100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி அளிக்க திட்டம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி அளிக்க திட்டம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் | தமிழகத்தில் 100 அரசுப் பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து வெளிநாடுகளில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தெரிவித்தார். பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் அரசுப் பள்ளியில் நேற்று புதிய கட்டிடங்களை திறந்துவைத்த அமைச்சர் செங்கோட்டையன், பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட அனகாபுத்தூர் அரசுப் பள்ளி மற்றும் பல்லாவரம் தெரசா பள்ளி உள்ளிட்ட 10 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 2,676 விலையில்லா மடிக்கணினிகளை வழங் கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பள்ளிக்கல்வி துறை சார்பில் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இருந்து 100 மாணவர்களை தேர்ந்தெடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். நார்வே, அமெரிக்கா, ரஷியா, ஜெர்மனி உள்ளிட்ட பல் வேறு நாடுகளுக்கு, 25 பேர்கள் கொண்ட 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு மாணவர்கள் அனுப்பப்படுவார்கள். ரூ.3 கோடி செலவில் அந்த நாடுகளில் ஒவ்வொரு தொழில் நுட்பங்களையும் தெரிந்து கொள்வதற்காக அவர் கள் அனுப்பப்படவுள்ளனர். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டத்தை தமிழகம் உருவாக்கி இருக்கிறது. இந்த பாடதிட்டத்தை படிப்பதன் மூலம் எந்த நுழைவுத் தேர்விலும் தமிழக மாணவர்கள் பங்கு பெறலாம். தமிழ் மொழி வழியில் படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பிளஸ் ஒன் மற்றும் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் தலா 15 மாணவர்களை தேர்வு செய்து, உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், பிளஸ் 1 மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரமும் ஊக்கத் தொகையாக வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.

Comments