Skip to main content

Posts

Showing posts from November, 2017

தேசிய திறனாய்வுத் தேர்வு, நவம்பர் 2017 (NTSE) தற்காலிக விடைக்குறிப்பு 01.12.2017 அன்று வெளியிடப்படுகிறது.

தேசிய திறனாய்வுத் தேர்வு, நவம்பர் 2017 (NTSE) | செய்திக் குறிப்பு | 18.11.2017 அன்று நடைபெற்று முடிந்த நவம்பர் 2017 தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) சம்பந்தமான தற்காலிக விடைக்குறியீடு (Tentative Key Answer) அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதள முகவரியான www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 01.12.2017 அன்று வெளியிடப்படுகிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இவ்விடைக்குறியீடு சார்பாக மாற்றுக் கருத்துகள் ஏதேனும் இருப்பின் அவற்றை 04.12.2017-க்குள் directordge.tn@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது. | DOWNLOAD

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமா? வல்லுநர் குழு அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு இன்றுடன் (30.11.2017) முடிகிறது

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமா? வல்லுநர் குழு அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு இன்றுடன் (30.11.2017) முடிகிறது | அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்துவது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய புதிதாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையிலான வல்லுநர் குழு தனது அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று (30-ம் தேதி) முடிவடைகிறது. தமிழகத்தில் 1.4.2003 அன்று மற்றும் அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் புதிய பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லாததால் அரசு ஊழியர்கள் தொடர்ந்து புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்து வருகிறார்கள். அவ்வப்போது ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என பல்வேறு வழிகளில் போராட்டமும் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி அப்

ESLC 2018 | சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இன்றே (29.11.2017) கடைசி நாள்.கூடுதலாக ரூ.500/- செலுத்தி விண்ணப்பிக்கலாம். 8-வது வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு கால அட்டவணை

சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இன்றே (29.11.2017) கடைசி நாள்.கூடுதலாக ரூ.500/- செலுத்தி விண்ணப்பிக்கலாம். 8-வது வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு கால அட்டவணை | 2018-ம் ஆண்டுக்கான 8-வது வகுப்பு தனித்தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற ஜனவரி மாதம் நடத்தப்படுகிறது. தேர்வுக்கால அட்டவணை வருமாறு:- ஜனவரி 29-ந்தேதி -தமிழ், 30-ந்தேதி - ஆங்கிலம், 31-ந்தேதி -கணிதம், பிப்ரவரி மாதம் 1-ந்தேதி -அறிவியல், 2-ந்தேதி -சமூக அறிவியல். தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 12 மணிக்கு முடிவடையும். தேர்வு அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். | ESLC - JANUARY 2018 - EXAMINATION TIME TABLE DOWNLOAD | ESLC JANUARY 2018 - PRIVATE CANDIDATE INSTRUCTIONS DOWNLOAD | ESLC JANUARY 2018 - APPLICATION NODAL CENTRE DETAILS DOWNLOAD |

தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்த அரசு மருத்துவர்களை உதவி பேராசிரியர்களாக நியமிப்பதை எதிர்த்து வழக்கு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்த அரசு மருத்துவர்களை உதவி பேராசிரியர்களாக நியமிப்பதை எதிர்த்து வழக்கு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு | தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்த அரசு மருத்துவர்களை உதவி பேராசிரியர்களாக நியமிப்பதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் உதவி அறுவை சிகிச்சை மருத்துவர்களாக தேர்வு செய்யப்பட்டு அரசு மருத்துவமனைகளில் பணியில் இருந்து வரும் டாக்டர் சுதாகர் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:- நாங்கள் பணியில் இருந்து கொண்டே நுழைவுத்தேர்வு எழுதி முதுகலை மருத்துவ படிப்பு படித்து வருகிறோம். வருகிற மே மாதம் படிப்பு நிறைவடைகிறது. எங்களுக்கு மருத்துவக்கல்வி இயக்குனரகத்தின் கீழ் மூத்த நிலைய மருத்துவ அதிகாரியாகவோ அல்லது உதவி பேராசிரியராக பணியாற்ற அனைத்து தகுதியும் உள்ளது. இந்தநிலையில் மருத்துவ தேர்வு வாரியம், தற்காலிக அடிப்படையில் பணியாற்ற நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 550 உதவி அறுவை ச

‘1098’ என்ற இலவச தொலைபேசி எண் அறிவிப்பு: மாணவ-மாணவிகளின் தற்கொலை எண்ணத்தை போக்க புதிய முயற்சி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் தகவல்

'1098' என்ற இலவச தொலைபேசி எண் அறிவிப்பு: மாணவ-மாணவிகளின் தற்கொலை எண்ணத்தை போக்க புதிய முயற்சி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் தகவல் | வேலூர் மாவட்டம் பணப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த 4 மாணவிகள் சமீபத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்கிவிட்டது. ஆனால் மாணவ-மாணவிகள் தற்கொலைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை கண்டாக வேண்டும் என்ற முழு உத்வேகத்தில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கான திட்டங்களை வகுப்பதில் இந்த ஆணையத்தின் தலைவர் எம்.பி.நிர்மலா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது:- பள்ளி, கல்லூரி மாணவப் பருவத்தில் ஏதோ ஒரு வகையில் அவமானம் அடைந்தாலும் அதைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் மாணவர்களுக்கு இருப்பதில்லை. பெற்றோர் திட்டுவதைக்கூட அவமானமாகக் கருதி பிள்ளைகள் தற்கொலை செய்வதுண்டு. மற்றவர்கள் முன்னால் கண்டிக்கப்படுவதைத்தான் பெரும்பாலான குழந்தை

