You will be redirected to the script in

seconds
Puthiyaseithi | புதிய செய்தி: October 2017

Tuesday, October 31, 2017

G.O 651-NEW TRANSFER COUNSELLING NORMS PUBLISHED | பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறையில் இனி வரும் காலங்களில் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களின் நிர்வாக மாறுதல் மற்றும் பொது மாறுதலின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் ஆணை

G.O 651-NEW TRANSFER COUNSELLING NORMS PUBLISHED | பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறையில் இனி வரும் காலங்களில் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களின் நிர்வாக மாறுதல் மற்றும் பொது மாறுதலின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் ஆணை | DOWNLOAD

ஏர்டெல் வழங்குகிறது ரூ.1,349 விலையில் 4 ஜி ஸ்மார்ட்போன் செல்கான் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

ஏர்டெல் வழங்குகிறது ரூ.1,349 விலையில் 4 ஜி ஸ்மார்ட்போன் செல்கான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் | ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனம் ரூ.1,349 விலையில் 4 ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக மொபைல் போன் தயாரிக்கும் செல்கான் நிறுவனத்துடன் ஏர்டெல் ஒப்பந்தம் செய்துள்ளது. `மேரா பெஹ்லா ஸ்மார்ட்போன்' என்ற வாசகத்துடன் இது அறிமுகமாகிறது. ஏற்கெனவே இந்நிறுவனம் இம்மாதத் தொடக்கத்தில் கார்பன் நிறுவனத்துடன் இணைந்து 4ஜி ஸ்மார்ட்போனை ரூ.1,399 விலையில் அறிமுகம் செய்ய ஒப்பந்தம் செய்திருந்தது குறிப்பிடத் தக்கது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி சேவையைத் தொடங்கும் முன்பாகவே முன்னோட்டமாக இலவச வைஃபை வசதியை அளித்து இத்துறையில் கடுமையான போட்டியை உருவாக்கினார். இதனால் பெரும்பாலான தொலைத் தொடர்பு நிறுவனங்களும் கட்டணங்களை குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. அடுத்ததாக ரூ.1,500 விலையில் திரும்பி அளிக்கும் வகையில் மொபைல் போனை அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து இதற்கு பதிலளிக்கும் வகையில் ஏர்டெல் நிறுவனமும் குறைந்த விலையில் செல்போன்களை தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் முயற்சியில் செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வந்தது. இதேபோல மற்றொரு செல்போன் சேவை நிறுவனமான வோடபோன் இந்தியா நிறுவனம் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ரூ.999 விலையில் 4 ஜி ஸ்மார்ட்போனை கடந்த வாரம் அறிமுகம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் நிறுவனம் செல்கான் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ரூ.3,500 விலையில் அறிமுகப்படுத்த உள்ள ஸ்மார்ட்போன் 4 அங்குல திரையைக் கொண்டது. இரட்டை சிம் கார்டு வசதி மற்றும் எஃப்எம் ரேடியோ வசதியையும் உள்ளடக்கியது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும். கூகுள் பிளே ஸ்டோர், யுடியூப், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. இந்த போனுடன் 169 ரூபாய் மதிப்பிலான ஏர்டெல் நிறுவனத்தின் மாதாந்திர பேக் வெளியிடப்படுகிறது. தொகை திரும்ப அளிக்கப்படும் வாடிக்கையாளர்கள் ரூ.2,849 தொகையை தவணை அடிப்படையில் செலுத்த வேண்டும். மாதம் ரூ.169 மதிப்பிலான ரீசார்ஜ் வசதி 36 மாதங்களுக்கு அளிக்கப்படும். 18 மாதங்களுக்குப் பிறகு ரு.500 தொகை திரும்ப அளிக்கப்படும். 36-வது மாத முடிவில் ரூ.1,000 திரும்ப அளிக்கப்படும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ரூ.1,500 தொகையை சலுகையாகப் பெறலாம். பணத்தை திரும்ப அளிக்கும் திட்டத்தில் 18 மாதங்களில் வாடிக்கையாளர்கள் ரூ.3,000 தொகைக்கு ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். அடுத்து ரூ.500 தொகையானது ரூ.3,000த்துக்கு 18 மாதங்களில் ரீசார்ஜ் செய்திருந்தால் மட்டுமே அளிக்கப்படும். ஏர்டெல் வழங்கும் ஸ்மார்ட்போன் முற்றிலும் வாடிக்கையாளருக்கானது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இனி வரும் காலத்தில் மேலும் பல செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் கூட்டு சேரும் திட்டமுள்ளதாக இந்நிறுவன சந்தைப் பொருளாதார பிரிவு தலைவர் ராஜ் புடிபெட்டி தெரிவித் துள்ளார்.

பிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியீடு

பிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியீடு | பிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 தேர்வில் பெயிலானவர்களுக்கும், தனியாக படித்தவர்களுக்கும் பிளஸ்-2 செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவு இன்று (செவ்வாய்க் கிழமை) வெளியிடப்படுகிறது. தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வர்கள் உட்பட) தத்தமது தேர்வு முடிவினை, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே இன்று பிற்பகல் தாங்களே இணையதளத்திலிருந்து தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும். தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். விடைத்தாள் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு அடுத்த மாதம்( நவம்பர் ) 2 -ந்தேதி முதல் 4-ந்தேதி வரை நேரில் செல்லலாம். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். | DOWNLOAD

Letter No.54867-CMPC-2017-1 dated:30-10-2017 - அக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவைத்தொகையை 20.11.17 க்குள் பெற்று வழங்க வேண்டும்.பிறகு நவம்பர் மாத ஊதியம பில் சமர்பிக்கப்பட வேண்டும் என நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Letter No.54867-CMPC-2017-1 dated:30-10-2017 - அக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவைத்தொகையை 20.11.17 க்குள் பெற்று வழங்க வேண்டும்.பிறகு நவம்பர் மாத ஊதியம பில் சமர்பிக்கப்பட வேண்டும் என நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். Recommendations of the Official Committee 2017 on revision of pay and allowances and other related benefits – Admitting of salary – Instructions – Regarding. | DOWNLOAD

Monday, October 30, 2017

COMMON RECRUITMENT PROCESS FOR RECRUITMENT OF SPECIALIST OFFICERS | பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள ஆயிரத்து 1315 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான பொது எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை வங்கிகள் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது.


பட்டதாரிகளுக்கு பொதுத்துறை வங்கிகளில் 1135 சிறப்பு அதிகாரி வேலை | The online examination (Preliminary and Main) for the next Common Recruitment Process (CRP) for selection of personnel in Specialist Officers' cadre posts listed below in the Participating Organisations is tentatively scheduled in December 2017/ January 2018.தற்போது மீண்டும் வங்கி வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இந்திய இளைய தலைமுறையின் ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில், பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள ஆயிரத்து 1315 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான பொது எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை வங்கிகள் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரிகளிள் ஆன்லைன் மூலம் வரும் நவம்பர் 7 முதல் 27க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிப் பணிகளுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து தரும் அமைப்பாக வங்கிகள் தேர்வு வாரியம் 'இன்ஸ்டிடூயூட் ஆப் பாங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐபிபிஎஸ்)' செயல்பட்டு வருகிறது. இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 19 பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் கிளார்க் மற்றும் புரபெசனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான பொது எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலை இந்த அமைப்பு நடத்தி வருகிறது. ஒவ்வொரு பொதுத்துறை வங்கிகளும் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை இந்த தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் தேர்வு செய்கின்றன. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மட்டும் பணியாளர்களை தேர்வு செய்ய தனியாக தேர்வு நடத்துகிறது. தற்போது பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 1315 சிறப்பு அதிகாரி "CRP SPL-VII" பணியிடங்களுக்கான 7-வது எழுத்து தேர்க்கான அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது.


