-->

Tuesday, July 11, 2017

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ‘நீட்’ தொடர்பான வழக்கு 14-ந் தேதி விசாரிக்கப்படும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை: 'நீட்' தொடர்பான வழக்கு 14-ந் தேதி விசாரிக்கப்படும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு | மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கு வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. N நாடு முழுவதும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்காக 'நீட்' என்னும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வை சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) கடந்த மே மாதம் 7-ந் தேதி நடத்தியது. இந்த தேர்வை 12 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். ஆனால் பல்வேறு மொழிகளில் வெளியான கேள்வித்தாள்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இது தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை, 'நீட்' தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது. இந்த இடைக்கால தடைக்கு எதிராக சி.பி.எஸ்.இ. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.சி.பந்த், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு, மதுரை ஐகோர்ட்டு விதித்த இடைக்கால தடையை ரத்து செய்ததோடு, 'நீட்' தேர்வின் முடிவை வெளியிட அனுமதி அளித்து ஜூன் 12-ந் தேதி உத்தரவிட்டது. அதே சமயம், மாணவர் சேர்க்கையும், கலந்தாய்வும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று அப்போது நீதிபதிகள் கூறினார்கள். இதைத்தொடர்ந்து 'நீட்' தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. N இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், மோகன் சந்தான கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.எஸ்.இ. சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங் வாதாடுகையில் கூறியதாவது:- சுப்ரீம் கோர்ட்டு 'நீட்' தேர்வு முடிவுகளை அறிவிப்பதற்கு எதிரான தடையை நீக்கியதால், முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதைத்தொடர்ந்து மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வும், மாணவர் சேர்க்கையும் நடைபெற்றாக வேண்டும். பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. எனவே இது தொடர்பாக உடனடியாக விசாரித்து தீர்ப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். N அதற்கு நீதிபதிகள் மாணவர்கள் கலந்தாய்வு ஜூலை 17-ந் தேதி தொடங்கும் என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்து இருப்பதால், இந்த வழக்கு வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விசாரிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.