மத்திய அரசு ஊழியர்களுக்கு மாற்றுப்பணிக்கான படி உயர்வு மாதத்துக்கு ரூ.9 ஆயிரம்வரை கிடைக்கும்

மத்திய அரசு ஊழியர்களுக்கு மாற்றுப்பணிக்கான படி உயர்வு மாதத்துக்கு ரூ.9 ஆயிரம்வரை கிடைக்கும் | மத்திய அரசு ஊழியர்களுக்கு மாற்றுப்பணிக்கான படி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, மாதத்துக்கு ரூ.9 ஆயிரம்வரை கிடைக்கும். மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது மாற்றுப்பணிக்கான படியாக (டெபுடேஷன் அலவன்ஸ்), ஒரே ஊருக்குள் பணிக்கு செல்வதாக இருந்தால், அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதம் என்ற வீதத்தில், மாதத்துக்கு ரூ.2 ஆயிரம் என்ற உச்சவரம்புடன் வழங்கப்படுகிறது. வேறு ஊருக்கு மாற்றுப்பணியாக சென்றால், அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் என்ற வீதத்தில் மாதத்துக்கு ரூ.4 ஆயிரம் என்ற உச்சவரம்புடன் வழங்கப்படுகிறது. இந்நிலையில், 7-வது சம்பள கமிஷன் சிபாரிசுப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான மாற்றுப்பணி படியை மத்திய அரசு 2 மடங்கு உயர்த்தி உள்ளது. மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆணையில் இது கூறப்பட்டுள்ளது. இதன்படி, ஒரே ஊருக்குள் மாற்றுப்பணி செல்வதாக இருந்தால், உச்சவரம்பாக ரூ.4,500 வரை வழங்கப்படும். வெளியூருக்கு செல்வதாக இருந்தால், உச்சவரம்பாக ரூ.9 ஆயிரம்வரை கிடைக்கும். மேலும், அகவிலைப்படி 50

பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு அகமதிப்பீட்டு முறை கிடையாது பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு அகமதிப்பீட்டு முறை கிடையாது பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு | பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணை: 2017-2018-ம் கல்வியாண்டு முதல் பிளஸ் 1 மாணவர் களுக்கும் மாநில அளவில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்றும், ஒவ்வொரு பாடத்திலும் 10 சதவீத மதிப்பெண் அகமதிப்பீடாக வழங்கலாம் என்றும் ஏற்கெனவே ஆணையிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, கற்றலுக்கு மாணவர்களின் வருகைப்பதிவு முக்கியம் என்பதால் வருகைப்பதிவு, உள்நிலைத்தேர்வு, செயல்திட்டம் (புராஜெக்ட்), களப்பயணம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது தொடர்பாகவும் ஆணை வெளியிடப்பட்டது. எனினும் இந்த நடைமுறையானது பள்ளியில் படித்து தேர்வெழுதும் மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் மேல்நிலைத் தேர்வு எழுதும் தனித்தேர்வர் களுக்கு அகமதிப்பீட்டு முறையை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக 90 மதிப்பெண்ணுக்கான எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்ணை 100 மதிப்பெண்ணுக்கு கணக்கிட்டு வழங்கலாம் என்றும் அதற்கு அரசின் ஆணை வழங்குமாறும் அரசு தேர்வுகள் இயக்குநர் கோரியுள்ளார். அவரது கருத்துரு பர

பிரபஞ்ச அழகியாக தென் ஆப்பிரிக்காவின் டெமி லெய் தேர்வு

பிரபஞ்ச அழகியாக தென் ஆப்பிரிக்காவின் டெமி லெய் தேர்வு | பிரபஞ்ச அழகியாக தென் ஆப்பிரிக்க நாட்டின் 22 வயது டெமி லெய் நீல் பீட்டர்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் 66-வது பிரபஞ்ச அழகிப் போட்டி(மிஸ் யுனிவர்ஸ்) நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. இதில் 92 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். பல்வேறு சுற்றுகளை கொண்ட இந்த போட்டியின் இறுதிச் சுற்றுக்கு 22 வயது தென் ஆப்பிரிக்கா அழகி டெமி லெய் நீல் பீட்டர்ஸ், ஜமைக்காவின் டேவினா பென்னட்(22), கொலம்பியா நாட்டின் லாரா கோன்சலெஸ்(21) தாய்லாந்து நாட்டை சேர்ந்த மரியா போனெர்ட்லாப், வெனிசுலாவின் கெய்சி சயாகோ ஆகிய 5 அழகிகள் முன்னேறினர். கேள்விக் கணைகளால் துளைத்தெடுக்கப்பட்ட விறுவிறுப்பான இறுதிச்சுற்றில் தென் ஆப்பிரிக்காவின் டெமி லெய் சாமர்த்தியமாக பதில் அளித்து பிரபஞ்ச அழகி பட்டத்தை தட்டிச் சென்றார். இவர், வர்த்தக மேலாண்மை படிப்பில் பட்டம் பெற்றவர். டெமி லெய் தென் ஆப்பிரிக்கா அழகியாக பட்டம் வென்ற ஒரு மாதத்துக்கு பின்பு, அதாவது கடந்த ஜூன் மாதம் 7-ந்தேதி ஜோகன்னஸ்பர்க் நகரில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை மர்ம ம

G.O Ms.No. 340 Dt: November 20, 2017-Official Committee, 2017 – Recommendations of Official Committee, 2017 – Revision of Pension / Family Pension and Retirement Benefits – Amendment – Orders issued

