-->

Saturday, August 12, 2017

தற்போதைய பாடத்திட்டம் எப்படி உள்ளது? கடுமையாக சாடும் குழுத் தலைவர் ஆனந்தகிருஷ்ணன்

தற்போதைய பாடத்திட்டம் எப்படி உள்ளது? கடுமையாக சாடும் குழுத் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் | அடிப்படை அறிவே இல்லாத நிலையில் தமிழக அரசின் தற்போதைய பள்ளிப் பாடத்திட்டம் உள்ளது என்று மாநில கல்விப் பாடத்திட்டத்தின் மாற்றியமைக்கும் குழுவின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும். புதிய பாடத்திட்டத்தில் தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இன்றைய படத்திட்டம் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஏமாற்றம் தரும் வகையிலேயே உள்ளது. ஒரு பாடத்தில் கேள்வி பதில்கள் கொடுக்கப்பட்டு, இதை மட்டும் படித்தால் போதும் என்று கூறிவிட்டதால் அடிப்படை அறிவே இல்லாத வகையில் உள்ளது என்று கூறினார். தமிழகத்தில் மாநில அரசின் கல்விப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் குழுவின் தலைவராக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.ஆனந்தகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த பணி குறித்து அவர் கூறியதாவது, புதிய பாடத்திட்டக் குழுவில் பத்து உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். சென்னையில் உறுப்பினர்களிடையேயான கலந்தாய்வுக் கூட்டம் இருமுறை நடந்துள்ளது. பிறகு பொதுமக்களிடம் கருத்தறியும் கூட்டம் மதுரையில் தான் முதலில் நடத்தப்பட்டது. அடுத்ததாக கோவை, தஞ்சை, சென்னையில் நடத்தப்படுகிறது. கூட்டங்கள் முடிந்த பின்னர் அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசிடம் அளிக்கப்பட உள்ளது. பள்ளிப் பாடத்திட்டங்களில் மிகப்பெரிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. 12 ஆண்டுகள் பள்ளியில் மாணவ, மாணவியர் பயிலும் நிலையில், சமூகத்தில் ஏற்படும் அரசியல், பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப அவர்கள் தயாராவது அவசியம். பாடத்திட்டத்தை மாற்றும்போது ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். பாடத்திட்டம் தயாரிப்பதுடன், அதை செயல்படுத்துவதற்கான உள்கட்டமைப்புகளையும், தொழில்நுட்பங்களையும் பள்ளிகளில் ஏற்படுத்துவது அவசியம். மொழி, அறிவியல், கணினி என அனைத்து பாடங்களிலும் அடிப்படை அறிவை மாணவர்கள் சரியாக பெறும் வகையிலும் பாடத்திட்டத்தை அமைக்கவேண்டியுள்ளது. தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் (2018-19) 1, 6, 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதற்கான புத்தகங்கள் தயார் செய்தல், அவற்றுக்கான பயிற்சியை ஆசிரியருக்கு அளித்தல் ஆகிய பணிகளும் நடைபெறவுள்ளன. அடுத்த 12 ஆண்டுகளுக்கான தொலைநோக்கோடு இந்தப் பாடத்திட்டம் தயாரிக்கப்படும். பள்ளிப் பாடத்திட்டங்களில் பொறியியல் பாடமும் சேர்க்கப்படும் என்றார்.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.