ஐஏஎஸ் அதிகாரிகள் 4 பேர் இடமாற்றம்

ஐஏஎஸ் அதிகாரிகள் 4 பேர் இடமாற்றம் | பொதுத்துறை கூடுதல் செயலர் அனு ஜார்ஜ் உள்ளிட்ட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக தலை மைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: பொதுத்துறை (மரபு) கூடுதல் செயலராக இருந்த அனு ஜார்ஜ், தமிழ்நாடு சர்க்கரைக் கழக மேலாண் இயக்குநராக நிய மிக்கப்பட்டுள்ளார். பொதுத்துறை (மரபு) கூடுதல் செயலராக கல்வி விடுமுறையில் இருந்து பணிக்கு திரும்பியுள்ள சி.சமயமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய் தித்துறை செயலர் ஆர்.வெங்க டேசன் கூடுதலாக கவனித்து வந்த தமிழ்நாடு கனிம நிறுவன மேலாண் இயக்குநர் பதவி, தமிழ்நாடு சர்க்கரைக் கழக மேலாண் இயக்குநராக இருந்த மகேசன் காசிராஜனிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments