வங்கிகளில் ஆதார் எண்ணை பயோமெட்ரிக் மூலம் இணைக்க வேண்டும்வங்கிகளில் ஆதார் எண்ணை பயோமெட்ரிக் மூலம் இணைக்க வேண்டும் | தற்போது அனைத்து வங்கிப் பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சேமிப்புக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கும் பணியில் வங்கிகள் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு வங்கிகளில் ஆதார் எண்ணை இணைக்கச் செல்லும்போது, வங்கிகளில் ஆதார் அட்டையின் நகலையும் கேட்கிறார்கள். ஆனால் வங்கிகளில் பயோமெட்ரிக் முறையில் வாடிக்கையாளர்களின் கைவிரல் ரேகைகளைப் பதியச் செய்வதால், ஆதார் அட்டையின் நகலைக் கேட்பது தேவையற்றது. இதன் மூலம், பொதுமக்களுக்கு சிரமம் குறைவதோடு, வங்கிகளுக்கும் இப்பணி எளிதாக அமையும். இவ்வாறு குமரய்யா கூறினார். இதுகுறித்து, பொதுத்துறை வங்கி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் படி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், நாங்கள் இப்பணியை மேற்கொண்டு வருகிறோம். பயோமெட்ரிக் இயந்திரம் அனைத்து வங்கிக் கிளைகளுக்கும் வழங்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு பயோமெட்ரிக் இயந்திரம் வந்தால்தான், வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆதார் அட்டையின் நகலை கேட்பதை நிறுத்த முடியும். ஏற்கெனவே ஊழியர் பற்றாக்குறை நிலவி வரும் வேளையில் எங்களுக்கு இப்பணி மேலும் கூடுதலான பணிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பயோமெட்ரிக் இயந்திரம் வங்கிக் கிளைகளில் நிறுவினால் எங்களுக்கும் பணிச்சுமை குறையும் என கோரிக்கை எழுந்துள்ளது

Comments