நர்ஸிங், பி.பார்ம்-க்கு 19-ல் கலந்தாய்வு தொடக்கம் இணையதளத்தில் அழைப்பு கடிதம்

நர்ஸிங், பி.பார்ம்-க்கு 19-ல் கலந்தாய்வு தொடக்கம் இணையதளத்தில் அழைப்பு கடிதம் | தமிழகத்தில் அரசு, தனியார் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி நர்ஸிங், பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல்), பிஎஸ்சி ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பிஎஸ்சி ரேடியோதெரபி டெக்னாலஜி, பிஎஸ்சி கார்டியோ பல்மோனரி பெர்பியூசன் டெக்னாலஜி, பி.ஆப்டம், பிஓடி ஆகிய 9 பட்டப் படிப்புகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 484 இடங்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 5,479 இடங்களும் இருக்கின்றன. இந்தப் படிப்புகளுக்கு 2017-18 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடந்தது. சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான 25,293 பேருக்கான தரவரிசைப் பட்டி யல் வெளியிடப்பட்டது. இதில் கட்-ஆப் மதிப்பெண் 199 முதல் 75 வரை உள்ள மாணவ, மாணவிகள் இடம் பெற்றுள்ளனர். கட்-ஆப் மதிப்பெண் 199 எடுத்த டி.சாமுவேல் என்ற மாணவர் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இந்நிலையில், இந்த 9 பட்டப் படிப்புகளுக்கான சிறப்பு பிரிவினர்களுக்கான கலந்தாய்வு வரும் 19-ம் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடக்கிறது. செப்.26 வரை நடைபெறும் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 20-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவ, மாணவிகள் தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) அறிவித்துள்ளது.

Comments