அடுத்த ஓராண்டுக்குள் மேலும் 900 அரசு சேவைகளை இணையதளத்தில் பெறலாம் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் அறிவிப்பு


அடுத்த ஓராண்டுக்குள் மேலும் 900 அரசு சேவைகளை இணையதளத்தில் பெறலாம் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் அறிவிப்பு | ஓராண்டுக்குள் அரசு வழங்கும் 900-க்கு மேற்பட்ட சேவைகளை இணையதளம் மூலம் பொதுமக்கள் பெறலாம் என தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் டி.கே. ராமச்சந்திரன் தெரிவித்தார். தென்னிந்திய வர்த்தகம் மற்றும் தொழிலக சபை சார்பில் தகவல் தொழில்நுட்பத் துறையில் தற்கால போக்கு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் டி.கே. ராமச்சந்திரன், நாஸ்காம் தலைவர் ஆர். சந்திரசேகர், காக்னிஸன்ட் நிறுவன செயல் துணைத் தலைவர் ஆர். சந்திரசேகரன், போலாரிஸ் நிறுவன முதன்மை செயல்பாட்டு அதிகாரி ரமா சிவராமன், சென்னை ஐஐடி பேராசிரியர் பலராமன் ரவீந்திரன் ஆகியோர் கருத்துரையாற்றினர். அப்போது டி.கே. ராமச்சந்திரன் பேசியது: ஐடி துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. பல பெரிய ஐடி நிறுவனங்கள் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றன. ஐடி நிறுவனங்களுக்கு அரசு சலுகைகளை அளித்துள்ளது. ஐடி துறையில் வளர்ச்சி இருந்தாலும், நாட்டில் பல இடங்களில் வேகமான இணையதளம் இல்லை. எனவே மின்சார வடங்கள் வழியாக ஆப்டிக் பைபர் தொழில்நுட்பத்தில் கிராமங்களுக்கு இணையதள வசதி தரும் பாரத் நெட் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. செட்-டாப் பாக்ஸ் வழியே... அதேபோல அரசு கேபிள் நிறு வனம் மூலம் செட்-டாப் பாக்ஸ் வழியே இணையதள வசதி வழங் கும் தமிழ் நெட் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 1 கோடி அரசு கேபிள் வாடிக்கையாளர்களுக்கு இணையதள வசதி கிடைக்கும். தற்போது இணையதளம் மூலம் 140 சேவைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் 300 சேவைகளை வழங்குவதற்கான பணிகள் நடக்கின்றன. அதே வேளையில் 609 சேவைகளை இணையதளத்தில் வழங்க பல் வேறு துறைகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் நாஸ்காம் தலைவர் ஆர். சந்திரசேகர் பேசும்போது, இந்திய ஐடி துறையின் வளர்ச்சி பிற நாடுகளின் ஐடி துறை வளர்ச்சியை விட இரு மடங்காக உள்ளது. தானியங்கி தொழில்நுட்பங்களால் ஐடி வேலைவாய்ப்பு குறைகிறது என்பது உண்மைதான். அதே வேளையில் ஐடி துறையுடன் தொடர்புடைய பிற துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கிறது. சைபர் கிரைம் தடுப்பு துறையிலும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றார். இணையதளம் மூலம் 140 சேவைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் 300 சேவைகளை வழங்குவதற்கான பணிகள் நடக்கின்றன.

Comments