | வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு 'தொழில் நல்லுறவு பரிசு திட்டத்தை' தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது. நல்ல தொழில் உறவினை பேணி பாதுகாக்கும், வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2015-2016-ம் ஆண்டிற்கான 'தொழில் நல்லுறவு விருதுகள்' வழங்கப்பட உள்ளது. இந்த சிறப்பு விருதுகள் பெற தகுதியானவரை ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்புக்குழு தேர்ந்தெடுக்கும். இந்த விருதுக்குரிய விண்ணப்பங்களை தொழிலாளர் துறையின் வலைதளத்தில் ( http://www.labour.tn.gov.in/Labour ) இருந்து பதிவிறக்கும் செய்து கொள்ளலாம். மேலும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள தொழிலாளர் அலுவலகம், தொழிலாளார் உதவி ஆணையர் (சமரசம்) அலுவலகம், வட்டார தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனர்கள் அலுவலகம் மற்றும் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகம் ஆகி

TTDC RECRUITMENT 2018 | TAMILNADU TOURISM DEVELOPMENT CORPN. LTD-CHENNAI | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - CHIEF FINANCIAL OFFICER, COMPANY SECRETARY AND ASSISTANT MANAGER (TRAINEE) / (HOTELS) | NO. OF VACANCIES -10 | LAST DATE : 29.01.2018

TTDC RECRUITMENT 2018 | TAMILNADU TOURISM DEVELOPMENT CORPN. LTD-CHENNAI | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - CHIEF FINANCIAL OFFICER, COMPANY SECRETARY AND ASSISTANT MANAGER (TRAINEE) / (HOTELS) | NO. OF VACANCIES -10 | LAST DATE : 29.01.2018 TTDC RECRUITMENT 2018 | TAMILNADU TOURISM DEVELOPMENT CORPN. LTD-CHENNAI | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - CHIEF FINANCIAL OFFICER, COMPANY SECRETARY AND ASSISTANT MANAGER (TRAINEE) / (HOTELS) | NO. OF VACANCIES -10 | LAST DATE : 29.01.2018 | DOWNLOAD

தொப்பையைக் கரைக்கும், இதயநோயைத் தடுக்கும் பழங்கள்

தொப்பையைக் கரைக்கும், இதயநோயைத் தடுக்கும் பழங்கள் | இனிய சுவையுடன் ஏராளமான நன்மைகளையும் அளிப்பவை பழங்கள். எண்ணற்ற சத்துகளைக் கொண்ட பெட்டகங்களாக அவை திகழ்கின்றன. வாழைப்பழம்: இயற்கையாகவே வாழைப்பழத்தில் அமில எதிர்ப்புச் சக்தி அதிகம். அதனால், தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் பிரச்சினையில் இருந்து விடுதலை கிடைக்கும். உடல் பருமன் உள்ளவர்கள், மெலிந்த தேகம் உள்ளவர்கள் என அனைவருமே வாழைப்பழத்தைச் சாப்பிட்டு அதன் பலன்களை அடையலாம். புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட, வாழைப்பழத்தைச் சாப்பிடலாம். வாழைப்பழத்தில் உள்ள பி 6, பி 12 போன்றவை புகைபிடிக்கத் தூண்டும் நிகோட்டினை சிறிது சிறிதாகக் குறைக்க உதவும். இதன் மூலம் புகைப் பழக்கத்தில் இருந்து விடுபட முடியும். பப்பாளிப்பழம்: ஆண்டு முழுவதும் கிடைக்கும் பழங்களில் ஒன்று, பப்பாளி. இதில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து நிறைந்துள்ளதால், பல் தொடர்பான குறைபாட்டைத் தீர்க்கவும், சிறுநீர்ப்பையில் ஏற்படும் கற்களைக் கரைக்கவும் உதவுகிறது. மேலும், இது நரம்புகள் வலுப்பெறவும், ஆண்மை பலம் கிட்டவும், ரத்த விருத்தி பெ

நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018

நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD

COMMISSIONERATE OF MUNICIPAL ADMINISTRATION | APPLICATIONS ARE INVITED FOR THE POST OF SANITARY INSPECTOR IN VARIOUS MUNICIPALITIES GOVERNED UNDER TAMIL NADU MUNICIPAL PUBLIC HEALTH SERVICE REGULATIONS 1970. LAST LATE : 19.01.2018.

