-->

Tuesday, October 24, 2017

கைவினைஞர் பயிற்சித் திட்டத்தில் தேசிய தொழிற்பயிற்சி குழுமம் நடத்தும் அகில இந்திய தொழில் தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு

கைவினைஞர் பயிற்சித் திட்டத்தில் தேசிய தொழிற்பயிற்சி குழுமம் நடத்தும் அகில இந்திய தொழில் தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு | கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழில் தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- அடுத்த 2018-ம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் (என்.சி.வி.டி.) நடத்தப்படும் அகில இந்திய தொழில் தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 23 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் தொழிற்பிரிவிற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி மற்றும் அரசு பதிவு பெற்ற நிறுவனத்தில் (தொழிற்சாலை சட்டம் அல்லது தொழில் பழகுனர் சட்டத்தின் கீழ் அல்லது எஸ்.எஸ்.ஐ. பதிவு பெற்ற நிறுவனத்தில்) குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றுள்ள முறையான பணியாளர்கள், அந்த நிறுவனங்களில் தற்போது பணிபுரிந்து கொண்டிருக்கும் நபர்கள் போன்றவர்கள் தனித்தேர்வராக தேர்வு எழுத தகுதி உடையவர் ஆவர். விண்ணப்பதாரர் முழுநேரப் பணியாளராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தோல்வி அடைந்திருந்தாலும் மாநில தொழிற் பயிற்சித் திட்டத்தின் கீழ் (எஸ்.சி.வி.டி.) பயிற்சி பெற்று(அதே பயிற்சி காலம் மற்றும் கல்வித் தகுதி) சான்றிதழ் வைத்திருப்பவர்கள் தனித்தேர்வராக தேர்வு எழுத அதே தொழில் பிரிவில் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி.வி.டி. பயிற்சி திட்டத்தில் பருவமுறைப்படி பயிற்சி பெற்று வரும் பயிற்சியாளர்களும் தனித்தேர்வாளர்களாக எழுத விண்ணப்பிக்கலாம். தொழிற்பழகுனர் சட்டத்தின் கீழ் அடிப்படை பயிற்சி மையத்தில் தொழில் பழகுனர் பயிற்சி பெற்று, தொழில் பழகுனர்களுக்கான தொழில் தேர்வில் 6 முறையும் தோல்வியுற்றவர்கள் தனித் தேர்வராக தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். ஆனால் அவ்வாறு தனித்தேர்வு எழுதுபவர்கள் ஏற்கனவே தேசிய தொழிற் சான்றிதழ் (என்.டி.சி.) பெற்றிருக்கக் கூடாது. தகுதியுள்ள நபர்களுக்கு முதனிலைத் தேர்வு வரும் டிசம்பர் 13, 14-ந் தேதிகளில் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே வரும் ஜனவரி, பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள அகில இந்திய தொழிற்தேர்வில் முதல் பருவமுறைத் தேர்வில் தனித்தேர்வராக கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். தொடர்ந்து தொழிற்பிரிவுக்கு ஏற்ப அனைத்து பருவ முறை தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு டெல்லி என்.சி.வி.டி. மூலம் தேசிய தொழிற் சான்றிதழ்( என்.டி.சி.) வழங்கப்படும் விண்ணப்பம் கிடைக்கும் இடம் தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், தொழில் தேர்விற்குரிய விண்ணப்பப் படிவம் மற்றும் முழு விவரங்கள் அடங்கிய விளக்கக் குறிப்பேடு ஆகியவைகளை அரசினர் தொழில் பயிற்சி நிலையங்களில் 23-ந் தேதி முதல் ரூ.50 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். அம்பத்தூர், நாகப்பட்டினம், தேனி, வடசென்னை, உளுந்தூர்பேட்டை, புதுக்கோட்டை, கிண்டி, கோயமுத்தூர், பரமக்குடி, வேலூர், ஈரோடு, நாகர்கோவில், திருவண்ணாமலை, தாராபுரம், திருநெல்வேலி (பேட்டை), செங்கல்பட்டு, சேலம், தூத்துக்குடி, திருச்சி, ஓசூர், விருதுநகர், தஞ்சாவூர், மதுரை, கடலூர், திண்டுக்கல் ஆகிய 25 அரசினர் தொழில் பயிற்சி நிலையங்களில் விண்ணப்பப் படிவங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பர் 22-ந் தேதிக்குள் அரசினர் தொழில் பயிற்சி நிலைய முதல்வர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்குப் பின் பெறப்படும் விண்ணப் பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இது தொடர் பாக பிற விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.