-->

Wednesday, August 9, 2017

விரைவில் ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு: மத்திய அரசு

பான் எண், வங்கி கணக்கு, ரேசன் கார்டு ஆகியவற்றை ஆதார் எண்ணுடன் மத்திய அரசு இணைத்து வருகிறது. வருமான வரி தாக்கலுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விரைவில் வாக்காளர் அடையாள அட்டையையும் ஆதார் எண்ணுடன் இணைக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. லோக்சபாவில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்து பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், விரைவில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கப்படும். ஆதார் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருவதால் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக தேர்தல் கமிஷன் பரிசீலனை செய்து வருகிறது. கோர்ட் உத்தரவிற்கு பிறகு உரிய நேரத்தில் ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு குறித்து தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என்றார்.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.