COMMISSIONERATE OF MUNICIPAL ADMINISTRATION | APPLICATIONS ARE INVITED FOR THE POST OF SANITARY INSPECTOR IN VARIOUS MUNICIPALITIES GOVERNED UNDER TAMIL NADU MUNICIPAL PUBLIC HEALTH SERVICE REGULATIONS 1970. LAST LATE : 19.01.2018. The eligible candidates possessing the required qualification, age and other qualifications may apply in the prescribed format. No.of vacancy Women General Destitute Widow Ex- Serviceman Total Priority Non Priority Priority Non Priority General 0 7 7 19 0 1 34 BC 0 6 8 10 2 3 29 BC (M) 1 0 0 2 0 1 4 MBC 0 6 5 9 0 2 22 SC 1 2 4 7 2 1 17 SC(A) 1 0 0 2 0 0 3 ST 0 0 0 0 1 0 1 Total 110 Qualification Must possess B.Sc.,( Chemistry) with a Sanitary Inspector's Certificate granted by The Additional Director of Health Services and Family Planning, Chennai as the Chairman, Board of Examiners, constituted by Government in this behalf (or) must possess a Health Inspector's Certificate awarded by the Principal, Medical College, Trivandrum (or) must possess

APPLICATIONS ARE INVITED FOR ADMISSION TO B.ED. PROGRAMME 2018-2020 THROUGH THE SCHOOL OF DISTANCE EDUCATION | APPLICATIONS ARE ISSUED FROM : 13.12.2017 • SPOTADMISSION FROM 13.12.2017 • LAST DATE FOR RECEIPT OF FILLED IN APPLICATIONS : 30.04.2018

APPLICATIONS ARE INVITED FOR ADMISSION TO B.ED. PROGRAMME 2018-2020 THROUGH THE SCHOOL OF DISTANCE EDUCATION | APPLICATIONS ARE ISSUED FROM : 13.12.2017  • SPOTADMISSION FROM 13.12.2017  • LAST DATE FOR RECEIPT OF FILLED IN APPLICATIONS : 30.04.2018 | SCHOOL OF DISTANCE EDUCATION BHARATHIAR UNIVERSITY State University - Reaccredited with 'A' Grade by NAAC Ranked 287 among Indian Universities by MHRD - NIRF COIMBATORE - 641046, TAMIL NADU. Ph: 0422-2422222. 2427742 Fax : 0422-2423330, Website: www.b-u.ac.in APPLICATIONS ARE INVITED FOR ADMISSION TO B.Ed. PROGRAMME 2018-2020 through the School of Distance Education Approved by the Distance Education Bureau (DEB-UGC), New Delhi & National Council for Teacher Education (NCTE), Bangalore • Applications are issued from : 13.12.2017  • SpotAdmission from 13.12.2017  • Last date for receipt of filled in Applications : 30.04.2018 • For more details refer Website / Prospects Further Details : Contact Department

50 சதவீத மானியத்தில் ஒரு லட்சம் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் ஜெயலலிதா பிறந்தநாளில் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

50 சதவீத மானியத்தில் ஒரு லட்சம் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் ஜெயலலிதா பிறந்தநாளில் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு | ஜெயலலிதா பிறந்தநாளில் 50 சதவீத மானியத்தில் ஒரு லட்சம் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஊட்டியில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது- 50 சதவீத மானியத்தில் ஸ்கூட்டர் இன்றைக்கு மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா அரசு, அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அவர் உயிருடன் இருந்தபோது படித்த இளம்பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அந்த திட்டம், ஜெயலலிதா பிறந்த நாளான வருகிற பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தொடங்கி வைக்கப்படும். அம்மா இருசக்கர வாகனம், பாதி விலை மானியத்தில், ஒரு ஸ்கூட்டர் ரூ.50,000 என்றால், ரூ.25,000 மானியமாக வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். முதலில் ஒரு லட்சம் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும். ஊழல் குற்றச்சாட்டு அ.தி.மு.க ஐ.சி.யு.வில் இருப்பது போல பா.ம.க. இளைஞர் அண

