ஆகஸ்ட் 22-ம் தேதி அடையாள வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் சம்பளம் கிடையாது; விடுப்பு எடுக்க அனுமதியில்லை தலைமைச் செயலாளர் கிரிஜா அறிவுறுத்தல்

ஆகஸ்ட் 22-ம் தேதி அடையாள வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் சம்பளம் கிடையாது; விடுப்பு எடுக்க அனுமதியில்லை தலைமைச் செயலாளர் கிரிஜா அறிவுறுத்தல் | அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகஸ்ட் 22-ம் தேதி அடையாள வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், ஒருநாள் சம்பளம் ரத்து செய்யப் படும். அன்றைய தினம் விடுப்பு எடுப்பது அனுமதிக்கப்படாது என்று தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது, 7-வது ஊதியக் குழு பரிந்துரை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின் றனர். ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில், கடந்த 5-ம் தேதி கோட்டை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. தொடர்ந்து, 18-ம் தேதி உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் மற்றும் ஆகஸ்ட் 22-ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன் பின் னரும் கோரிக்கைகள் நிறை வேற்றப்படாவிட்டால், செப்டம்பர் 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் என்றும் அறிவிக் கப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசுத் துறைகளின் செயலர்களுக்கு தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று முன்தினம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்கள் சார்ந்த அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக் கப்படாத சங்கங்கள் சார்பில் ஆகஸ்ட் 22-ம் தேதி ஒருநாள் அடை யாள வேலை நிறுத்தம் அறிவிக் கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி, வேலை நிறுத்தம் அல்லது வேலை நிறுத்த அறிவிப்பு, அரசு பணியாளர்கள் பங்கேற்கும் எந்த ஒரு போராட்டத் தாலும் அரசு அலுவலகங்களின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படக் கூடாது. அது, தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நடத்தை விதிகளை மீறுவதாகும். எனவே, அரசு ஊழியர்கள் யாரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது. பங்கேற்றால் அவர்கள் மீது நடத்தை விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்த வேண்டும். வரும் 22-ம் தேதியோ, வேறு நாட்களிலோ அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்ந்த சங்கங்களால் நடத்தப்படும் போராட்டத்தில் பங்கேற்று அலுவலகப் பணிகளை மேற்கொள்ளாதவர்களுக்கு அன்று 'ஆப்சென்ட்' போடப்படும். 'பணியும் இல்லை- ஊதியமும் இல்லை' என்ற அடிப்படையில், ஊதியம் வழங்கப்படாது. அதே நேரம், பகுதி நேரம், தினக்கூலி, தொகுப்பூதியம் பெறுவோர் இதில் பங்கேற்றால் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். போராட்டம் நடக்கும் நாளில் மருத்துவ விடுப்பு தவிர, தற்செயல் விடுப்பு உள்ளிட்ட வேறு எந்த விடுப்பும் அனுமதிக்கப்படாது என்பதையும் ஊழியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். துறை செயலர்கள் தங்கள் துறைகளில் அரசு அலுவலர் நடத்தை விதிகள் மீறப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். 22-ம் தேதி காலை 10.15 மணிக்கு முந்தைய அலுவலக வருகை நிலவரத்தை அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அலுவலக ஊழியர்களின் வருகை தொடர்பான விவரங்களை அளிக்கும் மாதிரி பட்டி யலும் அந்த கடிதத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது.

Comments