ஆதாரை இணைக்க தனியார் அமைப்புகளை பயன்படுத்த வங்கிகளுக்கு அனுமதி

ஆதாரை இணைக்க தனியார் அமைப்புகளை பயன்படுத்த வங்கிகளுக்கு அனுமதி | வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்காக தனியார் அமைப்புகளை பயன்படுத்திக்கொள்ள வங்கிகளுக்கு ஆதார் ஆணையம் அனுமதி அளித்துள்ளது* வங்கிகள் மூலம் மட்டுமே இந்த இணைப்பு பணியை மேற்கொண்டால் அதற்காக அதிக நாட்கள் தேவைப்படும் என்றும், வங்கி ஊழியர்களுக்கு கூடுதல் பணி சுமை எனவும் வங்கிகள் தரப்பில் இருந்து எடுத்துக்கூறப்பட்டது. இதனையடுத்து தனியார் அமைப்புகளை பயன்படுத்திக்கொள்ள ஆதார் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க தனியார் அமைப்புகளை வங்கிகள் பயன்படுத்தினாலும், அந்தப் பணிகள் வங்கி கிளைகளில் மட்டுமே நடைபெற வேண்டும் என்றும், அதனை வங்கி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் எனவும் ஆதார் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Comments