அதிக மகிழ்ச்சியும் துயரமே! |

அதிக மகிழ்ச்சியும் துயரமே! | கலைஞர்கள் பலர், மிதமான மன எழுச்சியின்போது படைப்பூக்கத்தின் உச்சத்தை எட்டியிருக்கிறார்கள் அதீதத் தன்னம்பிக்கையால் பயம் என்னும் தேவையான உணர்வு குறைந்து விடும் எழுச்சியும், சோர்வும் மாறி மாறி எதிரெதிர் துருவத்துக்குச் செல்லும் நோய்க்கு 'இருதுருவ மனநிலை' என்று பெயர் வாழ்க்கை, ஒரு பியானோ போன்றது. கறுப்பு, வெள்ளைக் கட்டைகள் இரண்டுமே மாறிமாறி இசைத்தால்தான் இசை பிறக்கும். வெள்ளை கட்டை மகிழ்ச்சி, கறுப்புக் கட்டை சோகம் - எஸ்ஸான் இத்தொடரின் ஆரம்பத்தில், எப்படி எல்லா விஷயங்களிலுமே எதிரெதிர் துருவங்கள் உள்ளன, அதில் நடுநிலையிலிருந்து அதீத தூரம் உள்ள... | DOWNLOAD

அண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு

அண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு | மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. முதல்முறையாக மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக தேர்வு முடிவுகள் தெரிவிக்கப்பட்டன. தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வுகளை நடத்தி வருகிறது. வழக்கமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். கடந்த நவம்பர், டிசம்பரில் நடந்த செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகள் நேற்று இணையதளங்களில் வெளியிடப்பட்டதோடு ஒவ்வொரு மாணவருக்கும் எஸ்எம்எஸ் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டது. பொறியியல் மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் செமஸ்டர் தேர்வு முடிவுகளை தெரிவிக்கும் முறை தற்போதுதான் முதல் முறையாக அண்ணா பல்கலை.யில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை உடனடியாக தெரிந்து கொள்வதற்காகவும் கூடுதல் வசதியாகவும் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலை. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.உமா தெரிவித்தார். மற்ற செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகளை இண

ஜன.5-ம் தேதி முதல் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு

ஜன.5-ம் தேதி முதல் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு | தமிழகத்தில் 1.84 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஜனவரி 5-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டும், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றுடன் 2 அடிநீள கரும்பு என பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்தார். இதை யடுத்து, கரும்பு கொள்முதல் பணியை கூட்டுறவுத் துறை தொடங்கியுள்ளது. மேலும், முந்திரி, திராட்சை ஆகியவை தலா 20 கிராம் மற்றும் குறிப்பிட்ட அளவு ஏலக்காய் ஆகியவற்றை சிறிய பாக்கெட்களில் அடைக்கும் பணியும் கூட்டுறவுத் துறையில் தொடங்கப்பட்டுள்ளது. ஜனவரி 5-ம் தேதி முதல் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார். 6-ம் தேதி முதல் மாவட்டங்களில் அமைச்சர்கள் இத்திட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். பொங்கலுக்கு முன் 1.84 கோடி குடும்ப அட்டைகளுக்கும் பொருட்களை வழங்க வேண்டும் என்று நி

ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக ‘வெயிட்டேஜ்’ முறை மாற்றம்

ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக 'வெயிட்டேஜ்' முறை என்பது 2013-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து அதில் ஏதோ ஒரு குறைபாடு இருந்து வருகிறது. இதுகுறித்து நானும், துறை செயலாளரும் முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளோம். அதன்பிறகு அதில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரலாம்? என்பது குறித்து கூறுவோம். இதுகுறித்து ஆசிரியர்கள் தரப்பிலும் ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்கள். அதன்மீதும் நிச்சயம் பரிசீலனை செய்யப்படும். பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமன தேர்வில் சிறிய அளவில் குறைபாடு நிகழ்ந்திருக்கிறது. மற்றபடி பெரிய அளவில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. தவறு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குறைபாடு குறித்து 'எல்காட்' நிறுவனத்திடம் இருந்து விளக்கம் கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் உடன் இருந்தார்.

அங்கீகாரத்தை புதுப்பிக்க ஜன., 1 முதல் விண்ணப்பம்

அங்கீகாரத்தை புதுப்பிக்க ஜன., 1 முதல் விண்ணப்பம் பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரிகளுக்கான அங்கீகாரம் புதுப்பிக்கும் பணிகளுக்கு, 2018 ஜன., 1ம் தேதி முதல் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம்' என, ஏ.ஐ.சி.டி.இ., அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) கட்டுப்பாட்டில் பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன.புதிய கல்லுாரிகள் துவங்க அங்கீகாரம் பெறுவதும், செயல்பாட்டிலுள்ள கல்லுாரிகள் புதிய பாடப்பிரிவுகள் துவங்கவும், கூடுதல் மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்ட அனைத்திற்கும் ஆண்டு தோறும், அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டியது கட்டாயம். அதன் படி, 2018-19ம் கல்வியாண்டிற்கான அங்கீகாரம் பெறுவதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. வரும், ஜன., 1 முதல் 31ம் தேதி வரை, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. செயல்பாட்டிலுள்ள கல்லுாரிகள் மட்டும், அபராதத்துடன் பிப்., 5ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.விண்ணப்பங்களை ஆய்வு செய்து, அங்கீகாரம் வழங்கும் பணி, 2018 பிப்., 1ம் தேதி முதல் ஏப்., 10ம் தேதி வரை நடக்கவுள்ளது. மேலும்,

தனித்தேர்வர்களுக்கு அவகாசம்-ஜன.2 முதல் ஜன.4-ம் தேதிக்குள் ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் : அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.

தனித்தேர்வர்களுக்கு அவகாசம் : அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு. 10-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் தாக்கல் முறையில் பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 2018-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க ஏற்கனவே அறிவித்த கால அவகாசம் நிறைவடைகிறது. ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் ஜன.2 முதல் ஜன.4-ம் தேதிக்குள் ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

போலீஸ் வேலைக்கு விண்ணப்பம்:கமிஷனர் ஆபிசில் உதவி மையம்

போலீஸ் வேலைக்கு விண்ணப்பம்:கமிஷனர் ஆபிசில் உதவி மையம் போலீஸ் வேலைக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க, கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.தமிழக காவல் துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறையில் மொத்தம் 6,140 பணியிடங்கள் காலியாகவுள்ளது. இதில், 5,538 இரண்டாம் நிலை காவலர், 365 இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் 237 தீயணைப்பு வீரர்கள் பணியிடம் அடங்கும். இக்காலியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் தேர்வு நடத்துகிறது. இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. எழுத்து தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரலில் நடக்கிறது. ஆன்லைன் மற்றும் அஞ்சல் துறை மூலமாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்வோருக்கு, ஜன., 27ம் தேதியும், அஞ்சல் அலுவலகம் மூலம் விண்ணப்பிக்க ஜன., 30ம் தேதியும் கடைசி நாளாகும்.ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தரை தளத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மூன்று பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கண்டுபிடிப்பை ஊக்குவிக்க மாணவர்களுக்கு போட்டிகள்

