தமிழகத்தில் ரூ.200 நோட்டுகள் 28-ந்தேதி முதல் வினியோகம் ஏ.டி.எம்-ல் கிடைப்பது தாமதம் ஆகும் என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தகவல்

தமிழகத்தில் ரூ.200 நோட்டுகள் 28-ந்தேதி முதல் வினியோகம் ஏ.டி.எம்-ல் கிடைப்பது தாமதம் ஆகும் என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தகவல் | புதிய ரூ.200 நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கிக்கு வந்ததுள்ளது என்றும் வருகிற 28-ந்தேதி(திங்கட் கிழமை) முதல் வங்கிகள் மூலம் தமிழகத்தில் வினியோகம் செய்யப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ரூ.2,000 நோட்டை சிரமம் இன்றி பொதுமக்கள் மாற்றுவதற்காக புதிய ரூ.200 நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி அச்சிட்டு உள்ளது. இந்த நோட்டுகள் டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் நேற்று முதல் புழக்கத்துக்கு விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரூ.200 நோட்டு எப்போது புழக்கத்துக்கு வரும்? என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:- 28-ந்தேதி முதல் வினியோகம் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு புதிய ரூ.200 நோட்டுகள் கன்டெய்னர்கள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை காரணமாக வங்கிகளுக்கு பிரித்து கொடுக்க முடியவில்லை. வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் அனைத்து வங்கிகளுக்கும் பிரித்து கொடுக்க இருக்கிறோம். பொதுமக்களுக்கு அவரவருடைய வங்கி கிளைகளில் பணம் எடுக்க செல்லும்போது வழங்கப்படும். வங்கி கணக்குகளில் இருந்து மட்டுமே பெற முடியும். தனியாக யாரும் சென்று வாங்க முடியாது. மேலும், ஏ.டி.எம்.-ல் புதிய ரூ.200 நோட்டுகள் கிடைப்பதற்கு சற்று காலதாமதம் ஆகும். ஏனென்றால் ஏ.டி.எம். எந்திரத்தில் இதற்கென சில மாற்றங்களை செய்யவேண்டும். அந்த பணிகள் நிறைவடைந்த பிறகு, ஒவ்வொரு வங்கியின் ஏ.டி.எம்.களிலும் புதிய ரூ.200 நோட்டுகள் கிடைக்கும். தேவையை பொறுத்து மீண்டும் புதிய ரூ.200 நோட்டுகள் வரும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Comments