-->

Friday, September 15, 2017

தலைமைச் செயலக ஊழியர்கள் இன்று முதல் ஸ்டிரைக்

தலைமைச் செயலக ஊழியர்கள் இன்று முதல் ஸ்டிரைக் | புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ சார்பில் கடந்த 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு எடுக்கப்பட்டது.அதன்படி, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர். முன்னதாக, தலைமைச் செயலக ஊழியர்கள் நேற்று பணியின்போது கறுப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். அதேசமயம், இந்த சங்கத்தின் ஒரு பிரிவினர் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.