மொத்த காலியிடங்கள்: 1315


பணி: சிறப்பு அதிகாரி (Specialist Officer)


பணி மற்றும் காலியிடங்கள்:


1. IT Officers (Scale-I) -120


2. Agricultural Field Officer (Scale-I) - 875


3. Rajbasha Adhikari (Scale-I) - 30


4. Law Officer (Scale-I) - 60


5. HR/ Personnel Officer - 35


6. Marketing Officer (Scale-I) -195


சிறப்பு அதிகாரி நிரப்பப்பட உள்ள வங்கிகள் விவரம்: அலகாபாத் வங்கி, கனரா வங்கி, இந்திய வங்கி, சிண்டிகேட் வங்கி, ஆந்திரா வங்கி, இந்திய மத்திய வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, யூகோ வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆஃப் இந்தியா, தேனா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, ஐடிபிஐ, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, விஜயா வங்கி


தகுதி: பொறியியல் துறையில் CS, IT, EE மற்றும் ECE, Agricultural, Horticulture, Animal Husbandry, Veterinary Science, Dairy Science, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம், சட்டத்துறையில் பட்டம் பெற்று பதிவு செய்திருப்பவர்கள், எச்ஆர், சந்தையியல் துறையில் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


வயது வரம்பு: 01.11.2017 தேதியின்படி 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: வங்கிகள் தேர்வு வாரியத்தால் (ஐபிபிஎஸ்) நடத்தப்படும் முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு. சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


எழுத்துத் தேர்வில் பொது அறிவு, பகுத்து ஆராயும் திறன் (ரீசனிங்), அடிப்படை கணிதத்திறன், பொது ஆங்கிலம் ஆகிய 4 பகுதிகளில் இருந்து 'அப்ஜெக்டிவ்' முறையில் கேள்விகள் கேட்கப்படும்.


விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. கட்டணங்களை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.


விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உடைய இளைஞர்கள் அதிகாரப்பூர்வ www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எதிர்கால பயன்பாட்டிற்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 2 கணினி பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.


ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் தேதி: 07.11.2017


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.11.2017


முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதிகள்: 30.12.2017 மற்றும் 31.12.2017


முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி: 28.1.2018


மேலும் முழுமையான விவரங்களை http://www.ibps.in/wp-content/uploads/IBPS_CRP_SPL_VII_Detail_Advt.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளவும். DOWNLOAD

Sunday, October 29, 2017

பொது அறிவு தகவல்கள் - பாசிகள்


பாசிகள்:-
🌳 இலை, தண்டு, வேர், வேறுபாடுகள் பெற்றிருப்பதில்லை
🌳 பச்சையம் பெற்றிருப்பதால் தமக்கு தேவையான உணவை தாமே தயாரித்துக் கொள்ளும்.
🌳 இவற்றின் செல்சுவர் செல்லுலோஸால் ஆனது.
🌳 இனப்பெருக்க வகைகள்
⭕️ தூண்டாதல் - (எ.கா.) ஸ்பைரோகைரா
⭕️ பாலில இனப்பெருக்கம் - ஸ்போர்கள்
⭕️ பால் இனப்பெருக்கம் - ஏணி இணைவு, பக்க இணைவு (எ.கா.) ஸ்பைரோகைரா
⭕️ பால் உறுப்புகள் - ஆந்த்ரிடியம், ஆர்க்கிகோனியம் (எ.கா.) காரா
பாசிகளின் வகைகள்:-
🌳 பாசிகள் அவற்றின் வண்ணங்கள் அடிப்படையில் பிரிக்கப்பட்டு உள்ளது.
⭕️ பச்சை
⭕️ பழுப்பு
⭕️ சிவப்பு
⭕️ நீலப்பச்சை

1. பச்சை
🔺 நிறமி -  பச்சையம்
🔺 வகுப்பு - குளோரோபைட்டா
🔺 சேமிப்பு உணவு - ஸ்டார்ச்
🔺 எ.கா. - கிளாமிடோமோனஸ் 

2.  பழுப்பு
🔺 நிறமி - ப்யூகோஸாந்தின்
🔺 வகுப்பு -  பேயோபைட்டா
🔺 சேமிப்பு உணவு - லாமினாரியன்
🔺 எ.கா. - சர்காஸம்

3. சிவப்பு
🔺 நிறமி - பைகோஎரித்ரின்
🔺 வகுப்பு - ரோடோபைட்டா
🔺 சேமிப்பு உணவு - ப்ளோரிடியன் ஸ்டார்ச்
🔺 எ.கா. - பாலிசை போனியா

4. நீலப்பச்சை
🔺 நிறமி - பைகோசயனின்
🔺 வகுப்பு - சயனோபைட்டா
🔺 சேமிப்பு உணவு -  சயனோ பைசியன்ஸ்டார்ச்
🔺 எ.கா. - ஆஸில்லடோரியா

🌳 மனிதர்கள், வீட்டு விலங்குகள், மீன்களுக்கு உணவாக பயன்படுத்த பயன்படும் பாசிகள் - உல்வா, லேமினாரியா, சர்காஸம், குளோரெல்லா
🌳 அகர் அகர் சிவப்பு பாசியில்  இருந்து பெறப்படுகின்றது.
(எ.கா.) ஜெலிடியம், கிராஸிலோரியா
🌳 பனிக்கூழ் தயாரிக்க பயன்படுவது - அகர் அகர்
🌳 சோதனை குழாயில் வளர்க்கபடும் தாவரங்களுக்கு வளர்தள பொருளாக பயன்படுவது -  அகர் அகர்
🌳 லேமினோரிய எனும் பழுப்பு பாசியில் இருந்து பெறப்படுவது - அயோடின்
🌳 மனிதர்களின் கழிவுநீர் சிதைக்க பயன்படுவது - குளோரெல்லா பைரெனோய்டோஸா
🌳 உலகிலேயே மிக வேகமாக வளரும் கடல்பாசி - இராட்சத கெல்ப்
🌳 இராட்சத கெல்ப் ஒரு நாளைக்கு எவ்வளவு வளரும் - 15 செ.மீ
🌳 இராட்சத கெல்ப் காணப்படும் இடம் -  கலிபோர்னியா

பருவமழை முன்னெச்சரிக்கையாக பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை அப்புறப்படுத்த வேண்டும் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவு

பருவமழை முன்னெச்சரிக்கையாக பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை அப்புறப்படுத்த வேண்டும் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவு | வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், மாவட்ட கலெக்டர்களுக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில் கூறியிருப்பதாவது:- பழுதடைந்த கட்டிடங்கள் பல பள்ளி வளாகங்களில் பழுதடைந்த மற்றும் பாதுகாப்பற்ற முறையில் பல கட்டிடங்கள் இருக்கின்றன. கடந்த காலகட்டங்களில் இதுபோன்ற கட்டிடங்களால் காயங்கள், உயிரிழப்புகள் போன்ற சம்பவங்கள் குறிப்பாக பருவமழை காலங்களில் நிகழ்ந்துள்ளன. இதுபோன்ற கட்டிடங்கள் நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாத சூழ்நிலையில் அவை கொசு உற்பத்திக்கும் ஏற்றவிதமாக அமைந்துள்ளன. பள்ளி வளாகத்தில் உள்ள முக்கிய இடங்களை எல்லாம் அதுபோன்ற கட்டிடங்கள் ஆக்கிரமித்துள்ளதோடு பள்ளி மாணவர்களுக்கு அந்த சூழ்நிலை குறித்த தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ளாட்சி அமைப்புகளால் கட்டப்பட்ட இதுபோன்ற பள்ளிகளை அவர்கள் தான் அப்புறப்படுத்த வேண்டும். பஞ்சாயத்து யூனியன் கட்டிடங்களை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தகுந்த உத்தரவுகளை வழங்கி முன்னுரிமை கொடுத்து அந்த கட்டிடங்களை அகற்ற வேண்டும். தனிக்கவனம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தாங்கள் பராமரித்துவரும் அதுபோன்ற கட்டிடங்களை அப்புறப்படுத்துவதற்கு அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இந்த பணியில் ஈடுபட வேண்டும். இதுபோன்ற கட்டிடங்கள் பற்றிய பட்டியலை பெற்றுக்கொண்டு கலெக்டர்களிடம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவுரைகளை பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனவே இதுபோன்ற முகமைகள் மூலம் பழுதடைந்த கட்டிடங்களை அப்புறப்படுத்துவதில் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே இருக்கும் கட்டிடங்களை தூய்மையாக, உறுதியானதாக வைத்திருப்பதற்கு நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். இந்த கடிதம் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நவம்பர் 15-ந் தேதிக்குள் அறிக்கையை அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு ஒவ்வொரு ஆண்டும் இதுபோல பருவமழை காலங்களில் பழுதடைந்த கட்டிடங்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறைக்கும், அதிகாரிகளுக்கும் அரசு உத்தரவு பிறப்பித்தாலும், அதை சரிவர செய்வது இல்லை என்பது ஆசிரியர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. இந்த ஆண்டு எடுக்கப்படும் பட்டியலின் அடிப்படையில் பழுதடைந்த, பாதுகாப்பற்ற கட்டிடங்களை அப்புறப்படுத்துவதில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பது கல்வி ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