G.O Ms.No. 340 Dt: November 20, 2017-Official Committee, 2017 – Recommendations of Official Committee, 2017 – Revision of Pension / Family Pension and Retirement Benefits – Amendment – Orders issued | DOWNLOAD

தமிழகம் முழுவதும் அஞ்சல் நிலையங்களில் செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்க பெற்றோர் ஆர்வம் இதுவரை 14.5 லட்சம் கணக்குகள் தொடக்கம்; ரூபாய் 2,000 கோடி டெபாசிட்

தமிழகம் முழுவதும் அஞ்சல் நிலையங்களில் செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்க பெற்றோர் ஆர்வம் இதுவரை 14.5 லட்சம் கணக்குகள் தொடக்கம்; ரூபாய் 2,000 கோடி டெபாசிட் | அஞ்சலகங்களில் செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்குவதில் பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்காரணமாக, தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மட்டும் இதுவரை 14.5 லட்சத்துக்கும் மேற்பட்ட செல்வ மகள் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அந்தக் கணக்குகளில் சுமார் ₹2,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக 'சுகன்யா சம்ரிதி யோஜனா' (செல்வ மகள் சேமிப்பு கணக்கு திட்டம்) என்ற சிறு சேமிப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2015-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர் அஞ்சலகங்கள் மற்றும் குறிப்பிட்ட வங்கிகளில் செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்கலாம். அந்தக் கணக்கில் ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயும் அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும் டெபாசிட் செய்ய முடியும். 15 ஆண்டுகள் டெபாசிட் செ

மாநிலங்களுக்கு வரி வருவாயை பகிர்ந்து அளிப்பதற்காக 15-வது நிதி கமிஷன் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல்

மாநிலங்களுக்கு வரி வருவாயை பகிர்ந்து அளிப்பதற்காக 15-வது நிதி கமிஷன் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் | மாநிலங்களுக்கு வரி வருவாயை பகிர்ந்து அளிப்பதற்காக, 15-வது நிதி கமிஷன் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில், 15-வது நிதி கமிஷன் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அரசியல் சட்ட அமைப்பான நிதி கமிஷன், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படுவது வழக்கம். நாட்டின் வரி ஆதாரங்களை மதிப்பிடுவதுடன், மாநிலங்களுக்கு வரி வருவாயை பகிர்ந்து அளிப்பதற்கான செயல்திட்டத்தையும் இந்த கமிஷன் சிபாரிசு செய்யும். 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்குள் இக்கமிஷன் தனது சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் என்று தெரிகிறது. கமிஷன் உறுப்பினர்கள் யார் யார்?, கமிஷனின் ஆய்வு வரம்புகள் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களிடம் தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மற்றும் 24 ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு அளிப்பதற்கான யோசனைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதற்கான

என்ஜினீயரிங் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்த 1,070 பேராசிரியர்களுக்கு தடை அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை

என்ஜினீயரிங் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்த 1,070 பேராசிரியர்களுக்கு தடை அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை | விடைத்தாள் திருத்தும்பணியில் மெத்தனமாக செயல்பட்டதால், என்ஜினீயரிங் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தம் செய்ய 1,070 பேராசிரியர்களுக்கு தடை விதித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 518 என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பருவத்தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இந்த விடைத்தாள்களை பேராசிரியர்கள் சரியாக திருத்துவதில்லை என்றும், மெத்தனமாக செயல்படுவதாகவும் புகார் எழுந்தது. குறிப்பாக கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த பருவத்தேர்வு விடைத்தாள்களை சரிவர திருத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் கணேசன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா ஆகியோரிடம் சிலர் புகார் செய்தனர். இதற்கிடையே பல மாணவ, மாணவிகள் தங்களது விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யக்கோரி விண்ணப்பித்து இருந்தனர். இதனையடுத்து மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகளின் விடைத்தாள்கள் ஏற்கனவே

நீதிபதி குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள், ஐகோர்ட்டில் மன்னிப்பு கேட்டனர். விசாரணையை டிசம்பர் 6-ந் தேதிக்கு தள்ளிவைப்பு.

நீதிபதி குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள், ஐகோர்ட்டில் மன்னிப்பு கேட்டனர் | நீதித்துறையின் மாண்பை கெடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்படவில்லை என்றும், இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் ஐகோர்ட்டில் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து முறையிட்டனர். ஊதிய முரண்பாடுகளை களைதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் நடத்தின. இதுதொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ஆசிரியர்கள் குறித்து பல்வேறு கேள்விகளை தமிழக அரசிடம் கேட்டு, அதற்கு பதிலளிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து நீதிபதி என்.கிருபாகரனை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர். இதுகுறித்து நீதிபதியின் கவனத்துக்கு வக்கீல்கள் சிலர் கொண்டு வந்தனர். இதையடுத்து, நீதிபதிகளையும், நீதித்துறையையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், ஆசிரியர் போராட்டம் தொடர்பான வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த நிர

TNPSC 9,351 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு

பல்வேறு துறைகளுக்கான இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்தாளர்கள் ஆகியோரை குரூப்-4 தேர்வின் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) பணியமர்த்தவிருக்கிறது. இதுவரை, கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பதவிக்குத் தனியாக தேர்வு நடத்தப்பட்டுவந்தது. இனிமேல் குரூப்-4 தேர்வையும், வி.ஏ.ஓ. தேர்வையும் சேர்த்து ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வாக நடத்த டி.என்.பி.எஸ்.சி. அண்மையில் முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. தற்போது வெளியிட்டிருக்கிறது. தேவையான தகுதி தேர்வுக்கான அடிப்படைக் கல்வித் தகுதி 10-ம் வகுப்புத் தேர்ச்சி. தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு மட்டும் கூடுதலாகத் தொழிற்கல்வித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பைப் பொறுத்தவரையில் வி.ஏ.ஏ. பணிக்கு 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினர் (எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி.) வயது வரம்பு 40-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர பணிகளுக்கு 18 முதல் 30-க்குள் இருக்க வேண்ட

நூலகர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு TNPSC அறிவிப்பு.