கண்டுபிடிப்பை ஊக்குவிக்க மாணவர்களுக்கு போட்டிகள் | மத்திய அரசின் கீழ் செயல்படும், 'நேஷனல் டிரஸ்ட்' எனும் தேசிய அறக்கட்டளை சார்பில், கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு பிரிவுகளின் கீழ், கல்லுாரி மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட் இந்தியா ஹெகத்தான்- 2017' என்ற தலைப்பில் தேசிய அளவில், போட்டிகள் நடத்தப்படுகின்றன. தற்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில், கண்டுபிடிப்புகளை வடிவமைக்க, பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆராய்ச்சி கருத்துருக்கள் தெளிவான விபரங்கள், வடிவமைப்புகளுடன், 2018 பிப்.,1ம் தேதிக்குள், சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்களின் கண்டுபிடிப்புகள் கல்லுாரிகள் மூலமேஅனுப்பப்பட வேண்டும்.தேர்வு பெறும், கண்டுபிடிப்புகளுக்கு, பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படும். மேலும், தெளிவான விபரங்களுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் இணையதளத்தில் பார்க்கலாம்.

ஆண்டுவிழா கொண்டாட பள்ளிகளுக்கு ரூ.42 லட்சம் ஒதுக்கீடு

ஆண்டுவிழா கொண்டாட பள்ளிகளுக்கு ரூ.42 லட்சம் ஒதுக்கீடு | அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், ஆண்டுவிழா கொண்டாட, 41.92 லட்சம் ரூபாய் நிதி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை, அந்தந்த பள்ளி மேலாண்மை குழுவின், வங்கி கணக்கு எண்ணில் பரிமாற்றப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், சமூக பங்கேற்பு நிகழ்ச்சிகள் வரையறுக்கப்பட்டு, ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், மாவட்ட அளவிலான தனித்திறன் போட்டிகள், சமீபத்தில் நடந்தன. இதேபோல், 130 அரசுப் பள்ளிகளில், வண்ண சித்திரங்கள் வரையப்பட்டு வருகின்றன. இதன்மூலம், மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்த, வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பள்ளி செயல்பாடுகளில், பெற்றோர், பொதுமக்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் நோக்கில், ஆண்டுவிழா கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது.இதில், அனைத்து மாணவர்களின் பங்களிப்பும் இருப்பதோடு, பெற்றோரையும் ஒருங்கிணைத்து, விழா ஏற்பாடுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மை

போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவருக்கு இலவச கையேடு

போட்டித் தேர்வுக்கு தயாராகும்  மாணவருக்கு இலவச கையேடு : 70 ஆயிரம் மாணவர்களுக்கு பயன் நீட், ஐ,ஐ.டி., போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சிறப்பு கையேடுகள் வழங்கியுள்ளது. நீட்ஐ .ஐ.டி., ஜே.இ.இ. போன்ற தகுதித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த சிறப்புமையங்கள் துவக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக மாவட்டம் தோறும் தலா 3 'தொடுவானம்' சிறப்பு மையங்கள் துவங்கப்பட்டுள்ளன.இம் மையங்களில் ஆன்-லைன் வசதியுடன் வீடியோ கான்பரசிங் முறையில் கல்வியாளர்கள், நிபுணர்கள் பயிற்சி அளிக்கின்றனர். இம்மையங்களில் பயிற்சி பெற தமிழகம் முழுவதும் 70 ஆயிரம் மாணவர்கள் ஆன்-லைனில் பதிவு செய்துள்ளனர்.இவர்களுக்கு 'ஸ்பீடு இன்ஸ்டியூட்' மூலம் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் போட்டித்தேர்விற்கான 300 பக்க கையேடுகள் பாகம்,1, பாகம் 2 என இரு புத்தகங்களாக மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அதில், தேவையான இடங்களில் அட்டவணை தரப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் பல்வேறு தேர்வுகளில் கேட்கப்பட்டிருந்தவை உட்பட 500க்கும் மேற்ப

கனவு ஆசிரியர்’ விருது மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க குழுக்கள் அமைப்பு

கனவு ஆசிரியர்' விருது மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க குழுக்கள் அமைப்பு | தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:– அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள்,உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சிறந்த முறையில் கணினியை பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் சிறந்த ஆசிரியர், கல்வி இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சேர்க்கை மற்றும் பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு கனவு ஆசிரியர் விருதுடன், ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று 2017–18–ம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி கனவு ஆசிரியர் விருதுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்ய மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர் தலைவராகவும், பள்ளிக்கல்வித்துறை கூடுதல், இணை செயலாளர்,தொடக்கக் கல்வி இயக்குனர், அரசு

TNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.

TNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.   |  DOWNLOAD

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பதவிகள் (Non-Teaching Posts) நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.

​ கேந்திரிய வித்யாலயாவில் பணி | கே.வி. பள்ளிகள் என்று அழைக்கப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பதவிகள் (Non-Teaching Posts) நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இதில், துணை ஆணையர், உதவி ஆணையர், நிர்வாக அதிகாரி, நிதி அலுவலர், உதவிப் பொறியாளர், உதவியாளர், இந்தி மொழிபெயர்ப்பாளர், மேல்நிலை எழுத்தர், கீழ்நிலை எழுத்தர், சுருக்கெழுத்தர், நூலகர் எனப் பல்வேறு விதமான பணிகளில் மொத்தம் 1,017 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி, வயது வரம்பைப் பொறுத்தமட்டில், பதவியின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். அப்ஜெக்டிவ் முறையிலான எழுத்துத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். தகுதியுள்ள நபர்கள் கே.வி.எஸ். இணையதளத்தை ( www.kvsangathan.nic.in ) பயன்படுத்தி 2018 ஜனவரி 11-ம் தேதிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும். த

மாணவர்கள், பெற்றோர்களின் கல்வி குறித்த சந்தேகங்களை போக்கும் உதவி மையம் சென்னையில் அமைக்கப்படுகிறது

​ மாணவர்கள், பெற்றோர்களின் கல்வி குறித்த சந்தேகங்களை போக்கும் உதவி மையம் சென்னையில் அமைக்கப்படுகிறது | மாணவர்கள், பெற்றோர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த சந்தேகங்களை போக்கவும், ஆலோசனை வழங்கவும் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் இலவச தொலைபேசி எண் வசதியுடன் உதவி மையம் அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மாணவர்கள்-மாணவிகள், பெற்றோர்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இதர துறைகள் குறித்த தேவையான தகவல்கள், தெளிவுரைகள், ஆலோசனைகள் ஆகியவற்றை பெறுவதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண் (14417) வழியாக தொடர்பு கொள்ளும் வழிகாட்டி உதவி மையம் அமைக்கப்படுகிறது. இந்த மையம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. மையத்தின் பயன்பாடுகள் வருமாறு:- போட்டித்தேர்வு * இந்தமையம் மூலம் கலை, இலக்கியம், பண்பாடு, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் வணிகம், மற்றும் வேலைவாய்ப்பு போன்ற துறைகள் குறித்த தகவல்களையும் ஆலோசனைகளையும் வழங்குதல். * மாநில அளவிலும், தேசிய அளவிலும் உயர் கல்விக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் பங்கேற்பதற்கான வழிகாட்டுதல்களை தெரிவிப்பது. * மாணவர்களுக்கு தேவையான

பிப்ரவரி மாதம் புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பிப்ரவரி மாதம் புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | வருகிற பிப்ரவரி மாதம் புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- இந்த கல்வி ஆண்டில் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். இது அடுத்த கல்வி ஆண்டில் 10 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகளாக அதிகரிக்கப்பட உள்ளது. 73 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி மையங்களில் சேர்ந்துள்ளனர். இந்த அரசை பொறுத்த வரையில் கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்கள் பிளஸ்-2 மாணவர்களுக்கு 5 லட்சத்து 80 ஆயிரம் மடிக்கணினி இலவசமாக வழங்கப்படவுள்ளது. இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள் மாவட்ட நூலகங்களில் தொடங்கப்படும். மாணவ-மாணவிகளிடையே மன அழுத்தத்தை போக்குவதற்காக பெற்றோர்-ஆசிரியர் சங்கம் மூலம் பயிற்சி அளிக்கப்படும். இதனால் அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த கல்வியை பெறுவார்கள். வருகிற பிப்ரவரி மாதத்தில் புதிய பாடத்திட்டங்கள் வெளியிடப்