ஆய்வு கட்டுரைகளை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

ஆய்வு கட்டுரைகளை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல் | ஆய்வு கட்டுரைகளை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை 'செனட்' கூட்டத்தில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி தெரிவித்தார். சென்னை பல்கலைக்கழகத்தின் 'செனட்' கூட்டம் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் பி.துரைசாமி தலைமை தாங்கினார். பதிவாளர் பேராசிரியர் ஆர்.சீனிவாசன் முன்னிலை வகித்தார். 4 பேராசிரியர் ஜெகநாதன், புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து, துணை வேந்தர் துரைசாமி பேசியதாவது:- நாட்டிலேயே காகிதம் இல்லா பரிவர்த்தனை செய்யும் ஒரே பல்கலைக்கழகம் சென்னை பல்கலைக்கழகம் என்ற பெயர் பெற்று இருக்கிறது. தேசிய கல்வி களஞ்சியம் மூலம் பல்கலைக்கழகத்தின் சான்றிதழ்கள் அனைத்தும் டிஜிட்டல் ஆக்கப்படும். பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதலின்படி அண்டை மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் மாணவர்கள் சென்று படிக்க ஊக்கப்படுத்த விரும்புகிறோம். எம்.பில், பி.எச்.டி. படிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்கு பி.எச்.டி. சேர்க்கைக்கான விண்ணப்பம் ஆன்-லைனில் வழங்குதல், பி.எச்.டி. படிக்கும் மாணவர்களின் பட்டியலை பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடுதல், பல்கலைக்கழக மானியக்குழு எம்.பில், பி.எச்.டி. விதிமுறைகளை (2016) பின்பற்றுவது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதுகலை படிப்புகளில் சேர்ந்த மாணவிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகரித்துள்ளது. தரமணியில் உள்ள மாணவர் விடுதி, மாணவிகள் விடுதியாக மாற்றி திறந்து இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து பல்கலைக்கழகத்தில் கொண்டு வரப்படும் திட்டங்கள் குறித்து விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, துணை வேந்தர் துரைசாமி, ஆய்வு கட்டுரைகள் மற்றும் மதிப்பீடுகள் தரமானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் பல்கலைக்கழக விதிமுறைப்படி, ஆய்வு கட்டுரைகளை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் ஆய்வு கட்டுரை மதிப்பீடு செய்வதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் 2 பதிப்புகளை வெளியிட்டு இருக்க வேண்டும். ஒரு ஆண்டில் ஒருவருக்குத்தான் அவர் மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடுகளை சென்னை பல்கலைக்கழகம் பின்பற்றும் என்று தெரிவித்தார். இதற்கு செனட் உறுப்பினர்கள் காந்திராஜ், மணிவாசகம், அனுராதா உள்பட பலர் பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர். இறுதியாக துணைவேந்தர், பாடத்திட்டக்குழு கூட்டத்தில் இதுகுறித்து முடிவு செய்து அறிவிப்புகள் வெளியிடுவதாக தெரிவித்தார்.

அண்ணாசாலை தலைமை அஞ்சல் நிலையத்தில் தபால் தலை சேகரிப்பு நிரந்தர கண்காட்சிக்கு மாணவர்களிடையே பெரும் வரவேற்பு

அண்ணாசாலை தலைமை அஞ்சல் நிலையத்தில் தபால் தலை சேகரிப்பு நிரந்தர கண்காட்சிக்கு மாணவர்களிடையே பெரும் வரவேற்பு | 2 மாதத்தில் 8,830 பேர் பார்த்து ரசித்தனர் | சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ள நிரந்தர தபால் தலை சேகரிப்பு கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிடும் மாணவிகள். (கோப்புப் படம்) அண்ணாசாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ள நிரந்தர தபால் தலை சேகரிப்பு கண்காட்சிக்கு பள்ளி மாணவர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 2 மாதத் தில் மட்டும் 8,830 பள்ளி மாணவர்கள் இக்கண்காட்சியைக் கண்டு ரசித்துள்ளனர். சென்னை அண்ணாசாலை யில் அமைந்துள்ள தலைமை அஞ்சல் நிலைய வளாகத்தில் 1900-ம் ஆண்டு வார்னிக் மேஜர், ரெஜினால்டு ஹயர் ஆகியோ ரால் தென்னிந்தியாவின் முதல் எலக்ட்ரிக் தியேட்டர் கட்டப்பட்டது. 1951-ம் ஆண்டு அஞ்சல்துறை இந்தத் தியேட்டரை கையகப்படுத்தியதை அடுத்து அங்கு தபால் தலை சேகரிப்பு கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஒன்று அல்லது 2 முறை நடத்தப்பட்டு வந்த இந்தக் கண்காட்சி, கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் நிரந்தரக் கண்காட்சி யாக தொடங்கப்பட்டது. இக்கண்காட்சிக்கு பள்ளி மாணவர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து, சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் ஆர்.ஆனந்த் 'தி இந்து'விடம் கூறியதாவது: தபால் தலைகளை சேகரிப்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அஞ்சல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 1998-ம் ஆண்டு தபால் தலை சேகரிப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டது. சென்னை நகரில் மட்டும் 3,650 பேர் தபால் தலை சேகரிப்பு கணக்கு வைத்துள்ளனர். அஞ்சல் துறை சார்பில் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது 2, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை என தபால் தலை சேகரிப்பு கண்காட்சி நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், நிரந்தர தபால் தலை சேகரிப்பு கண்காட்சி நடத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஆக.15-ம் தேதி முதல் நிரந்தர கண்காட்சி தொடங்கப்பட்டது. இந்தக் கண்காட்சிக்கு பள்ளி மாணவர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 42 பள்ளிகளைச் சேர்ந்த 8,830 மாணவர்கள் இக்கண்காட்சியைக் கண்டு ரசித்துள்ளனர். தபால் தலை சேகரிப்பவர்கள் 2 பேரைத் தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளி களுக்குச் சென்று மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தபால் தலை சேகரிப்பின் அவசி யம் மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் ஒரு கருத்தின் அடிப்படையில் 7,000 தபால் தலைகள் காட்சிக்கு வைக்கப்படும். திங்கள் முதல் சனிக்கிழமை வரை (காலை 10 - மாலை 6 மணி) நடைபெறும் இக்கண்காட்சியை பொதுமக்களும் இலவசமாகப் பார்வையிடலாம் என்றார்.

உயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம் வேலையின்மையின் உச்சம் என கருத்து

உயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம் வேலையின்மையின் உச்சம் என கருத்து | உயர் நீதிமன்ற துப்புரவு பணியாளர் மற்றும் சுகாதார பணியாளர் பணிகளுக்கு அதிக எண்ணிக்கையில் பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர் என்பது வேலையின்மையின் உச்சம் என்ற கருத்து எழுந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளை ஆகியவற்றில் 68 துப்புரவு பணியாளர் மற்றும் 59 சுகாதார பணியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை மாதம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கு குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி ஆகிய வகுப்பினருக்கு அதிகபட்ச வயதாக 35-ம், இதர வகுப்பினருக்கு அதிகபட்ச வயதாக 30-ம், ஏற்கெனவே அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அதிகபட்ச வயதாக 45-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற வளாகத்தை தினமும் கூட்டித்தள்ளி, கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் துப்புரவு மற்றும் சுகாதார பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 3 ஆயிரத்து 612 பேரில் 2 ஆயிரத்து 569 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர் களுக்கு எழுத்துத்தேர்வு கடந்த அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் நடத்தப்பட்டது. இப் பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் மற்றும் முதுகலை மற்றும் எம்ஃபில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 75 மதிப்பெண் களுக்கு நடத்தப்பட்ட எழுத்துத்தேர்வில் 23 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி என்ற அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில், எந்த தொலைபேசி எண்ணில் இருந்து போலீஸை அழைப்பாய்? எந்த ஆண்டு நாம் விடுதலை பெற்றோம்? கப்பலோட்டிய தமிழன் யார்? நம்முடைய சுதந்திர தினம் எது? தேசிய சின்னம், பறவை, மரம் எது? என 8-ம் வகுப்பு தரத்திற்கேற்ப எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டதால், எழுத்துத்தேர்வில் பங்கேற்ற பெரும்பாலானோர் தேர்ச்சி பெற்றுள்ளதாக உயர் நீதிமன்ற வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து உயர் நீதிமன்ற அதிகாரிகள் சிலர் கூறும்போது, ''அதிகமான கல்வித்தகுதி உடையவர்களை இந்த பணி களுக்கு விண்ணப்பிக்கக் கூடாது என தடுக்க முடியாது. ஏனெனில் 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் யார் வேண்டுமென்றாலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். அதே நேரம் துப்புரவு அல்லது சுகாதார பணியாளர் பணியிடம் கிடைத்துவிட்டால், ஒரு பட்டதாரி தனது கல்வித் தகுதியை வைத்தே குறைந்த ஆண்டுகளில் ரீடர், உதவியாளர், உதவி செக்க்ஷன் அலுவலர், செக்க்ஷன் அலுவலர், உதவிப்பதிவாளர் என பதவி உயர்வில் இணைப்பதிவாளர் அந்தஸ்துக்கு செல்ல வாய்ப்புள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. வேலையின்மை காரணமாக பொறியியல் பட்டதாரிகள் வெளியிடங்களில் இதைவிடக் குறைவான ஊதியத்துக்கு வேலை பார்ப்பதால், துணிந்து விண்ணப்பித்துள்ளனர். மேலும் ஒரு துப்புரவு பணியாளராக பணியில் சேருபவர், தமிழ், ஆங்கிலத்தில் தட்டச்சு முடித்து சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றால் அவர் நீதிபதி யின் நேர்முக உதவியாளராக செல்ல முடியும். இதனால் இந்த பணியிடங்கள் கிடைத்தால் போதும் என்ற அடிப்படையில் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர்'' என்றனர். இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம்.ராதா கிருஷ்ணன் கூறும்போது, ''இது வேலையின்மையின் உச்சம். இதை சமீபத்தில் கூட நீதியரசர் என்.கிருபாகரன் இந்தியா முழுவதும் எத்தனை பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனர்? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி சுட்டிக்காட்டியுள்ளார். உயர் நீதிமன்றத்தின் இணையதளத்துக்குச் சென்று விபரங்களை அறிந்து கொள்ளுங்கள் எனக் கூறுவது விளம்பரமே ஆகாது. அது வெறும் தகவல். எனவே உயர் நீதிமன்ற துப்புரவு மற்றும் சுகாதார பணிக்கு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பாணையை அனைத்து விவரங்களுடன் தமிழிலும் வெளியிட்டு அதன்பிறகு தான் தேர்வு நடத்த வேண்டும் என்பதுதான் எங்களது வழக்கின் சாரம்சம். இந்த பணிநியமனம் எங்களது வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்தே அமையும் என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவேளை எங்களுக்கு சாதகமாக இந்த விளம்பரம் செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தால், இவர்களின் பணிநியமனமும் செல்லாததாகி விடும். ஆனால் உயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணியாளராக உள்ளே வந்து விட்டால் பணிப்பாதுகாப்பு மற்றும் பதவிஉயர்வு எளிதாக கிடைக்கும் என்பதால் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் இப்பணிக்கு தைரியமாக விண்ணப்பித்து அதில் தேர்ச்சியும் பெற்றுள்ளனர்'' என்றார். | ஆர்.பாலசரவணக்குமார்

சித்தர்கள் வகுத்த தமிழ் எண் வடிவங்கள்

சித்தர்கள் வகுத்த தமிழ் எண் வடிவங்கள்
* = 1
* = 2
* = 3
* = 4
* = 5
* = 6
* = 7
* = 8
* = 9
* = 10
* ௰௧ = 11
* ௰௨ = 12
* ௰௩ = 13
* ௰௪ = 14
* ௰௫ = 15
* ௰௬ = 16
* ௰௭ = 17
* ௰௮ = 18
* ௰௯ = 19
* ௨௰ = 20
* = 100
* ௱௫௰௬ = 156
* ௨௱ = 200
* ௩௱ = 300
* = 1000
* ௲௧ = 1001
* ௲௪௰ = 1040
* ௮௲ = 8000
* ௰௲ = 10,000
* ௭௰௲ = 70,000
* ௯௰௲ = 90,000
* ௱௲ = 100,000 (lakh)
* ௮௱௲ = 800,000
* ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
* ௯௰௱௲ = 9,000,000
* ௱௱௲ = 10,000,000 (crore)
* ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
* ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
* ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
* ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
* ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
* ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)
= நாள்
= மாதம்
= வருடம்
தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும்
ஏறுமுக எண்கள்
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thousand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் – one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் – one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம் -????????????????
இறங்குமுக எண்கள்
1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு –> ≈ 6,0393476E-9 –> ≈ nano = 0.000000001
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்
அளவைகள்
நீட்டலளவு
10 கோன் – 1 நுண்ணணு
10 நுண்ணணு – 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer ?!!
8 அணு – 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் – 1 துசும்பு
8 துசும்பு – 1 மயிர்நுணி
8 மயிர்நுணி – 1 நுண்மணல்
8 நுண்மணல் – 1 சிறுகடுகு
8 சிறுகடுகு – 1 எள்
8 எள் – 1 நெல்
8 நெல் – 1 விரல்
12 விரல் – 1 சாண்
2 சாண் – 1 முழம்
4 முழம் – 1 பாகம்
6000 பாகம் – 1 காதம்(1200 கெசம்)
4 காதம் – 1 யோசனை
பொன்நிறுத்தல்
4 நெல் எடை – 1 குன்றிமணி
2 குன்றிமணி – 1 மஞ்சாடி
2 மஞ்சாடி – 1 பணவெடை
5 பணவெடை – 1 கழஞ்சு
8 பணவெடை – 1 வராகனெடை
4 கழஞ்சு – 1 கஃசு
4 கஃசு – 1 பலம்
பண்டங்கள் நிறுத்தல்
32 குன்றிமணி – 1 வராகனெடை
10 வராகனெடை – 1 பலம்
40 பலம் – 1 வீசை
6 வீசை – 1 தூலாம்
8 வீசை – 1 மணங்கு
20 மணங்கு – 1 பாரம்
முகத்தல் அளவு
5 செவிடு – 1 ஆழாக்கு
2 ஆழாக்கு – 1 உழக்கு
2 உழக்கு – 1 உரி
2 உரி – 1 படி
8 படி – 1 மரக்கால்
2 குறுணி – 1 பதக்கு
2 பதக்கு – 1 தூணி
பெய்தல் அளவு
300 நெல் – 1 செவிடு
5 செவிடு – 1 ஆழாக்கு
2 ஆழாக்கு – 1 உழக்கு
2 உழக்கு – 1 உரி
2 உரி – 1 படி
8 படி – 1 மரக்கால்
2 குறுணி – 1 பதக்கு
2 பதக்கு – 1 தூணி
5 மரக்கால் – 1 பறை
80 பறை – 1 கரிசை
96 படி – 1 கலம்
120 படி – 1 பொதி.

