-->

Saturday, October 7, 2017

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் | தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆவணக் காப்பக இயக்குனர் இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- (அடைப்புக்குறிக்குள் இருப்பது பழைய பதவி) 
  1. கவிதா ராமு - அருங்காட்சியகங்கள் இயக்குனர் - (தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழக பொது மேலாளர்).
  2. டி.அன்பழகன் - ஆவணக் காப்பக இயக்குனர் - (எல்காட் பொது மேலாளர்).
  3. எஸ்.சிவராசு - கோயம்புத்தூர் வணிக வரிகள் (அமலாக்கம்) இணை கமிஷனர் - (திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர்).
  4. எஸ்.பி.அம்ரித் - மதுரை டி.ஆர்.டி.ஏ. திட்ட அதிகாரி/ கூடுதல் கலெக்டர் (மேம்பாடு) - (கோவை வணிகவரிகள் (அமலாக்கம்) இணை கமிஷனர்).
  5. பி.உமா மகேஸ்வரி - தமிழ்நாடு சுகாதார முறை திட்ட இயக்குனர் - (தமிழ்நாடு மருந்து சேவைகள் கழக பொது மேலாளர்).
  6. பி. ஸ்ரீவெங்கட பிரியா - சேலம் பட்டு வளர்ப்பு இயக்குனர் - (கோவை தமிழ்நாடு சிவில்சப்ளைஸ் மூத்த மண்டல மேலாளர்).
  7. ஆர்.சீதாலட்சுமி - ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சி கூடுதல் இயக்குனர் - (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு இணை மேலாண்மை இயக்குனர்).
  8. எஸ்.பி.கார்த்திகா - சர்க்கரை கூடுதல் இயக்குனர் - (சென்னை மதுவிலக்கு மற்றும் கலால்வரி இணை கமிஷனர்-1).
  9. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் - மறுவாழ்வு இயக்குனர் - (முதல்-அமைச்சர் அலுவலக இணைச் செயலாளர்).
  10. எஸ்.வளர்மதி - கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை துணை செயலாளர் - (மாற்றுத்திறனாளிகள் நலன் இணை கமிஷனர்).
  11. கே.பேச்சியம்மாள் - சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை துணை செயலாளர் - (எழுதுபொருள் அச்சு இணை இயக்குனர்).
  12. பி.மணிமாறன் - கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை துணைச் செயலாளர் - (தமிழ்நாடு சிவில்சப்ளைஸ் மூத்த மண்டல மேலாளர்).
  13. ஆர்.நந்தகோபால் - தொழிலாளர்கள் இணை கமிஷனர் மற்றும் தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறையின் அலுவல் சாரா இணை செயலாளர் - (கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை இணைச் செயலாளர்).
  14. டி.மோகன் - கவர்னரின் துணைச் செயலாளர் - (கவர்னரின் துணைச் செயலாளர் (பல்கலைக்கழகங்கள்).
  15. கே.பாலசுப்பிரமணியம் - தொழில்துறை துணைச் செயலாளர் - (சிட்கோ பொது மேலாளர்).
  16. கே.வி.முரளிதரன் - கவர்னரின் துணைச் செயலாளர் - (கவர்னரின் துணைச் செயலாளர் கவர்னர் இல்ல செலவுக் கட்டுப்பாட்டாளர்).
  17. கலைச்செல்வி மோகன் - நகராட்சி நிர்வாக இணை கமிஷனர் - (மதுவிலக்கு மற்றும் கலால்வரி இணைக் கமிஷனர்-2).
  18. வி.ராஜாராமன் - மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத் தலைவர் - (நகராட்சி நிர்வாக இணை கமிஷனர்).
  19. பி.ரமண சரஸ்வதி - மின்னாளுமை முகமை இணை இயக்குனர் - (தமிழ்நாடு அரசு கேபிள்டிவி கழக பொது மேலாளர் (நிர்வாகம்).
  20. ஜெ.விஜயராணி - நில நிர்வாக இணைக் கமிஷனர் - (நில நிர்வாக கமிஷனர் அலுவலக இணை கமிஷனர் (எல்.ஏ.).
  21. பி.பிரபாகர் - போக்குவரத்துத் துறை துணைச் செயலாளர் - (சென்னை நெடுஞ்சாலைகள் மாவட்ட வருவாய் அதிகாரி (நில ஆர்ஜிதம்).
  22. ஏ.ஜான் லூயிஸ் - தமிழ்நாடு கடல்சார் வாரிய தலைமை செயல் அதிகாரி மற்றும் துணைத் தலைவர் - (முதல்-அமைச்சர் அலுவலக துணைச் செயலாளர்).
  23. எஸ்.அமிர்த ஜோதி - தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழக செயல் இயக்குனர் - (தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழக பொது மேலாளர்).
  24. ஏ.சண்முகசுந்தரம் - அண்ணா மேலாண்மை நிறுவன கூடுதல் இயக்குனர் - (பெருநகர சென்னை மாநகராட்சி 14-வது மண்டல அதிகாரி).
  25. மகேஸ்வரி ரவிகுமார் - பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (கல்வி)- (சென்னை மாவட்ட வருவாய் அதிகாரி (முத்திரை).
  26. எஸ்.நடராஜன் - தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அதிகாரி - (போக்குவரத்துத் துறை இணைச் செயலாளர்).
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.