ரேஸ் இன்ஸ்டிடியூட் சார்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி அக்டோபர் 20-ம் தேதி தொடக்கம்


ரேஸ் இன்ஸ்டிடியூட் சார்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி அக்டோபர் 20-ம் தேதி தொடக்கம் | டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சியை ரேஸ் கோச்சிங் இன்ஸ்டிடியூட் நிறுவனம் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக ரேஸ் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: இது போட்டித் தேர்வுகள் நேரம். இன்று (15-ம் தேதி) ஒருநாள் மட்டும் 5 போட்டித் தேர்வுகள் நடக்கின்றன. சில மாணவர்கள் இன்று ஒரே நாளில் இரண்டு, மூன்று தேர்வுகளை எழுதுவார்கள். ஆர்ஆர்பி அதிகாரிகள், உதவியாளர்கள் உள்ளிட்ட தேர்வுகளுக்கான முடிவுகளை, வங்கித் தேர்வுகளை நடத்தும் ஐபிபீஎஸ் நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்டது. இதில், சென்னை தி.நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரேஸ் கோச்சிங் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் படித்த 4,954 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இது, நாட்டில் வேறு எந்த பயிற்சி நிறுவனமும் படைக்காத சாதனை. இது மட்டுமின்றி, எங்கள் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற தமிழக மாணவர்கள் பலரும் சிபிஐ உதவி ஆய்வாளர், வரி அதிகாரி உட்பட மத்திய அரசில் பல உயர் பொறுப்புகளில் இருக்கின்றனர். தமிழகத்தில் இருந்து மத்திய பணிக் குச் செல்வது அரிதாக இருந்த சூழலில், ரேஸ் நிறுவனம் அதை சாத்தியமாக்கியுள்ளது. இந்நிலையில், ரேஸ் நிறுவனம் இந்த மாதம் முதல் மாநில அரசுப் பணிக்கும்(டிஎன்பிஎஸ்சி) மாணவர்களை அனுப்பும் பணியைத் தொடங்குகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் அளிக்கப்பட உள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை, ஈரோடு, நாமக்கல், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இப்பயிற்சி வகுப்புகள் வரும் 20-ம் தேதி தொடங்க உள்ளன.

Comments