-->

Thursday, July 13, 2017

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது குறித்து முடிவெடுக்க குழு அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தை உயர்த்த குழு செங்கோட்டையன் அறிவிப்பு | பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது குறித்து முடிவெடுக்க குழு அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய திமுக உறுப்பினர் க.பொன்முடி, ''கடந்த 2012-ல் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கு முதலில் ரூ.5 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டது. தற்போது ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது. தங்களுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் கொடுத்தால்கூட போதும். ஆனால், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள னர். இதனை வலியுறுத்தி சென்னையில் இன்று (ஜூலை 12) போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்'என்றார். அவருக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ''ஊதிய உயர்வு உள்ளிட்ட பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்க குழு அமைத்து தீர்வு காணப்படும்'' என்றார்.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.