NEET - க்கு எதிராக அரசு வேலையை ராஜினமா செய்த ஆசிரியை சபரிமாலா - வின் தற்போதைய நிலை

NEET - க்கு எதிராக அரசு வேலையை ராஜினமா செய்த ஆசிரியை சபரிமாலா - வின் தற்போதைய நிலை 'அனிதா' தமிழகத்தில் மறக்கமுடியாத ஒரு பெயராக மாறிவிட்டது. அரியலூரைச் சேர்ந்த அனிதா 12-ம் வகுப்பில் 1176 மதிப்பெண் பெற்று, மருத்துவராகிவிடுவோம் எனும் கனவில் இருந்தார். ஆனால், இந்தக் கல்வியாண்டில் நுழைக்கப்பட்ட நீட் தேர்வு அவரின் கனவைக் கலைத்தெறிந்தது. நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை தனது போராட்டத்தைத் தொடர்ந்தார் அனிதா. ஆனால், ஏதோ ஒரு தருணத்தில் தனது மருத்துவராகும் லட்சியம் நிறைவேறாது என்பதை உணர்ந்திருக்கிறார். அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தன்னைத்தானே மாய்த்துக்கொன்றார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. மாணவர்கள் கல்வி நிலையங்களைப் புறக்கணித்துப் பல போராட்டங்களை நடத்தினர். அரசியல் கட்சிகளும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். ஆனால், பலரை வியப்புறச் செய்தது ஆசிரியை சபரிமாலா தனது அரசுப் பணியைத் துறந்தது. எளிய குடும்பத்தில் பிறந்த அனிதாவின் லட்சியம் தோற்றுப்போனதை மனம் தாளாமல், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில் ஆசிரியை சபரிமாலா பள்ளி வளாகத்தில் தனது ஏழு வயது மகன் ஜெய சோழனுடன் போராட்டத்தைத் தொடங்கினார். ஆனால், அரசு ஊழியர்கள் அரசுக்கு எதிராகப் போராடக் கூடாது என்று கல்வி அதிகாரிகள் வலியுறுத்த, தனது ஆசிரியர் பணியைத் தூக்கி எறிந்தார். அவரின் முடிவைக் கேட்டு, பலரும் அதிர்ச்சியடைந்தனர். அவர்களில் சிலர் இது அவசரப்பட்டு எடுத்த முடிவு என்றும் உணர்ச்சி வேகத்தில் எடுத்த முடிவு என்றும் விமர்சனம் செய்தனர். இவை நடந்து கிட்டத்தட்ட இரு மாதமாகப் போகிறது. இந்நிலையில் சபரிமாலா என்ன செய்துகொண்டிருக்கிறார் என அவரோடு பேசினோம். "ஏழை மாணவியின் லட்சியம் சிதறியதைப் பொறுக்க முடியாமல் என் எதிர்ப்பினை வெளிப்படுத்தும் விதத்தில் என் பணியை ராஜினாமா செய்தேன். சிலர் நான் அவசரப்பட்டு விட்டதாக நினைத்தனர். சில நாள்கள் கழித்து வருத்தப்படுவேன் என்றும் கூறினர். ஆனால், கிட்டத்தட்ட இரு மாதமாகிறது நான் எடுத்த முடிவை நினைத்து துளிகூட வருத்தமில்லை. சரியான முடிவு எடுத்திருப்பதாகவே நான் இப்பவும் நினைக்கிறேன். எனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி கொடுக்கச் சொன்னார்கள். அதேபோலச் செய்தேன். அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பின் அரசு தரப்பில் யாரும் பேசவில்லை. அதை நானும் எதிர்பார்க்கவும் இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களைச் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அதைப் பயன்படுத்தி, கல்வி சார்ந்த விழிப்புஉணர்வை ஏற்படுத்த முயன்று வருகிறேன். அனிதாவின் வீட்டுக்கு நான் சென்றபோது, அனிதாவுக்கான முப்பதாம் நாள் படையலுக்குத் தயார் செய்துகொண்டிருந்தனர். அந்தச் சின்னஞ்சிறிய வீட்டைப் பார்த்தும், இங்கிருந்துதானே அவ்வளவு பெரிய கனவைக் கண்டிருக்கிறாள். அதை நிறைவேற்றிக்கொள்ள நொடியும் சோர்ந்திராமல் படித்தாள். ஆனால், அத்தனையும் வீணானதே என நினைத்துப் பெரும் அழுத்தம் மனதைச் சூழ்ந்துகொண்டது. அனிதாவின் அப்பா, 'உன் முகத்துல கூட அனிதாவோட சாயல் இருக்குமா!" என்றபோது நான் மூச்சற்று நின்றேன். அவரை 'அய்யா' என்று பேசிக்கொண்டிருந்த நான், சிறிது நேரத்திலேயே என்னையுமறியாமல் 'அப்பா' என்று அழைக்க ஆரம்பித்துவிட்டேன். ஊருக்கு வந்ததும் என்னால் தூங்கவே முடியவில்லை. ஒரு நாளில் ஒரு மணிநேரம், இரண்டு மணிநேரம் தூங்கினாலே அதிகம். கல்வி சார்ந்து பயணத்தை நான் தொடர்வதற்கு என் கணவரும் முக்கியக் காரணம். என் வீட்டிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் நான் பணியாற்றிய பள்ளியிருக்கிறது. அங்கேதான் என் மகனும் படித்துவந்தான். நான் வேலையை விட்டதும் அவனை அழைத்துச்செல்ல முடியவில்லை, அதனால் பள்ளியிலிருந்து நிறுத்திக்கொண்டோம். கிட்டத்தட்ட இரண்டு மாதமாயிற்று. அதற்கு அடுத்து அவனை வேறு பள்ளியில் சேர்க்கவும் இல்லை. அவனும் தன் கல்வியைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு, போராட்டத்துடன் ஒரு பகுதியாக என்னுடன் பயணிக்கிறான். அனிதா வீட்டுக்கு அவனும் வந்தான். ஏராளமான கேள்விகளைக் கேட்கிறான். அவனுக்குக் கல்வியை என்னால் தந்துவிட முடியும் என்றாலும் அவன் வயது பிள்ளைகளோடு இணைந்து விளையாடும் வாய்ப்பைத் தர முடியாது அல்லவா... நிதானமாக முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். மகனின் டிசி வாங்க, பள்ளிக்குச் சென்றபோது என்னிடம் படித்த மாணவர்கள் அழுதுகொண்டே பேசியபோது நெகிழ்ந்துபோனேன். கல்வி என்பது எல்லோருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும். அதற்கு என்னால் இயன்ற பங்களிப்பைத் தொடர்ந்து செய்வேன்." என்றார் சபரிமாலா. ஒருவரை உயர்த்துவதில் கல்விக்கே பெரும் பங்கு இருக்கிறது. அது, பேதமில்லாமல் அனைவருக்கும் கிடைக்கும் நாள் விரைவில் வரட்டும்.

புதிய சலுகைத் திட்டங்களுடன் வோடஃபோன்!!!

