இயன்முறை பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

இயன்முறை பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாற்று திறனுடைய குழந்தைகளுக்கான, உள்ளடங்கிய கல்வி திட்டத்தின் கீழ், மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில், முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ரூ.15 ஆயிரம் மதிப்பூதிய அடிப்படையில், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 9 இயன்முறை பயிற்சியாளர்கள், ஒரு பேச்சு பயிற்சியாளர் தெரிவு செய்யப்பட உள்ளனர். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், கல்வித் தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகல்களுடன் வரும் 20-ம் தேதிக்குள், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட திட்ட அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்கம், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகம், எழும்பூர் என்ற முகவரியில் விண்ணப்பங்களை நேரில் வழங்கலாம். மேலும் விவரங்களுக்கு 9788858382 என்ற கைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Comments