-->

Monday, August 7, 2017

மருத்துவ படிப்பில் 85 சதவீத உள்ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தில் சாதகமாக தீர்ப்பு கிடைக்க வாய்ப்பு குறைவு

மருத்துவ படிப்பில் 85 சதவீத உள்ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தில் சாதகமாக தீர்ப்பு கிடைக்க வாய்ப்பு குறைவு சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல் | எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்க வாய்ப்பு குறைவாக உள்ளது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடும் சிபிஎஸ்இ உள்ளிட்ட மத்திய பாடத் திட்டங் களில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீத ஒதுக்கீடும் வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, 85 சதவீத உள்ஒதுக்கீடு அரசாணை செல்லாது என்று தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து உயர் நீதிமன்ற அமர்வில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வும் 85 சதவீத உள்ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளித்தது. இதனால், மருத்துவ மாணவர் சேர்க்கை தள்ளிக்கொண்டே போகிறது. உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த 4-ம் தேதி தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அது விரைவில் விசாரணைக்கு வரஉள்ளது. மேல்முறையீட்டிலும் தமிழக அரசுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது.  READ MORE

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.