புதிய சலுகைத் திட்டங்களுடன் வோடஃபோன்!!! ரிலையன்ஸ் ஜியோவுடனான தனது போட்டியை பலப்படுத்தும் விதமாக வோடஃபோன் நிறுவனம் ரூ.177 மற்றும் ரூ.496 ஆகிய இரண்டு புதிய திட்டங்களைத் தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் கடந்த ஆண்டின் இறுதியில் தொலைத் தொடர்புச் சந்தையில் நுழைந்ததிலிருந்தே பிற நிறுவனங்கள் கடுமையான வருவாய் இழப்பைச் சந்தித்துவருகின்றன. துவக்கத்தில் இலவசமாகவும் பின்னர் குறைந்த கட்டணத்திலும் சேவை வழங்கிவரும் ஜியோவில் இணையும் புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவே தங்களது வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் ஏர்டெல், வோடஃபோன், ஐடியா, ஏர்செல் உள்ளிட்ட நிறுவனங்கள் அவ்வப்போது சலுகைத் திட்டங்கள் சிலவற்றை அறிவித்துவருகின்றன. அந்த வகையில் தற்போது இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய நெட்வொர்க் நிறுவனமான வோடஃபோன் இரண்டு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.177 திட்டத்தில் புதிய வோடஃபோன் வாடிக்கையாளர்கள் 28 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் 1 ஜி.பி. அளவிலான டேட்டாவைப் பெறலாம். ரூ.496 கட்டணத்திலான மற்றொரு திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது முதல் ரீசார்ஜில் 84 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு, இலவச ரோமிங் வசதி மற்றும் தினசரி 1 ஜி.பி. அளவிலான டேட்டாவைப் பெற்று மகிழலாம். இச்சலுகைகள் புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல் பிற நெட்வொர்க்கிலிருந்து வோடஃபோனுக்கு மாறுபவர்களுக்கும் பொருந்தும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.Vodafone has launched two new plans for prepaid customers seeking 1GB daily data allocation and free calls. While one plan is aimed at those looking for a long-term recharge, the other has validity of 28 days only. Vodafone said in a media statement that the plans are available for existing customers as well as MNP users. These new plans have been launched a week after Reliance Jio updated its tariff plans to raise the prices of popular prepaid plans and reducing the validities of postpaid plans.The new Vodafone plan with 1GB data per day and 84-day validity is priced at Rs. 496 and comes with unlimited local and STD calls across any network. In addition, buyers will get free incoming and outgoing calls on roaming with the Vodafone Rs. 496 plan. The company says there is no daily or weekly cap on how many minutes a user can make the calls. This plan competes directly with Jio's Rs. 459 recharge pack, which has the same benefits but also comes with free SMSes and access to its own apps.Similarly, the Rs. 177 Vodafone plan comes with 28-day validity, 1GB data per day, and unlimited calls anywhere in the country across networks; all calls remain free here as well. However, the user will not get the free incoming and outgoing roaming call facility with this plan. There is no Jio plan with 28-day validity and 1GB data per day.Alok Verma, Business Head, Delhi & NCR, Vodafone India, said, "We are pleased to extend world class Vodafone services with a basket of offerings to mobile subscribers in Delhi NCR. The Rs 177 & Rs 496 First Recharges are very attractive offers for pre-paid customers wanting to switch over to Vodafone SuperNet."The new Vodafone plans come just a day after the operator launched a Rs. 69 prepaid pack with unlimited local and STD calls to all operators and 500MB data, with 7-day validity.

Vivek (tamil Lyricist)

Vivek (tamil Lyricist) Biography Vivek is a budding lyricist associated with Tamil cinema at present. He made his film debut in 2015 and within one year or so he has given some wonderful songs for Tamil cinema. 36 Vayadhinile (2015), Irudhi Suttru (2016), Kathakali (2016) and Jil Jung Juk (2016) are his major works up-to-date. Most recently all songs of the movie, Irudhi Suttru became instant chartbusters, and the most memorable song of the music album is Ey Sandakaara sung by Dhee. The songs Happy, Pogiren and Vaadi Raasathi from 36 Vayadhinile brought him to spotlight. Aranmanai 2, Maalai Nerathu Mayakkam, 144, Oru Naal Koothu etc are other noted works. Vivek hails from Chidambaram. He was born in the year 1985. Both his parents are lawyers. He completed Engineering and LLB course. He is a lawyer by profession though he doesn't get enough time to concentrate on to that profession right now. He has been inspired a lot by the poems of Vairamuthu which prompted him to start writing. He often uses words for lyrics quite usage in his native place Chidambaram. Tamil has never been his popular subject since his school days. It was his mother who introduced him to the poems of Vairamuthu to develop his language skills and to prepare for Tamil speech competitions. Though he has read a lot of Vairamuthu works, Thanneer Desam is the single book he read completely. Once he met the poet and he encouraged Vivek seeing his interest in literature. Later Vivek sent one poem – dedicated to mother, to the renowned poet, which was well appreciated by Vairamuthu. His first break to films happened in 2015, where he got opportunity to pen lyrics for two songs composed by Santhosh Narayanan. Thus he penned lyrics for the songs - Poo Avizhum Pozhudhil and Yaar for the film, Enakkul Oruvan. It was followed by the melodious songs of 36 Vayadhinile. Since then he has been directors and musicians' popular choice as a lyricist. Vivek wants to explore different subjects, not just love songs. Lyricist Vivek has penned a bonus song for Thalapathy Vijay's magician character in Mersal. After watching the rushes, both AR Rahman and Vivek worked on a song, which will be used as the background track in the film. "I hav penned a Short Song as part of d background score for the Magician.Tried something unique. Have applied d concept of Magic in 2 lyrics (sic)", posted lyricist Vivek on Twitter. Meanwhile, the final verdict on the title controversy case of Mersal is expected to be out today. The makers of the film will be applying for censors this week and they are confident that the ongoing Kollywood strike will soon come to an end. Directed by Atlee, the film's producers Sri Thenandal Films is planning to release the film for this Diwali.

மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நவ.25 கடைசி நாள்

மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நவ.25 கடைசி நாள் | தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது தொடர்பாக முடிவு எடுப்பதில் தமிழக அரசு மவுனம் காத்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நவம்பர் 25ம் தேதி கடைசி நாள் ஆகும். குமரி மாவட்டத்தை சேர்ந்த குமரி மகாசபா செயலாளர் ஜெயக்குமார் தாமஸ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் 'கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்குவதற்காக மத்திய அரசால் 1986ல் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்பட்டன. உண்டு உறைவிட பள்ளியான இப்பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை கல்வி கற்பிக்கப்படுகிறது. இப்பள்ளிகளில் மாநில மொழி, ஆங்கிலம், இந்தி கற்பிக்கப்படுகிறது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனவே, தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார். இம்மனு விசாரணையின்போது, நவோதயா பள்ளிகள் தரப்பில் 'நவோதயா பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் தமிழ் விருப்பப் பாடமாக உள்ளது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் 6 முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் முதன்மைப் பாடமாகவும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் விருப்பப் பாடமாகவும் கற்பிக்கப்படும்' என தெரிவித்திருந்தனர். வழக்கு விசாரணையின் இறுதியில் நீதிபதிகள் வழங்கிய உத்தரவில் 'நவோதயா பள்ளிகள் வந்தால் இந்தி திணிக்கப்படும் என கருதப்பட்டதால், தமிழகத்தில் இப்பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. தற்போது 6 முதல் 10ம் வகுப்பு வரை தமிழில்தான் பாடங்கள் கற்பிக்கப்படும் என்றும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் தமிழ் விருப்பப் பாடமாக இருக்கும் என்றும் நவோதயா வித்யாலயா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவதற்கு இடம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு 8 வாரத்தில் உரிய முடிவெடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர். இதற்கிடையே நாடு முழுவதும் 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களிலும் சேர்த்து 660 நவோதயா பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பித்தல் நடைபெற்று வருகிறது. இதற்கு நவம்பர் மாதம் 25ம் தேதி கடைசி நாள் ஆகும். இன்னும் ஒரு மாத காலம் கூட இல்லாத நிலையில் அவ்வாறு விண்ணப்பித்த மாணவர்களில் இருந்து மட்டுமே 6 ம் வகுப்பு தகுதியானவர்களை தேர்வு செய்ய பிப்ரவரி மாதம் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. ஜவஹர் நவோதயா வித்யாலயா தரப்பில் இது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்ட நிலையில் இவ்விஷயத்தில் தமிழக அரசு மவுனமாக இருந்து வருவதால் பெற்றோர் மத்தியில் குழப்பமான நிலை உள்ளது. இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த குமரி மகாசபா அமைப்பின் தலைவர் ராவின்சன் கூறுகையில், 'குமரி மகா சபா சார்பில் தமிழகத்தில் நவோதயா வித்யாலயா தொடங்க மதுரை உயர்நீதிமன்ற கிளையிடம் இருந்து உத்தரவை பெற்றுள்ளோம். தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கையை நடத்த இயலாமல் போய்விடும். மாவட்டம் தோறும் மாணவர் சேர்க்கைக்கு வசதிகளை ஏற்படுத்தி தற்காலிக கட்டிட வசதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ்களை அழிக்கும் வசதி அறிமுகம்

வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ்களை அழிக்கும் வசதி அறிமுகம் | வாட்ஸ்அப் செயலியில் நீண்ட காலமாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் போன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் ரீகால் அல்லது அனுப்பிய மெசேஜ்களை அழிக்கக் கோரும் அம்சம் (Delete for Everyone) வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் சார்ந்த தகவல்களை வழங்கி வரும் WaBetaInfo வெளியிட்டுள்ள தகவல்களில் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் போன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் மற்றும் விண்டோஸ் போன் வாடிக்கையாளர்கள் இனி வாட்ஸ்அப் செலியில் தவறாக அனுப்பிய மெசேஜ்களை அழிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கும் பணிகள் படிப்படியாக நடைபெற்று வருவதால், இந்த அம்சம் சீராக வேலை செய்ய மெசேஜ் அனுப்புபவர் மற்றும் அதனை பெறுவோரும் அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த வேண்டும் என கூறப்படுகிறது. புதிய அம்சம் ஜிஃப், எழுத்துக்கள், புகைப்படங்கள், வாய்ஸ் மெசேஜ், லொகேஷன், காண்டாக்ட் கார்டு, கோட்டெட் மெசேஜ் மற்றும் ஸ்டேட்டஸ் ரிப்ளை உள்ளிட்டவற்றிற்கு வேலை செய்யும் என்றும் கூறப்படுகிறது. இந்த அம்சம் எவ்வாறு வேலை செய்கிறது? வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜை அழிக்கும் போது, வாட்ஸ்அப் சார்பில் ஃபேக் காப்பி மெசேஜ் நீங்கள் அனுப்பியவருக்கு அனுப்பப்படும். மறுபுறம் நீங்கள் மெசேஜ் அனுப்பியவருக்கு ஃபேக் காப்பி சென்றடைந்ததும், அவரது ஸ்மார்ட்போனில் நோட்டிபிகேஷன் சாட் ஹிஸ்ட்ரி உள்ளிட்டவை சேமிக்கப்படாது. எனினும் குறிப்பிட்ட மெசேஜ் ஐடி டேட்டாபேசில் இருப்பதை வாட்ஸ்அப் முதலில் உறுதி செய்யும். அதன் பின், குறிப்பிட்ட மெசேஜ் அழிக்கப்பட்டு விடும் என கூறப்படுகிறது. வாட்ஸ்அப் புதிய அம்சம் கீழ் வரும் நிலைகளில் வேலை செய்யாது: - கோட்டெட் மெசேஜில் உள்ள மெசேஜ்களை திரும்ப பெற முடியாது. - பிராட்காஸ்ட் பட்டியலில் அனுப்பப்பட்ட மெசேஜ்களையும் அழிக்க முடியாது. - மெசேஜ் அனுப்பியது முதல் 7 நிமிடங்கள் வரை மட்டுமே இந்த அம்சத்தை பயன்படுத்த முடியும், 7 நிமிடம் கழித்து மெசேஜை திரும்ப பெறவோ, அழிக்கவோ முடியாது. - இந்த அம்சம் வாட்ஸ்அப் அப்டேட் செய்யப்பட்ட பதிப்பை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே வேலை செய்யும். இதனால் மெசேஜ் அனுப்பியவர் மற்றும் அதனை பெறுபவரும் செயலியை புதிய அப்டேட் செய்திருக்க வேண்டும். இந்த அம்சம் சிம்பயான் இயங்குதளம் கொண்டு இயங்கும் சாதனங்களில் வேலை செய்யாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் 5ஜி சேவை பெறும் ஜியோ!

இந்தியாவின் முதல் 5ஜி சேவை பெறும் ஜியோ! | 5ஜி நெட்வொர்க் வசதியை கையகப்படுத்தும் முயற்சியில் ஜியோ ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ தொலைத்தொடர்பு சேவை, பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்கி, வாடிக்கையாளர்களை அள்ளியது. பின்னர் படிப்படியாக சேவைக் கட்டணத்தை நிர்ணயித்தது. இதன் அதிவேகம் இணையச் சேவைக்காக ஏராளமானோர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். தற்போது 4ஜி நெட்வொர்க் சேவையை பயன்படுத்தி வரும் ஜியோ நிறுவனம், விரைவில் 5ஜி நெட்வொர்க்காக அப்டேட் செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்காக இந்தியாவில் 5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட உடனே, அதனை கையகப்படுத்தும் முயற்சியில் முகேஷ் அம்பானி ஈடுபட்டுள்ளார். இது அமல்படுத்தப்படும் போது, ஜியோவின் 4ஜி சேவை, தானாக 5ஜி ஆக மாறும். ஆனால் அதற்காக 5ஜி நெட்வொர்க் வசதி கொண்ட ஸ்மார்ட்போனிற்கு மாற வேண்டும். சமீபத்தில் குவால்கம் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவர் தனது டிவிட்டரில் 5ஜி ஸ்மார்ட்போனை பதிவிட்டுள்ளார். அதுவே உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது. இனி அனைத்து தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் 5ஜி சேவையை பெற முயற்சி எடுக்கும். ஆனால் அவர்களின் ஜியோ முந்திக் கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Tuesday, October 24, 2017

​ The Reserve Bank of India invites applications from eligible candidates for 623 posts of Assistant in various offices of the Bank.Website Link Open 18.10.2017 to 10.11.2017


The Reserve Bank of India invites applications from eligible candidates for 623 posts of Assistant in various offices of the Bank. Selection for the post will be through a country-wide competitive examination in two phases i.e. Preliminary and Main examination followed by a Language Proficiency Test (LPT). Please note that Corrigendum, if any, issued on the above advertisement, will be published only on the Bank's website www.rbi.org.in.