பள்ளி ஆசிரியர்கள் தொந்தரவால் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை மாணவர்கள் தற்கொலை? பட்டியல் அளிக்க முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, கல்வித்துறை உத்தரவு

​ பள்ளி ஆசிரியர்கள் தொந்தரவால் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை மாணவர்கள் தற்கொலை? பட்டியல் அளிக்க முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, கல்வித்துறை உத்தரவு | பள்ளி ஆசிரியர்களின் தொந்தரவினால், கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்ற பட்டியலை அளிக்க வேண்டுமென அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள பனப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த 4 மாணவிகள் கடந்த நவம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டனர். படிப்பில் அக்கறை காட்டாததால் ஆசிரியர்கள் மாணவிகளை திட்டியதோடு, அவர்களது பெற்றோரை அழைத்து வரச்சொன்னதால் மாணவிகள் தற்கொலை முடிவை எடுத்ததாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக அந்த பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனையடுத்து ஆசிரியர்கள் தொந்தரவால் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் விதமாக, முதல் கட்டமாக 2014-2015, 2015-2016, 2016-2017 ஆகிய 3 கல்வி ஆண்டுகளில் எத்தனை மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து இருக்கிறார்கள் என்பது குறித்த பட்டியலை தயாரிக்க பள்ளி கல்வித்துறை இ

தேசிய கல்வி ஆராய்ச்சி பாடத்திட்டத்தை பின்பற்றாத சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

தேசிய கல்வி ஆராய்ச்சி பாடத்திட்டத்தை பின்பற்றாத சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு | தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்டத்தை பின்பற்றாத சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் புருஷோத்தமன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள் முதல் வகுப்பில் 8 பாடங்களைப் பயிற்றுவிக்கின்றன. ஆனால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) பாடத்திட்டத்தின்படி முதல் வகுப்பில் 3 பாடங்களே பயிற்றுவிக்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தை பின்பற்றுவது இல்லை. லாபநோக்கில் தனியார் புத்தக நிறுவனங்கள் 4 மடங்கு அதிகமான விலைக்கு விற்பனை செய்யும் புத்தகங்களையே சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மாணவர்களிடம் திணிக்கின்றன. இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தை பின்பற்ற சி.பி.எஸ்.இ. நிர்

சென்னையில் 41-வது புத்தக கண்காட்சி ஜனவரி 10-ல் தொடக்கம்!

சென்னையில் 41-வது புத்தக கண்காட்சி ஜனவரி 10-ல் தொடக்கம்! சென்னையில் 41-வது புத்தகக் கண்காட்சி ஜனவரி மாதம் 10-ந் தேதி தொடங்க உள்ளது. சென்னையில் ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் சார்பில் பிரமாண்ட புத்தகக் கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டு ஜனவரி 10-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை இப்புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. நடப்பாண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிராகே அமைந்தகரை புனித ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளிக்கூட வளாகத்தில் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் தேர்வுமுறையில் விரைவில் மாற்றம்-மாற்றம் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு.

