அனைத்து மாநகரப் பேருந்துகளிலும் கருவிகள் மூலம் டிக்கெட் விநியோகம் 20-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்

அனைத்து மாநகரப் பேருந்துகளிலும் கருவிகள் மூலம் டிக்கெட் விநியோகம் 20-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் | சென்னையில் அனைத்து மாநகரப் பேருந்துகளிலும் வரும் 20-ம் தேதி முதல் கருவிகள் மூலம் டிக்கெட் வழங்கப்படவுள்ளது. அரசு போக்குவரத்துத் துறையில் நடந்துநர்கள், கருவிகள் மூலம் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கும் முறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது. முதல் கட்டமாக மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்கு வரத்துக் கழகத்தில் அமல்படுத்தப் பட்டது. பின்னர், அனைத்து அரசு போக்குவரத்துக் கழகத்தி லும் இத்திட்டம் விரிவுப்படுத்தப் படுமென தமிழக அரசு அறிவித்தது. நடத்துநர்கள் கருவிகள் மூலம் டிக்கெட் வழங்கும்போது, ஒவ் வொரு பேருந்துகளிலும் வழங்கப் பட்ட டிக்கெட் விவரங்கள், வசூல் தொகை, பணிமனைகள், மண்டல அலுவலகங்கள் மற்றும் கோட்ட அலுவலகங்களுக்கு உட னடியாகத் தெரியவரும். மேலும், பயணச்சீட்டுகள் வழங்கும்போதே உடனடியாக ஆன்-லைனில் பேருந் தில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை, பயணிகள் மேற் கொள்ளும் பயணத்தின் தூரம், பேருந்துகள் உள்ள இடம் மற்றும் பேருந்துகள் சரியான நேரத்தில் இயக்கப்படுகிறதா? போன்ற விவரங்களைப் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் உடனடி யாக அறிந்துகொள்ள முடியும். இருப்பினும், போதிய அளவில் புதிய கருவிகள் வாங்காதது, பழு தான கருவிகளைச் சரிசெய்யாதது உள்ளிட்ட காரணங்களால் சுமார் 80 சதவீத கருவிகள் தற்போது பயன் பாட்டில் இல்லாமல் இருக்கின்றன. இதனால், நடத்துநர்கள் பழைய முறைப்படி 'டிக்கெட்களை துளையிட்டு' வழங்கி வருகின்றனர். இந்நிலையில், போக்குவரத்துத் துறைச் செயலர் டேவிதார் தலை மையில் போக்குவரத்துக் கழகங் களுக்கான மின்னணு பயணச்சீட்டுக் கருவி பயன்பாடு குறித்து தலைமைச் செயலகத்தில் நேற்று ஆய்வு செய்யப்பட்டது. இதில், மின்னணு பயணச்சீட்டுத் திட்டம் செயல்படுத்தும் நிறுவனங்களான அனலாஜிக்ஸ்டெக் இந்திய நிறு வனம் மற்றும் இன்ஜெனரி டெக்னாலஜிஸ் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர். இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ''கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு வழங்கப்பட்ட கருவிகள் தற்போது பழுதாகி விட்டன. எனவே, புதிய கருவிகள் வாங்குவது தொடர் பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளிடம் பேசினோம். மின்னணு பயணச்சீட்டுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் முழு வீச்சில் மீண்டும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. வரும் 20-ம் தேதி முதல் சென்னையில் அனைத்து மாநகர பேருந்துகளிலும் மின்னணு கருவிகள் மூலம் டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

Comments