இது பற்றிய விவரம் வருமாறு:-

வங்கிகளின் வங்கி என அழைக்கப்படுவது ரிசர்வ் வங்கி. இந்தியாவின் தலைமை வங்கியான இதன் கிளைகள் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுகிறது. தற்போது இந்த கிளைகளில் உதவியாளர் (அசிஸ்டன்ட்) பணிக்கு 623 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் சென்னையில் 15 பணியிடங்கள் உள்ளன. அதிகபட்சமாக கான்பூர் லக்னோ கிளையில் 44 இடங்களும், புதுடெல்லியில் 47 இடங்களும், கவுகாத்தியில் 36 இடங்களும் உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-10-2017 தேதியில் 24 முதல் 28 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்து, 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி இயக்கும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தப் பணிக்கு நேர்காணல் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.450 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் ரூ.50 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 10-11-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை நகல் எடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு 25-11-2017-ந் தேதிக்குள் கிடைக்கும் படி அனுப்பி வைக்க வேண்டும்.விண்ணப்பிக்கவும், இது பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.rbi.org.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும். | DOWNLOAD

ஜியோ புதிய பிளான்களில் இந்த முறை... அதிர்ச்சி

அறிமுகம் ஆன புதிதில் அனைத்துச் சேவைகளையும் இலவசமாக அளித்து வந்தது ஜியோ. அதன் பின்னர் படிப்படியாக அனைத்திற்கும் பணம் செலுத்தும் வகையில் தனது பிளான்களை மாற்றியமைத்தது. தற்பொழுது தீபாவளிக்குப் பின்னர் மீண்டும் ஒரு முறை தனது பிளான்களை மாற்றியமைத்திருக்கிறது. தற்பொழுதுள்ள ப்ரீபெய்டு பிளான்களின் வேலிடிட்டி எவ்வளவு, டேட்டா எவ்வளவு கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.எப்பொழுதும் போலவே எல்லா பிளான்களிலும் வாய்ஸ் கால்களுக்குக் கட்டணம் கிடையாது. அதே வேளையில் ஒரு சில பிளான்களின் வேலிடிட்டி நாள்களைக் குறைத்திருக்கிறது ஜியோ. ஒரு சில பிளான்களின் வேலிடிட்டியை அதிகரித்திருக்கிறது. அதேபோல மொத்த டேட்டா அளவுகளிலும் மாறுபாடு இருக்கிறது.
19 ரூபாய் பிளான்
இதன் மூலமாக 150 எம்.பி அதிவேக டேட்டாவைப் பெறலாம். இதன் வேலிடிட்டி ஒரு நாள். 100 மெசேஜ்களை இதில் இலவசமாக அனுப்ப முடியும்.
52 ரூபாய் பிளான்
இதன் வேலிடிட்டி ஏழு நாள்கள். ஒரு நாளைக்கு 150 எம்.பி வீதம் ஏழு நாள்களுக்கு 1.05 ஜி.பி அதிவேக டேட்டாவைப் பெறலாம். 70 மெசேஜ்களை இதில் இலவசமாக அனுப்ப முடியும்.
98 ரூபாய் பிளான்
இதன் மூலமாக ஒரு நாளைக்கு 150 எம்.பி வீதம் 14 நாள்களுக்கு 2.1 ஜி.பி அதிவேக டேட்டாவைப் பெறலாம். 140 மெசேஜ்களை இதில் இலவசமாக அனுப்ப முடியும்.
149 ரூபாய் பிளான்
குறைவான அளவு டேட்டாவை அதிக நாள் உபயோகிப்பவர்கள் இந்த பிளானைத் தேர்ந்தெடுக்கலாம். இதன் மூலமாக ஒரு நாளைக்கு 150 எம்.பி வீதம் 28 நாள்களுக்கு 4.2 ஜி.பி அதிவேக டேட்டாவைப் பெற முடியும். 300 மெசேஜ்கள் வரை இதில் இலவசமாக அனுப்பிக்கொள்ளலாம்.
309 ரூபாய் பிளான்
ஏற்கெனவே இருந்த பிளான் இது. அதன் வேலிடிட்டி நாள்களை மட்டும் குறைத்திருக்கிறது ஜியோ. இதன் மூலமாக ஒரு நாளைக்கு 1 ஜி.பி வீதம் 49 நாள்களுக்கு 49 ஜி.பி அதிவேக டேட்டாவைப் பெறலாம். மற்றபடி மெசேஜ்கள் இந்த பிளானில் அன்லிமிடட்.
399 ரூபாய் பிளான்
இதன் மூலமாக ஒரு நாளைக்கு 1 ஜி.பி வீதம் 70 நாள்களுக்கு 70 ஜி.பி அதிவேக டேட்டாவைப் பெறலாம். மெசேஜ்கள் அன்லிமிடெட்.
459 ரூபாய் பிளான்
ஜியோ அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய பிளான். இதன் மூலமாக ஒரு நாளைக்கு 1 ஜி.பி வீதம் 84 நாள்களுக்கு 84 ஜி.பி அதிவேக டேட்டாவைப் பெறலாம். இதில் மெசேஜ்கள் அன்லிமிடெட். 399 ரூபாய் பிளானோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இது சிறந்த பிளானாக இருக்கும்.
509 ரூபாய் பிளான்
ஒரு நாளைக்கு அதிக டேட்டா தேவைப்படுபவர்கள் இதைத் தேர்ந்தெடுக்கலாம். இதன் மூலமாக ஒரு நாளைக்கு 2 ஜி.பி வீதம் 49 நாள்களுக்கு 98 ஜி.பி அதிவேக டேட்டாவைப் பெறலாம். மெசேஜ்கள் இதில் அன்லிமிடெட். இதற்கு முன்னர் இந்த பிளானின் வேலிடிட்டி 56 நாள்கள் அது 49 நாள்களாகக் குறைத்திருக்கிறது.
999 ரூபாய் பிளான்
இதன் வேலிடிட்டி 90 நாள்கள். இந்த பிளானில் கிடைக்கும் மொத்த அதிவேக டேட்டாவின் அளவு 60 ஜி.பி. ஒரு நாளைக்கு இவ்வளவு டேட்டா என்ற கட்டுப்பாடு இதில் கிடையாது.
1,999 ரூபாய் பிளான்
180 நாள்கள் வேலிடிட்டி கொண்ட இதன் மூலமாக 125 ஜி.பி அதிவேக டேட்டாவைப் பெறலாம்.
4,999 ரூபாய் பிளான்
இதன் மூலமாக 360 நாள்களுக்கு 350 ஜி.பி அதிவேக டேட்டாவைப் பெறலாம்.
9,999 ரூபாய் பிளான்
இருப்பதிலேயே விலை அதிகமான பிளான் இது. இதன் மூலமாக 360 நாள்களுக்கு 750 ஜி.பி அதிவேக டேட்டாவை பெறலாம்.
ஒவ்வொரு முறையும் பிளான்களின் வேலிடிட்டியையும் டேட்டா அளவை மட்டுமே மாற்றம் செய்யும் ஜியோ. அதற்கு மாறாக இந்தத் தடவை வேறொரு பெரிய மாற்றத்தையும் செய்திருக்கிறது. இதற்கு முன்னர் அதிவேக டேட்டா முடிந்தபின் இன்டர்நெட் உபயோகிக்கும் பொழுது அதன் வேகம் 128kbps ஆக இருக்கும். அதைத் தற்பொழுது 64kbps ஆக குறைந்திருக்கிறது.

வருமான உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக உயர்வு

வருமான உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக உயர்வு | மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில், ஆதி திராவிடர், மிக பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில், எம்.பி.சி., எனப்படும், மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாணவர்களுக்கு, 'கிரீமிலேயர்' என்ற, வருமான உச்சவரம்பு பயன்படுத்தப்படுகிறது. மாணவர்களின் பெற்றோர், ஆண்டுக்கு, ஆறு லட்ச ரூபாய் என, மூன்று ஆண்டுகளுக்கு மேல் பெற்றால், அவர்கள், 'கிரீமிலேயர்' வரம்பில் வருவர் என்பதால், இட ஒதுக்கீடு வழங்கப்படாது. இந்நிலையில், தற்போது பொருளாதார முன்னேற்றம், விலைவாசி உயர்வு, தனிநபர் வருமான வரம்பு அதிகரிப்பு போன்றவற்றால், 'கிரீமிலேயர்' வருமான வரம்பை அதிகரிக்க, கோரிக்கைகள் எழுந்தன. இதன்படி, ஆண்டுக்கு, ஆறு லட்ச ரூபாய் என்பது, எட்டு லட்ச ரூபாயாக, வருமான உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதல், இந்த வருமான வரம்பு அடிப்படையில், இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.