கேரளாவில், பிராமணர் அல்லாதவர்கள் அர்ச்சகர்களாக நியமனம் முதலாவது தலித் அர்ச்சகர், கோவிலில் பணியை தொடங்கினார் கர்ப்பகிரகத்தில் மந்திரம் ஓதி, பூஜை செய்தார்

கேரளாவில், பிராமணர் அல்லாதவர்கள் அர்ச்சகர்களாக நியமனம் முதலாவது தலித் அர்ச்சகர், கோவிலில் பணியை தொடங்கினார் கர்ப்பகிரகத்தில் மந்திரம் ஓதி, பூஜை செய்தார் | கேரளாவில் பிராமணர் அல்லாத அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டவர்களில் ஒருவரான முதலாவது தலித் அர்ச்சகர், கோவிலில் தனது பணியை தொடங்கினார். பிராமணர் அல்லாதவர் கேரள மாநிலத்தில் திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமாக 1,200-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அங்கு பிராமணர்களே அர்ச்சகர்களாக உள்ள நிலையில், பிராமணர் அல்லாத 36 பேரை அர்ச்சகர்களாக நியமிக்க கேரள தேவசம் தேர்வு வாரியம் சமீபத்தில் சிபாரிசு செய்தது. அதை ஏற்று அவர்களை கேரள அரசு நியமித்தது. பொறுப்பு ஏற்றார் 36 பேரில், தலித் இனத்தை சேர்ந்தவர்கள் 6 பேர் ஆவர். அவர்களில் ஒருவரான ஏடு கிருஷ்ணன் (வயது 22) என்பவர், திருவல்லா அருகே உள்ள மணப்புரம் சிவன் கோவில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று அக்கோவிலில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். தன்னுடைய குரு கே.கே.அனிருத்தன் தந்திரியிடம் ஆசி பெற்று, தற்போதைய தலைமை அர்ச்சகர் கோபகுமார் நம்பூதிரியுடன் அவர் கோவிலுக்குள் நுழைந்தார். கர்ப்பகிரகத்துக்கு சென்று மந்திரம் ஓதி, பணியை தொடங்கினார். இதன்மூலம், கேரளாவின் முதலாவது தலித் அர்ச்சகர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். சமஸ்கிருத மாணவர் ஏடு கிருஷ்ணனின் சொந்த ஊர், திருச்சூர் மாவட்டம் கொரட்டி ஆகும். அவருடைய பெற்றோர் பி.கே.ரவி-லீலா. அவர் சாஸ்திரங்கள் பற்றி 10 ஆண்டுகள் பயிற்சி பெற்றுள்ளார். தன்னுடைய 15-வது வயதிலேயே, தனது வீட்டருகே உள்ள கோவிலில் அவர் பூஜை செய்ய தொடங்கினார். தற்போது, சமஸ்கிருதத்தில் முதுகலை பட்டப்படிப்பில் இறுதி ஆண்டு படித்து வரு கிறார்.

Comments