ஆந்திரா நடைமுறையைப் பின்பற்ற முடிவு இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில் விரைவில் மாற்றம் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு | அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் தேர்வுமுறையில் விரைவில் மாற்றம் கொண்டுவரவும், ஆந்திராவில் இருப்பதைப் போன்று தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தவும் பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டு வருகிறது. தற்போது அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் வெயிட் டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 சதவீதமும், பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட் ஆகியவற்றுக்கு 40 சதவீதமும் (இடைநிலை ஆசிரியர் எனில் பிளஸ் 2 மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி) வெயிட்டேஜ் அளிக்கப்படுகிறது. அண்மைக்காலமாக பிளஸ் 2 உள்ளிட்ட தேர்வுகளுக்கு அதிக மதிப்பெண் வழங்கப்படுவதால் 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்பு இத்தேர்வுகளில் மதிப் பெண் குறைந்த அளவே வழங்கப்பட்டதால், வெயிட்டேஜ் முறையை மாற்ற வேண்டும் என்றும், தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரிய

BT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல். | DOWNLOAD

BT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல்.   |  DOWNLOAD BT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல் - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள். |  DOWNLOAD

அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன் சிலிங், அடுத்த ஆண்டு முதல், 'ஆன் லைனில்' நடத்தப்படும் என, உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன் சிலிங், அடுத்த ஆண்டு முதல், 'ஆன் லைனில்' நடத்தப்படும் என, உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதனால், வெளியூர் மாணவர்கள், சென்னைக்கு வர வேண்டிய அலைச்சல் இல்லை. அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., - எம்.இ., - எம்.டெக்., உள்ளிட்ட படிப்புகளுக்கு, கவுன்சிலிங் வாயிலாக, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். கவுன்சிலிங்கை, தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலை நடத்துகிறது.இந்நிலையில், 2016ல் நடந்த கவுன்சிலிங்கில், மாணவர் சேர்க்கை செயலராக இருந்த,பேராசிரியை இந்துமதி, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகம் செய்தார். இரண்டு ஆண்டுகளாக, ஆன்லைன் விண்ணப்ப முறை பின்பற்றப்படுகிறது. அதை தொடர்ந்து, வரும் கல்வி ஆண்டில், ஆன்லைனிலேயே கவுன்சிலிங் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.இதற்காக, இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலராக, அண்ணா பல்கலை பேராசிரியர், ரைமண்ட் உத்தரியராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, 2015 வரை, இவர், இப்பொறுப்பில் இருந்துள்ளார். அவரது மேற்பார்வையில், வரும் கல்வி ஆண்டில், 'ஆன்லைன் கவுன்சிலிங்

உதவி பேராசிரியருக்கான தகுதி தேர்வு RTI பதில்கள்.

(i) உதவி பேராசிரியருக்கான தகுதி தேர்வு கட்டாயம் என்ற விதிமுறையானது தமிழகத்தில் எப்போது கட்டாயமாக்கப்படும்? மற் றும் (ii) முழு நேர முறையில் முனைவர் பட்டம் பெறுவதற்காக செலவிடும் நாட்களை கற்பித்தல் அனுபவமாக கருத்தில் கொள்ளப்படுமா?என்ற கேள்விகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்மூலம் உயர்கல்வி துறை வழங்கிய பதில்கள். கோரிய விவரங்கள்:  (i) பல்கலைக்கழக மானிய குழுவின் (UGC) சுற்றறிக்கை அறிவிப்பு எண்: No.F.1-2/2016(PS/Amendment) நாள்: 11th July, 2016 படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக (Assistant Professor) பணியாற்றிட குறைந்தபட்ச தகுதியை நிர்ணயம் செய்துள்ளது. அதன் படி ஜூலை 11, 2009 க்கு அடுத்து முனைவர் பட்டம் (Ph.D) பயில பதிவு செய்தவர்கள் கட்டாயமாக தேசிய அல்லது மாநில அளவிலான உதவி பேராசிரியருக்கான தகுதி (நெட்/செட்) தேர்வினை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது முனைவர் பட்டம் பெற்றாலும் நெட்/செட் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெறவேண்டும் அல்லது முதுகலை பட்ட படிப்பு (M.A/M.Sc/M.Com) உடன் நெட்/செட் தகுதி இருந்தால் போதும் என்று யுஜிசி (UGC) கூறியுள்ளது. இதன் அட