COLLEGE LIBRARIAN IN GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGES, DISTRICT LIBRARY OFFICER, ASSISTANT LIBRARIAN AND INFORMATION OFFICER FOR ANNA CENTENARY LIBRARY IN PUBLIC LIBRARIES DEPARTMENT | நூலகர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு அறிவிக்கை: 1.அரசு கலை & அறிவியல் கல்லூரிகள்- நூலகர், 2.மாவட்ட நூலக அலுவலர், 3. அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம்- உதவி நூலகர்/தகவல் அலுவலர் மேலும் விரிவான விவரங்களுக்கு | DOWNLOAD

All CBSE Entrance Exams (UGC NET, JEE, NEET, CTET) in 2018 Will Be Conducted by National Testing Agency (NTA)

All CBSE Entrance Exams (UGC NET, JEE, NEET, CTET) in 2018 Will Be Conducted by National Testing Agency (NTA) | CBSE conducted all entrance examination will now be handed over to the National Testing Agency soon as per the direction of the Union cabinet. The Central Board of Secondary Education (CBSE) approved the proposal of creating a separate National Testing Agency (NTA) that will take over all the entrance tests that are currently conducted by the Central Board of Secondary Education (CBSE).As per the guidelines of the Union Cabinet, CBSE will now conduct only board examinations for class 10 and 12. The other five entrance examinations of CBSE including National Eligibility and Entrance Test (NEET), Joint Engineering Entrance (JEE), University Grants Commission (UGC) National Eligibility Test (NET), tests of Jawahar Navodaya Vidyalayas and Central Teacher Eligibility Test (CTET). Now all these five entrance tests will be handed over to the NTA who will take charge of conducti

தேசிய திட்ட அமலாக்கத்துறையில் 1270 உதவி பேராசிரியர் பணியிடங்கள்

தேசிய திட்ட அமலாக்கத்துறையில் 1270 உதவி பேராசிரியர் பணியிடங்கள் மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய திட்ட அமலாக்கத்துறையில் "National Project Implementation Unit" காலியாக உள்ள 1270 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் டிசம்பர் மாதம் 11 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்குபெற்று பயனடையலாம். மொத்த காலியிடங்கள்: 1270 பணி: Assistant Professor துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1. Civil Engg and allied - 190 2. Mechanical Engg and allied - 191 3. Electrical Engg and allied - 158 4. Electronics Engg and allied - 155 5. Computer Engg/IT and equivalent - 177 6. Chemical Engg and allied - 59 7. English: 34 Posts Physics - 59 8. Mathematics - 77 9. Chemistry - 52 10. Geology - 5 11. Food Technology - 14 12. Metallurgy and allied - 11 13. Mining Engg and allied -13 14. Textile Engg and allied - 4 சம்பளம்: மாதம் ரூ.70,000 வயதுவரம்ப

ஆதாரை இணைக்க தனியார் அமைப்புகளை பயன்படுத்த வங்கிகளுக்கு அனுமதி

ஆதாரை இணைக்க தனியார் அமைப்புகளை பயன்படுத்த வங்கிகளுக்கு அனுமதி | வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்காக தனியார் அமைப்புகளை பயன்படுத்திக்கொள்ள வங்கிகளுக்கு ஆதார் ஆணையம் அனுமதி அளித்துள்ளது* வங்கிகள் மூலம் மட்டுமே இந்த இணைப்பு பணியை மேற்கொண்டால் அதற்காக அதிக நாட்கள் தேவைப்படும் என்றும், வங்கி ஊழியர்களுக்கு கூடுதல் பணி சுமை எனவும் வங்கிகள் தரப்பில் இருந்து எடுத்துக்கூறப்பட்டது. இதனையடுத்து தனியார் அமைப்புகளை பயன்படுத்திக்கொள்ள ஆதார் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க தனியார் அமைப்புகளை வங்கிகள் பயன்படுத்தினாலும், அந்தப் பணிகள் வங்கி கிளைகளில் மட்டுமே நடைபெற வேண்டும் என்றும், அதனை வங்கி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் எனவும் ஆதார் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

வங்கிகளில் ஆதார் எண்ணை பயோமெட்ரிக் மூலம் இணைக்க வேண்டும்

வங்கிகளில் ஆதார் எண்ணை பயோமெட்ரிக் மூலம் இணைக்க வேண்டும் | தற்போது அனைத்து வங்கிப் பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சேமிப்புக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கும் பணியில் வங்கிகள் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு வங்கிகளில் ஆதார் எண்ணை இணைக்கச் செல்லும்போது, வங்கிகளில் ஆதார் அட்டையின் நகலையும் கேட்கிறார்கள். ஆனால் வங்கிகளில் பயோமெட்ரிக் முறையில் வாடிக்கையாளர்களின் கைவிரல் ரேகைகளைப் பதியச் செய்வதால், ஆதார் அட்டையின் நகலைக் கேட்பது தேவையற்றது. இதன் மூலம், பொதுமக்களுக்கு சிரமம் குறைவதோடு, வங்கிகளுக்கும் இப்பணி எளிதாக அமையும். இவ்வாறு குமரய்யா கூறினார். இதுகுறித்து, பொதுத்துறை வங்கி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் படி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், நாங்கள் இப்பணியை மேற்கொண்டு வருகிறோம். பயோமெட்ரிக் இயந்திரம் அனைத்து வங்கிக் கிளைகளுக்கும் வழங்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு பயோமெட்ரிக் இயந்திரம் வந்தால்தான், வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆதார் அட்டையின் நகலை கேட்பதை நிறுத்த முடியும். ஏற்கெ

