7 ஐபிஎஸ் அதிகாரி இடமாற்றம்

7 ஐபிஎஸ் அதிகாரி இடமாற்றம் | தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாநகர காவல் ஆணையராக இருந்தஏ.அமல்ராஜ், திருச்சி மாநகர காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். திருச்சி மாநகர காவல் ஆணையரான ஏ.அருண், பெருநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெருநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக இருந்த கே.பெரியய்யா, கோவை மாநகர காவல் ஆணையராக மாற்றப்பட்டுள் ளார். சிவில் சப்ளைஸ் சிஐடி ஐஜியாக இருந்த ஜி.வெங்கடராமன், காவல் நிர்வாகப் பிரிவு ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நிர்வாகப் பிரிவு ஐஜியாக இருந்த ஆர்.தினகரன், காவல் துறை விரிவாக்க பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். போலீஸ் பயிற்சிக் கல்லூரிடிஐஜியாக சோனல் வி.மிஸ்ரா, அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக அமானத் மான் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக உள்துறை முதன்மைச் செயலர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ளார்.

Comments