மெரினா கடற்கரையில் இருந்து ஜெ. சமாதியை வேறு இடத்துக்கு மாற்ற வழக்கு தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மெரினா கடற்கரையில் இருந்து ஜெ. சமாதியை வேறு இடத்துக்கு மாற்ற வழக்கு தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | சென்னை மெரினா கடற்கரையில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியை வேறு இடத்துக்கு மாற்றவும், மெரினாவில் மணிமண்டபம் கட்ட தடை விதிக்கவும் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர் பாக தமிழக அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.துரைசாமி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு அடக்கம் செய்ய மாநகராட்சி யிடம் உரிய அனுமதி பெறப்படவில்லை. மேலும், கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மைச் சட்டத்தின்படி, கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் எவ்வித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளக்கூடாது. உச்ச நீதிமன்றமும் பல தீர்ப்புகளில் இதை உறுதிசெய்துள்ளது. ஆனால், இந்த விதி களுக்குப் புறம்பாக, ஜெய லலிதா உடல் அடக்கம் செய் யப்பட்ட இடத்தில் அரசு செலவில் மணி மண்டபம் கட்டப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சொத் துக் குவிப்பு வழக்கில், முன் னாள் முதல்வர் ஜெயலலி தாவை குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது. உச்ச நீதிமன்றத் தால், குற்றவாளி என தண்டிக்கப்பட்ட வருக்கு அரசு செலவில் மணி மண்டபம் கட்டுவது சட்டவிரோதமானது. எனவே, மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட தடை விதிக்க வேண்டும். முறையான அனுமதி பெறாமல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அவரது உடலைத் தோண்டியெடுத்து சமாதியை வேறு இடத்துக்கு மாற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர், தமிழ் வளர்ச்சி, கலை பண்பாட்டுத் துறை, சென்னை மாநகராட்சி, மத்திய சுற்றுச்சூழல் துறை, கடலோர மேலாண்மை ஆணையம் ஆகஸ்ட் 18-க்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர். அதுவரை மெரினாவில் எந்தவொரு கட்டுமானப் பணி களும் மேற்கொள்ளக் கூடாது என்று தடை விதிக்குமாறும் மனுதாரர் தரப்பில் வலியுறுத் தப்பட்டது. அந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை.

Comments