சைனிக் பள்ளியில் சேர மாணவர்களுக்கு விண்ணப்பப் படிவங்கள் வரும் நவம்பர் 30-ம் தேதி வரை விநியோகிக்கப்படும்

சைனிக் பள்ளியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் | சைனிக் பள்ளியில் வரும் 2018-19 கல்வியாண்டில் 6 மற்றும் 9-ம் வகுப்பில் சேருவதற்காக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும், தமிழக அரசும் இணைந்து சைனிக் என்ற உண்டு உறைவிட பள்ளியை நடத்தி வருகிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி நகரில் உள்ள சைனிக் பள்ளியில் வரும் 2018-19 கல்வியாண்டில் 6 மற்றும் 9-ம் வகுப் பில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 2018 ஜூலை 1-ம் தேதியன்று 10 வயது முடிந்தும் 11 வயது முடியாமலும் ( 2007 ஜூலை 2-ம் தேதியிலிருந்து 2008 ஜூலை 1-ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்) இருக்கும் மாணவர்கள் மட்டுமே 6-ம் வகுப்பில் சேர முடியும். அதேபோல், 2017 ஜூலை 1-ம் தேதியன்று 13 வயது முடிந்தும், 14 வயது முடியாமலும் (2004 ஜூலை 2-ம் தேதியிலிருந்து 2005 ஜூலை 1-ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்) இருந்து, அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 8-ம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் 9-ம் வகுப்பில் சேரலாம். 6-ம் வகுப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை ஆங்கிலம் அல்

நெட்' தேர்வுக்கு புது பாடத்திட்டம் 10 ஆண்டுக்கு பின் மாறுகிறது

நெட்' தேர்வுக்கு புது பாடத்திட்டம் 10 ஆண்டுக்கு பின் மாறுகிறது | பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வுக் கான பாடத்திட்டம், 10 ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட உள்ளது. 'நெட்' தேர்வுக்கு, புது ,பாடத்திட்டம்,10 ஆண்டுக்கு, பின் மாறுகிறது கல்லுாரிகள், பல்கலைகள் பேராசிரியர் பணிக்கு, ஆராய்ச்சி படிப்புடன் கூடிய, முதுநிலை பட்டதாரிகள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இதற்காக, தேசிய அளவில், நெட் என்ற தகுதி தேர்வை, யு.ஜி.சி., நடத்துகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப் பட்ட இந்த தேர்வு, நடப்பு கல்விஆண்டு முதல், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்பட உள்ளது.தேர்வை, இரண்டு ஆண்டுகளாக, யு.ஜி.சி., சார்பில், மத்தியஇடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. இந்த தேர்வுக்கு, 10 ஆண்டுகளாக ஒரே பாட திட்டம் பின்பற்ற படுகிறது. பழையபாட திட்டத்தில் தேர்ச்சி பெறும் பேராசிரி யர்கள் பலரால்,கல்லுாரிகளில்,தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற பாட திட்டங்களை புரிந்து, பாடம் நடத்த முடியவில்லை. எனவே, இன்னும் திறமை யான பேராசிரியர்களைதேர்வு செய்யும் வகையில், நெட் தேர்வு பாடத் திட்டத்தை, ய

தேசிய பசுமைப்படை திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளுக்கான நிதி ரூ.5 ஆயிரமாக உயர்வு

தேசிய பசுமைப்படை திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளுக்கான நிதி ரூ.5 ஆயிரமாக உயர்வு | தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தவும், இயற்கையை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தேசிய பசுமைப்படை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசின் சார்பில் மாநில அரசின் மூலம் ஒவ்வொரு பள்ளியிலும் பசுமைப்படை அமைக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மீது ஆர்வமுள்ள மாணவர்கள், இதன் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு வரை இத்திட்டத்துக்கு மத்திய அரசின் சார்பில் ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.2,500 வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது உயர்த்தப்பட்டு, இந்த ஆண்டு முதல் ரூ.5 ஆயிரமாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது அரசு பள்ளிகளில் தேசிய பசுமைப்படை திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை 30 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், 8,500 நடுநிலைப்பள்ளிகளும் பெறுகின்றன. இந்த தொகையில் பள்ளிகளில் மூலிகை மற்றும் காய்கறி தோட்டம் அமைப்பது, மாணவர்களுக்கு பருவநிலை மாறுபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவ

சி-டெட் தேர்வு | www.ctet.nic.in

ஆசிரியர் தேர்வு வாரியம் ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்தியது. பி.எட். பட்டம் பெற்றவர்களும் ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பை முடித்தவர்களும் லட்சக்கணக்கில் அத்தேர்வுகளில் கலந்துகொண்டார்கள். அவர்களில் சில ஆயிரம் பேர்களே வேலைவாய்ப்பைப் பெற்றார்கள். மிகச் சில மதிப்பெண்களில் வேலைவாய்ப்பை இழந்தவர்களும் உண்டு. அவர்களில் பெரும்பாலானவர்கள் அடுத்த தேர்வு எப்போது வரும் என்று தெரியாத காரணத்தால் தேர்வுக்கான தயாரிப்புகளை ஒத்திவைத்துவிட்டார்கள். அடுத்த ஆண்டிலோ (?), அல்லது சில ஆண்டுகள் கழித்தோ மீண்டும் தகுதித் தேர்வு அறிவிக்கப்படும்போதுதான் அவர்கள் பாடநூல்களைப் புரட்டத் தொடங்குவார்கள். தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தேர்வுக்குப் படிக்க விரும்பினாலும் பணிச்சுமைகள் அதற்கு அனுமதிப்பதில்லை. போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்பின் அடிப்படை விதிகளில் ஒன்று, பாடத்திட்டத்தைத் தொடர்ந்து நினைவுபடுத்திக்கொண்டே இருப்பது. அதைப் போல, ஒரே பாடத்திட்டத்தில் அமைந்த வெவ்வேறு தேர்வுகளையும் எழுதிப் பார்ப்பது. தமிழ்நாட்டில் நடந்த டெட் தேர்வில் வாய்ப்பைத் தவறவிட்டவர்களுக்கு இன்னொரு

பொதுமக்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் கருத்தை கேட்ட பிறகு புதிய பாடத்திட்டம் பிப்ரவரியில் வெளியிடப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

பொதுமக்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் கருத்தை கேட்ட பிறகு புதிய பாடத்திட்டம் பிப்ரவரியில் வெளியிடப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் | பிப்ரவரியில் புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டி வருமாறு:- ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரையிலான புதிய பாடத்திட்ட வரைவு வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தை ஒரு தொகுப்பாகவும், பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டத்தை மற்றொரு தொகுப்பாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இந்த வரைவு பாடத்திட்டத்தை 4 மாத காலத்தில் உருவாக்கியிருக்கிறோம் என்பது இந்தியாவே வியக்கத்தக்க வகையில், தமிழக வரலாற்றில் முக்கிய அம்சமாகும். இதன் மூலம் தமிழகத்தில் ஒரு நல்ல மாற்றம் உருவாகும். இதற்காக சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஒரு ஆண்டாக கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன. அதில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் போன்ற பலர் பங்கேற்று கருத்துகளை கூறினர். அந்த வகையில் சுமார் 2 ஆயிரம்

100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி அளிக்க திட்டம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி அளிக்க திட்டம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் | தமிழகத்தில் 100 அரசுப் பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து வெளிநாடுகளில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தெரிவித்தார். பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் அரசுப் பள்ளியில் நேற்று புதிய கட்டிடங்களை திறந்துவைத்த அமைச்சர் செங்கோட்டையன், பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட அனகாபுத்தூர் அரசுப் பள்ளி மற்றும் பல்லாவரம் தெரசா பள்ளி உள்ளிட்ட 10 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 2,676 விலையில்லா மடிக்கணினிகளை வழங் கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பள்ளிக்கல்வி துறை சார்பில் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இருந்து 100 மாணவர்களை தேர்ந்தெடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். நார்வே, அமெரிக்கா, ரஷியா, ஜெர்மனி உள்ளிட்ட பல் வேறு நாடுகளுக்கு, 25 பேர்கள் கொண்ட 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு மாணவர்கள் அனுப்பப்படுவார்கள். ரூ.3 கோடி செலவில் அந

பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் 24, 25-ந்தேதிகளில் நடைபெறும் தேர்வு வாரியம் அறிவிப்பு

பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் 24, 25-ந்தேதிகளில் நடைபெறும் தேர்வு வாரியம் அறிவிப்பு | பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தி முடிவை அறிவித்தது. வருகிற (நவம்பர்) 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை சென்னை தரமணியில் என்ஜினீயரிங் பாடங்களில் தேர்வானவர்களுக்கு நடத்த இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு நிர்வாக காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அந்த தேதி பின்னர் அறிவிக்கப்படும். என்ஜினீயரிங் அல்லாத பாடங்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் விழுப்புரம் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

1 முதல் பிளஸ் 2 வரையிலான வரைவு பாடத் திட்டம் வெளியீடு; கருத்துகளை பகிர தமிழக அரசு அழைப்பு

1 முதல் பிளஸ் 2 வரையிலான வரைவு பாடத் திட்டம் வெளியீடு; கருத்துகளை பகிர தமிழக அரசு அழைப்பு தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கான புதிய வரைவு பாடத்திட்ட தொகுப்பு நூல்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ளார். பாடத்திட்டம் குறித்து கல்வியாளர்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு அவை பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (20.11.2017) தலைமைச் செயலகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கான புதிய வரைவு பாடத்திட்ட தொகுப்பு நூல்களை வெளியிட்டார். தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தினை மாற்றியமைக்கும் அரசாணையில் மாணவர்களின் கற்றலை படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல், தேர்வு முறைகளை மாற்றியமைத்தல், அறிவியல் தொழில் நுட்பத்தின் முக்கியத்துவத்தை உணரச்செய்தல், மாணவர்கள் தமிழர் தம் தொன்மை, வரலாறு, பண்பாடு மற்றும் கலை இலக்கியம் குறித்த பெருமித உணர

TET - வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கை டிசம்பரில் தாக்கல் - பள்ளிக்கல்வி அமைச்சர்

TET - வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கை டிசம்பரில் தாக்கல் - பள்ளிக்கல்வி அமைச்சர் வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பை இழந்துள்ளவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் தகுதி அடிப்படையில் பணி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபி அருகே நம்பியூர் புதிய வருவாய் வட்டத்தைத் தொடக்கிவைத்து செய்தியாளர்களிடம், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் முறையால் பணியில் சேர முடியாத நிலையில் உள்ளவர்களுக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவிடம் டிசம்பரில் அறிக்கை பெற்று தகுதி உள்ளவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் பணிவாய்ப்பு வழங்கப்படும். அதே நேரத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது என்றார்.

