ரூ.22 கோடி செலவில் தமிழகம் முழுவதும் 750 இடங்களில் பிஎஸ்என்எல் ‘வைஃபை ஹாட் ஸ்பாட்’ சேவை இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கத் திட்டம்

ரூ.22 கோடி செலவில் தமிழகம் முழுவதும் 750 இடங்களில் பிஎஸ்என்எல் 'வைஃபை ஹாட் ஸ்பாட்' சேவை இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கத் திட்டம் | தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்குப் போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, அனைத்துத் தரப்பு மக்களும் இணையதள வசதியைப் பயன்படுத்தும் நோக்கில் பிஎஸ்என்எல் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 750 இடங்களில் 'வைஃபை ஹாட் ஸ்பாட்' அமைக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, பிஎஸ்என்எல் நிறுவன தமிழ்நாடு சர்க்கிள் முதன்மை பொது மேலாளர் (வளர்ச்சி) பி.வி.கருணாநிதி 'தி இந்து'விடம் கூறியதாவது: தொலைபேசி சேவையை வழங்கும் நிறுவனங்களில் முன் னோடி நிறுவனமாக பிஎஸ்என்எல் நிறுவனம் திகழ்கிறது. தமிழகம் முழுவதும் 11 லட்சம் தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர் களும், 5 லட்சம் பிராட்பேன்ட் வாடிக்கையாளர்களும் உள்ளனர். பொதுமக்கள் இணையதள சேவையைப் பயன்படுத்தி மின்கட்டணம், தொலைபேசிக் கட்டணம், வீட்டு வரி செலுத்துதல், பேருந்து, ரயில், விமானம் டிக்கெட் முன்பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை வீட்டில் இருந்தபடியே செய்கின்றனர். இதைத் தவிர, பல்வேறு தேவைகளுக்காகவும் இணையதள சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தற்போது இணையதள சேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது நாளொன்றுக்கு 100 டெரா பைட் அளவுக்கு டேட்டா டிராபிக் உள்ளது. இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக பொது இடங்களில் 'வைஃபை ஹாட் ஸ்பாட்' சேவையை அறிமுகப்படுத்தி யுள்ளோம். குறிப்பாக, பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான பூங்கா, மருத்துவமனை, பேருந்து, ரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங் களில் இவை அமைக்கப்பட்டு வரு கின்றன. ரூ.22 கோடியில் தமிழகம் முழுவதும் 750 இடங்களில் இந்த 'வைஃபை ஹாட் ஸ்பாட்'கள் அமைக்கப்பட உள்ளன. இதுவரை 203 'வைஃபை ஹாட் ஸ்பாட்'கள் அமைக்கப்பட்டுள்ளன. எஞ்சி யவை இந்த ஆண்டு இறுதிக்குள் அமைக்கப்பட்டு விடும். எந்த நிறுவனத்தின் நெட்வொர்க் சேவையைப் பயன்படுத்தி வருபவர்களும் மேற்கண்ட இடங்களுக்குச் சென்று 15 நிமிடம் வரை இணையதள வசதியை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். மேற்கொண்டு பயன்படுத்த 'இ-கூப்பன்' மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். வெளிநாடுகளுக்குச் செல்பவர் கள் கூட இந்தக் கூப்பனை ரீசார்ஜ் செய்துகொண்டு அங்குள்ள 'வைஃபை ஹாட் ஸ்பாட்' சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்மூலம் குறைந்த கட்டணத்தில் இணைய தள சேவையைப் பெற முடியும். இவ்வாறு கருணாநிதி கூறினார்.

Comments