-->

Saturday, July 8, 2017

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 10-ம் தேதி முதல் விநியோகம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் 10-ம் தேதி முதல் விநியோகம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு | அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:- கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதிய அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் ஜூலை 10-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்படும். தனித்தேர்வர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை அவர்கள் தேர்வெழுதிய மையத்தில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியானதும் அவர்கள் மேற்படிப்புக்கு உடனடியாக விண்ணப்பிக்க வசதியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. தற்போது நிரந்தர சான்றிதழாக அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.