பிற மாநிலத்தவர் பங்கேற்கும் வகையில் போட்டித் தேர்வு விதிகள் தற்போது திருத்தப்படவில்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

பிற மாநிலத்தவர் பங்கேற்கும் வகையில் போட்டித் தேர்வு விதிகள் தற்போது திருத்தப்படவில்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம் பிற மாநிலத்தவரும் பங்கேற்கும் வகையில் போட்டித் தேர்வு விதிகள் தற்போது திருத்தப்படவில்லை என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. போட்டித்தேர்வுகளுக்கு வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதிமுறையானது கடந்த 1955-ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது என்றும் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் விஜயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், '' குரூப் 4-ல் அடங்கிய பதவிகளுக்கு பிற மாநிலத்தவரும் பங்கேற்கும் வகையில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதென்றும், பணியில் சேர்ந்த இரண்டாண்டுகளில் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்றும், விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது தவறானது என்றும், தமிழ் நாட்டைச் சார்ந்தவர்களுக்கே அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் நாளிதழ்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இத்தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது மட்டுமின்றி தவறானதுமாகும். வெள

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, இன்று மறுகூட்டல் முடிவு வெளியானது.

10ம் வகுப்பு துணைத்தேர்வு: மறுகூட்டல், 'ரிசல்ட்' பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, மறுகூட்டல் முடிவு வெளியானது.தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்புக்கு, அக்டோபரில் நடந்த துணை தேர்வில், 22 ஆயிரத்து, 665 தனித்தேர்வர்கள் பங்கேற்றனர். அவர்களில், 184 பேருக்கு, பல்வேறு பாடங்களில், 383 விடைத்தாள்கள் மறுகூட்டல் செய்யப்பட்டன. இதில், 17 பேருக்கு மதிப்பெண் மாறிஉள்ளது. அவர்கள், தற்காலிக சான்றிதழை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில்பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் மாறியவர்கள் பட்டியல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 1 செய்முறை தேர்வில் மாற்றம் : பள்ளிக்கல்வி அரசாணையில் திருத்தம் பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு இறுதி தேர்வுடன், செய்முறை தேர்வும் நடத்தும் வகையில், தேர்வு முறையில் மாற்றம் செய்வதற்கான, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 1 செய்முறை தேர்வில் மாற்றம் : பள்ளிக்கல்வி அரசாணையில் திருத்தம் பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு இறுதி தேர்வுடன், செய்முறை தேர்வும் நடத்தும் வகையில், தேர்வு முறையில் மாற்றம் செய்வதற்கான, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, நீட்; தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜி., படிக்க, ஜே.இ.இ., என்ற நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். பிளஸ் 1 பொதுத் தேர்வு : இந்த தேர்வுகளுக்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என, இரண்டு வகுப்புகளில் இருந்தும் கேள்விகள் இடம் பெறும். பிளஸ் 1 பாடத்தை பெரும்பாலான பள்ளிகள் நடத்தாததால், இந்த நுழைவு தேர்வுகளில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறுவது, மிக கடினமாக உள்ளது. எனவே, பிளஸ் 1, பிளஸ் 2 என, இரண்டு வகுப்பு பாடங்களுக்கும், சம அளவு முக்கியத்துவம் தர முடிவு செய்யப்பட்டு, இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையில், செய்முறை தேர்வு, பிளஸ் 2 வகுப்பில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், பிளஸ் 2 பொது தேர்வின் போது, பிளஸ் 1க்கும் சேர்த்து, செய்முறை வகுப்புகள்

‘நீட்’ உள்பட போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கின

'நீட்' உள்பட போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கின | நீட் உள்பட பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கின. மருத்துவக் கல்விக்காக நீட் என்ற நுழைவுத் தேர்வை மத்திய அரசு நடத்துகிறது. இதை கொள்கை ரீதியாக தமிழக அரசு எதிர்த்தாலும், தமிழகத்தில் சட்டப்பூர்வமாக தடைசெய்ய முடியவில்லை. எனவே நீட் உள்பட எந்தவிதமான தேர்வையும் மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக 'ஸ்பீட்' என்ற நிறுவனத்துடன், தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் 412 மையங்கள் ஏற்படுத்தப்படும். அவற்றில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவ, மாணவிகள் பங்கேற்று, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளைப் பெறமுடியும். இது தமிழக அரசு இலவசமாக நடத்தும் பயிற்சி வகுப்பாகும். இந்த போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தொடங்கி வைத்தார். அதைத்

இந்திய அழகி மனுஷி சில்லர் உலக அழகியாக தேர்வு

சீனாவில் நடந்த போட்டியில் இந்திய அழகி மனுஷி சில்லர் உலக அழகியாக தேர்வு 20 வயது மருத்துவ மாணவி. 67-வது உலக அழகி போட்டி (மிஸ் வேர்ல்ட்) சீனாவின் சான்யா நகரில் நடந்தது. இதில் வெற்றி பெற்றார் இந்திய அழகி மனுஷி சில்லர். சீனாவில் நடந்த போட்டியில் உலக அழகியாக இந்திய அழகி மனுஷி சில்லர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மருத்துவ மாணவி ஆவார். 'மிஸ் வேர்ல்ட்' என்னும் உலக அழகி போட்டி சீனாவில் சான்யா சிட்டியில் நேற்று நடந்தது. இதில் 108 நாடுகளின் அழகிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் 20 வயதான இந்திய அழகி மனுஷி சில்லர், உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கடந்த ஆண்டின் உலக அழகி ஸ்டீபனி டெல் வேல்லி கிரீடம் சூட்டினார். உலக அழகி ஆக வேண்டும் என்பது மனுஷி சில்லரின் இளம் வயது கனவாம். கடைசியாக 2000-ம் ஆண்டில் இந்தியாவின் சார்பில் பிரியங்கா சோப்ரா, உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 17 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மனுஷி சில்லர் உலக அழகி ஆகி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இவர் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர். இவரது தந்தை டாக்டர் மித்ரா பாசு சில்லர், ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தி

55" Class The Frame 4K UHD TV சாம்சங் `தி ஃப்ரேம்` டிவி அறிமுகம்

​ சாம்சங் `தி ஃப்ரேம்` டிவி அறிமுகம் | சாங்சங் இந்தியா நிறுவனம் தி ஃப்ரேம் என்கிற பெயரில் புதிய அதிநவீன டிவியை அறிமுகம் செய்துள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நிறுவனத்தின் தயாரிப்புகள் பிரிவு பொது மேலாளர் ப்யூஷ் குன்னபல்லி கலந்து கொண்டு பேசுகையில், வாடிக்கையாளர்களில் தேவையறிந்து அதி நவீன தொழில்நுட்பங்களில் சாம்சங் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் உயர்தர புத்தாக்க முயற்சியாக தி ஃப்ரேம் அறிமுகமாகிறது. தொலைக்காட்சி திரையை பொழுதுபோக்கு அம்சங்கள் தாண்டி, நமது விருப்பங்களையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தும் புகைப்பட சட்டக அனுபவத்தையும் தி ஃபிரேம் டிவி அளிக்கும். புகழ்பெற்ற வெஸ்பெகர் நிறுவனத்துடன் இணைந்து இதன் வடிவமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது. இந்திய டிவி சந்தையில் முன்னணி பிராண்டாக சாம்சங் 30 சதவீத சந்தையை வைத்துள்ளது. இதில் 52 அங்குலம் உள்ளிட்ட உயர்ரக மாடல்கள் சந்தை யில் 42 சதவீத சந்தை சாம்சங் வசம் உள்ளது. உயர்ரக பிரிவில் தமிழக அளவில் 54 சதவீத சந்தையுடன் முன்னிலையில் இருக்கிறோம். தற்போது உயர்ரக மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகி

ரூ.30 லட்சத்துக்கு மேல் வாங்கும் சொத்துகள் கண்காணிக்கப்படும் மத்திய நேரடி வரி ஆணையம் அறிவிப்பு

ரூ.30 லட்சத்துக்கு மேல் வாங்கும் சொத்துகள் கண்காணிக்கப்படும் மத்திய நேரடி வரி ஆணையம் அறிவிப்பு | பினாமி சொத்துகள் தடுப்புச் சட்டத்தின்படி ரூ.30 லட்சத்துக்கு மேல் சொத்துகள் வாங்குவது கண்காணிக்கப்படும் என்று மத்திய நேரடி வரி ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் தலைவர் சுஷில் சந்த்ரா, ``சட்டவிரோதமாக சொத்துகள் வாங்குபவர்கள் மீது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நோக்கில், ரூ.30 லட்சத்துக்கு மேல் சொத்துகளை பதிவு செய்பவர்கள் வரி செலுத்திய விவரங்கள் கண்காணிக்கப்படும்'' என்றார். புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சந்த்ரா இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: கணக்கில் வராத பணத்தை பரிவர்த்தனை செய்வதற்காக தொடங்கப்பட்ட இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட செயல்பாட்டில் இல்லாத நிறுவனங்களின் பதிவுகள் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டன. கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நிறுவனங்கள் மற்றும் இவற்றின் நிறுவனர்கள் மேற்கொண்ட பரிவர்த்தனைகள் குறித்து வரித்துறை விசாரணை செய்து வருகிறது. மேலும் இந்த நிறுவனங்களின் 621 சொத்துகள் பறிமுத

1994-ம் ஆண்டு முதல் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சியில் தேர்வானவர்களின் 1 கோடி மதிப்பெண் சான்றிதழ்கள் டிஜிட்டல்மயம் உண்மைத்தன்மையை ஆய்வு செய்வது எளிதாகியது

​ 1994-ம் ஆண்டு முதல் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சியில் தேர்வானவர்களின் 1 கோடி மதிப்பெண் சான்றிதழ்கள் டிஜிட்டல்மயம் உண்மைத்தன்மையை ஆய்வு செய்வது எளிதாகியது | தமிழகத்தில் கடந்த 1994 முதல் இந்த ஆண்டு வரை எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 முடித்த சுமார் ஒரு கோடி மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை அரசு தேர்வுத்துறை டிஜிட்டல்மயமாக்கி இருக்கிறது. இதன்மூலம் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆன்லைன் மூலமாக ஒரு நொடியில் ஆய்வுசெய்துவிட முடியும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை (Genuineness) ஆய்வு செய்யும் பணியை அரசு தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. அரசு பணியில் சேரும் ஆசிரியர்களும், ஊழியர்களும் மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை கண்டறியப்பட்ட பின்னரே அவர்களுக்கு தகுதிகாண் பருவம் முடிப்பது, பணிவரையறை செய்வது உள்ளிட்ட பணிகள் இறுதி செய்யப்படும். இதுவரையில், அரசு பணியில் சேருவோரின் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட துறைகள் அல்லது கல்வித்துறை அலுவலர்கள் மூலமாக தேர்வ